Spaces:
Sleeping
Sleeping
| கடவுள் வாழ்த்து - The Praise of God | |
| அகர முதல எழுத்தெல்லாம் ஆதி | |
| பகவன் முதற்றே உலகு | |
| 'A' leads letters; the Ancient Lord | |
| Leads and lords the entire world | |
| கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் | |
| நற்றாள் தொழாஅர் எனின் | |
| That lore is vain which does not fall | |
| At His good feet who knoweth all | |
| மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் | |
| நிலமிசை நீடுவாழ் வார் | |
| Long they live on earth who gain | |
| The feet of God in florid brain | |
| வேண்டுதல் வேண்டாமை இலர்ன்அடி சேர்ந்தார்க்கு | |
| யாண்டும் இடும்பை இல | |
| Who hold His feet who likes nor loathes | |
| Are free from woes of human births | |
| இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் | |
| பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு | |
| God's praise who tell, are free from right | |
| And wrong, the twins of dreaming night | |
| பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க | |
| நெறிநின்றார் நீடுவாழ் வார் | |
| They prosper long who walk His way | |
| Who has the senses signed away | |
| தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு கல்லால் | |
| மனக்கவலை மாற்றல் அரிது | |
| His feet, whose likeness none can find, | |
| Alone can ease the anxious mind | |
| அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் | |
| பிறவாழி நீந்தல் அரிது | |
| Who swims the sea of vice is he | |
| Who clasps the feet of Virtue's sea | |
| கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் | |
| தாளை வணங்காத் தலை | |
| Like senses stale that head is vain | |
| Which bows not to Eight-Virtued Divine | |
| பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் | |
| இறைவன் அடிசேரா தார் | |
| The sea of births they alone swim | |
| Who clench His feet and cleave to Him | |
| வான் சிறப்பு - The blessing of Rain | |
| வான்நின்று உலகம் வழங்கி வருதலால் | |
| தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று | |
| The genial rain ambrosia call: | |
| The world but lasts while rain shall fall | |
| துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் | |
| துப்பாய தூஉம் மழை | |
| The rain begets the food we eat | |
| And forms a food and drink concrete | |
| விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து | |
| உள்நின்று உடற்றும் பசி | |
| Let clouds their visits stay, and dearth | |
| Distresses all the sea-girt earth | |
| ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் | |
| வாரி வளங்குன்றிக் கால் | |
| Unless the fruitful shower descend, | |
| The ploughman's sacred toil must end | |
| கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே | |
| எடுப்பதூஉம் எல்லாம் மழை | |
| Destruction it may sometimes pour, | |
| But only rain can life restore | |
| விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே | |
| பசும்புல் தலைகாண்பு அரிது | |
| No grassy blade its head will rear, | |
| If from the cloud no drop appear | |
| நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி | |
| தான்நல்கா தாகி விடின் | |
| The ocean's wealth will waste away, | |
| Except the cloud its stores repay | |
| சிறப்பொடு பூசனை செல்லாது வானம் | |
| வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு | |
| The earth, beneath a barren sky, | |
| Would offerings for the gods deny | |
| தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் | |
| வானம் வழங்கா தெனின் | |
| Were heaven above to fail below | |
| Nor alms nor penance earth would show | |
| நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் | |
| வான்இன்று அமையாது ஒழுக்கு | |
| Water is life that comes from rain | |
| Sans rain our duties go in vain | |
| -------- | |
| நீத்தார் பெருமை - The merit of Ascetics | |
| ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து | |
| வேண்டும் பனுவல் துணிவு | |
| No merit can be held so high | |
| As theirs who sense and self deny | |
| துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து | |
| இறந்தாரை எண்ணிக்கொண் டற்று | |
| To con ascetic glory here | |
| Is to count the dead upon the sphere | |
| இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் | |
| பெருமை பிறங்கிற்று உலகு | |
| No lustre can with theirs compare | |
| Who know the right and virtue wear | |
| உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் | |
| வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து | |
| With hook of firmness to restrain | |
| The senses five, is heaven to gain | |
| ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் | |
| இந்திரனே சாலுங் கரி | |
| Indra himself has cause to say | |
| How great the power ascetics' sway | |
| செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் | |
| செயற்கரிய செய்கலா தார் | |
| The small the paths of ease pursue | |
| The great achieve things rare to do | |
| சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் | |
| வகைதெரிவான் கட்டே உலகு | |
| They gain the world, who grasp and tell | |
| Of taste, sight, hearing, touch and smell | |
| நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து | |
| மறைமொழி காட்டி விடும் | |
| Full-worded men by what they say, | |
| Their greatness to the world display | |
| குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | |
| கணமேயுங் காத்தல் அரிது | |
| Their wrath, who've climb'd the mount of good, | |
| Though transient, cannot be withstood | |
| அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் | |
| செந்தண்மை பூண்டொழுக லான் | |
| With gentle mercy towards all, | |
| The sage fulfils the vitue's call | |
| --- | |
| அறன்வலியுறுத்தல் - The power of virtue | |
| சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தினுஉங்கு | |
| ஆக்கம் எவனோ உயிர்க்கு | |
| From virtue weal and wealth outflow; | |
| What greater good can mankind know? | |
| அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை | |
| மறத்தலின் ஊங்குஇல்லை கேடு | |
| Virtue enhances joy and gain; | |
| Forsaking it is fall and pain | |
| ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | |
| செல்லும்வா யெல்லாஞ் செயல் | |
| Perform good deeds as much you can | |
| Always and everywhere, o man! | |
| மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்; | |
| ஆகுல நீர பிற | |
| In spotless mind virtue is found | |
| And not in show and swelling sound | |
| அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | |
| இழுக்கா இயன்றது அறம் | |
| Four ills eschew and virtue reach, | |
| Lust, anger, envy, evil-speech | |
| அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது | |
| பொன்றுங்கால் பொன்றாத் துணை | |
| Do good enow; defer it not | |
| A deathless aid in death if sought | |
| அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை | |
| பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | |
| Litter-bearer and rider say | |
| Without a word, the fortune's way | |
| வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் | |
| வாழ்நாள் வழியடைக்குங் கல் | |
| Like stones that block rebirth and pain | |
| Are doing good and good again | |
| அறத்தான் வருவதே இன்பம்:மற் றெல்லாம் | |
| புறத்த புகழும் இல | |
| Weal flows only from virtue done | |
| The rest is rue and renown gone | |
| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு | |
| உயற்பால தோரும் பழி | |
| Worthy act is virtue done | |
| Vice is what we ought to shun | |
| ---- | |
| இல்லறவியல் - DOMESTIC VIRTUE | |
| இல்வாழ்க்கை - Married Life | |
| இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் | |
| நல்லாற்றின் நின்ற துணை | |
| The ideal householder is he | |
| Who aids the natural orders there | |
| துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் | |
| இல்வாழ்வான் என்பான் துணை | |
| His help the monk and retired share, | |
| And celebrate students are his care | |
| தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு | |
| ஐம்புலத்தாறு ஓம்பல் தலை | |
| By dutiful householder's aid | |
| God, manes, kin, self and guests are served | |
| பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை | |
| வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் | |
| Sin he shuns and food he shares | |
| His home is bright and brighter fares | |
| அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை | |
| பண்பும் பயனும் அது | |
| In grace and gain the home excels, | |
| Where love with virtue sweetly dwells | |
| அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் | |
| போஒய்ப் பெறுவது எவன் | |
| Who turns from righteous family | |
| To be a monk, what profits he? | |
| இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் | |
| முயல்வாருள் எல்லாம் தலை | |
| Of all who strive for bliss, the great | |
| Is he who leads the married state | |
| ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை | |
| நோற்பாரின் நோன்மை உடைத்து | |
| Straight in virtue, right in living | |
| Make men brighter than monks praying | |
| அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் | |
| பிறன்பழிப்பது இல்லாயின் நன்று | |
| Home-life and virtue, are the same; | |
| Which spotless monkhood too can claim | |
| வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் | |
| தெய்வத்துள் வைக்கப் படும் | |
| He is a man of divine worth | |
| Who lives in ideal home on earth | |
| வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife | |
| மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் | |
| வளத்தக்காள் வாழ்க்கைத் துணை | |
| A good housewife befits the house, | |
| Spending with thrift the mate's resource | |
| மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை | |
| எனைமாட்சித் தாயினும் இல் | |
| Bright is home when wife is chaste | |
| If not all greatness is but waste | |
| இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் | |
| இல்லவள் மாணாக் கடை | |
| What is rare when wife is good | |
| What can be there when she is bad? | |
| பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் | |
| திண்மையுண் டாகப் பெறின் | |
| What greater fortune is for men | |
| Than a constant chaste woman? | |
| தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் | |
| பெய்யெனப் பெய்யும் மழை | |
| Her spouse before God who adores, | |
| Is like rain that at request pours | |
| தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தசைசான்ற | |
| சொற்காத்துச் சோர்விலாள் பெண் | |
| The good wife guards herself from blame, | |
| She tends her spouse and brings him fame | |
| சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் | |
| நிறைகாக்குங் காப்பே தலை | |
| Of what avail are watch and ward? | |
| Their purity is women's guard | |
| பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் | |
| புத்தேளிர் வாழும் உலகு | |
| Women who win their husbands' heart | |
| Shall flourish where the gods resort | |
| புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வவார்முன் | |
| ஏறுபோல் பீடு நடை | |
| A cuckold has not the lion-like gait | |
| Before his detractors aright | |
| மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் | |
| நன்கலம் நன்மக்கட் பேறு | |
| An honest wife is home's delight | |
| And children good are jewels abright | |
| -- | |
| மக்கட்பேறு - The wealth of children | |
| பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த | |
| மக்கட்பேறு அல்ல பிற | |
| The world no higher bliss bestows | |
| Than children virtuous and wise | |
| எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் | |
| பண்புடை மக்கட் பெறின் | |
| No evil comes and no blemish; | |
| Noble sons bring all we wish | |
| தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் | |
| தம்தம் வினையான் வரும் | |
| Children are one's wealth indeed | |
| Their wealth is measured by their deed | |
| அமிர்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் | |
| சிறுகை அளாவிய கூழ் | |
| The food is more than nectar sweet | |
| In which one's children hands insert | |
| மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் | |
| சொற்கேட்டல் இன்பம் செவிக்கு | |
| Children's touch delights the body | |
| Sweet to ears are their words lovely | |
| குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் | |
| மழலைச்சொல் கேளா தவர் | |
| The flute and lute are sweet they say | |
| Deaf to baby's babble's lay! | |
| தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து | |
| முந்தி யிருப்பச் செயல் | |
| A father's duty to his son is | |
| To seat him in front of the wise | |
| தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து | |
| மன்னுயிர்க் கெல்லாம் இனிது | |
| With joy the hearts of parents swell | |
| To see their children themselves excel | |
| ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் | |
| சான்றோன் எனக்கேட்ட தாய் | |
| The mother, hearing her son's merit | |
| Delights more than when she begot | |
| மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை | |
| என்னோற்றான் கொல்எனுஞ் சொல் | |
| The son to sire this word is debt | |
| "What penance such a son begot!" | |
| ---- | |
| அன்புடைமை - Loving-kindness | |
| அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் | |
| புன்கண்நீர் பூசல் தரும் | |
| What bolt can bar true love in fact | |
| The trickling tears reveal the heart | |
| அன்பிலார் எல்லாந் தமக்குரியர்: அன்புடையார் | |
| என்பும் உரியர் பிறர்க்கு | |
| To selves belong the loveless ones; | |
| To oth'rs the loving e'en to bones | |
| அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு | |
| என்போடு இயைந்த தொடர்பு | |
| Soul is encased in frame of bone | |
| To taste the life of love alone | |
| அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும் | |
| நண்பென்னும் நாடாச் சிறப்பு | |
| Love yields aspiration and thence | |
| Friendship springs up in excellence | |
| அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து | |
| இன்புற்றார் எய்துஞ் சிறப்பு | |
| The crowning joy of home life flows | |
| From peaceful psychic love always | |
| அறத்திற்கே அன்புசார்பு யென்ப அறியார் | |
| மறத்திற்கும் அஃதே துணை | |
| "Love is virtue's friend" say know-nots | |
| It helps us against evil plots | |
| என்பி லதனை வெயில்போலக் காயுமே | |
| அன்பிலதனை அறம் | |
| Justice burns the loveless form | |
| Like solar blaze the boneless worm | |
| அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பற்கண் | |
| வற்றல் மரந்தளிர்த் தற்று | |
| Life bereft of love is gloom | |
| Can sapless tree in desert bloom? | |
| புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை | |
| அகத்துறுப்பு அன்பி லவர்க்கு | |
| Love is the heart which limbs must move, | |
| Or vain the outer parts will prove | |
| அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு | |
| என்புதோல் போர்த்த உடம்பு | |
| The seat of life is love alone; | |
| Or beings are but skin and bone! | |
| --- | |
| விருந்தோம்பல் - Hospitality | |
| இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி | |
| வேளாண்மை செய்தற் பொருட்டு | |
| Men set up home, toil and earn | |
| To tend the guests and do good turn | |
| விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா | |
| மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று | |
| To keep out guests cannot be good | |
| Albeit you eat nectar-like food | |
| வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை | |
| பருவந்து பாழ்படுதல் இன்று | |
| Who tends his guests day in and out | |
| His life in want never wears out | |
| அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து | |
| நல்விருந்து ஓம்புவான் இல் | |
| The goddess of wealth will gladly rest | |
| Where smiles welcome the worthy guest | |
| வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி | |
| மிச்சில் மிசைவான் புலம் | |
| Should his field be sown who first | |
| Feeds the guests and eats the rest? | |
| செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் | |
| நல்விருந்து வானத் தவர்க்கு | |
| Who tends a guest and looks for next | |
| Is a welcome guest in heaven's feast | |
| இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் | |
| துணைத்துணை வேள்விப் பயன் | |
| Worth of the guest of quality | |
| Is worth of hospitality | |
| பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி | |
| வேள்வி தலைப்படா தார் | |
| Who loathe guest-service one day cry: | |
| "We toil and store; but life is dry" | |
| உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா | |
| மடமை மடவார்கண் உண்டு | |
| The man of wealth is poor indeed | |
| Whose folly fails the guest to feed | |
| மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து | |
| நோக்கக் குழையும் விருந்து | |
| Anicham smelt withers: like that | |
| A wry-faced look withers the guest | |
| -- | |
| இனியவை கூறல் - Sweet words | |
| இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ் | |
| செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் | |
| The words of Seers are lovely sweet | |
| Merciful and free from deceit | |
| அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து | |
| இன்சொல் னாகப் பெறின் | |
| Sweet words from smiling lips dispense | |
| More joys than heart's beneficence | |
| முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் | |
| இன்சொ லினதே அறம் | |
| Calm face, sweet look, kind words from heart | |
| Such is the gracious virtue's part | |
| துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் | |
| இன்புறூஉம் இன்சொ லவர்க்கு | |
| Whose loving words delight each one | |
| The woe of want from them is gone | |
| பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு | |
| அணியல்ல மற்றுப் பிற | |
| To be humble and sweet words speak | |
| No other jewel do wise men seek | |
| அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை | |
| நாடி இனிய சொலின் | |
| His sins vanish, his virtues grow | |
| Whose fruitful words with sweetness flow | |
| நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று | |
| பண்பின் தலைப்பிரியாச் சொல் | |
| The fruitful courteous kindly words | |
| Lead to goodness and graceful deeds | |
| சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் | |
| இம்மையும் இன்பந் தரும் | |
| Kind words free from meanness delight | |
| This life on earth and life the next | |
| இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ | |
| வன்சொல் வழங்கு வது | |
| Who sees the sweets of sweetness here | |
| To use harsh words how can he dare? | |
| இனிய உளவாக இன்னாத கூறல் | |
| கனியிருப்பக் காய்கவர்ந் தற்று | |
| Leaving ripe fruits the raw he eats | |
| Who speaks harsh words when sweet word suits | |
| -------- | |
| செய்ந்நன்றி அறிதல் - Gratitude | |
| செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் | |
| வானகமும் ஆற்ற லரிது | |
| Unhelped in turn good help given | |
| Exceeds in worth earth and heaven | |
| காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் | |
| ஞாலத்தின் மாணப் பெரிது | |
| A help rendered in hour of need | |
| Though small is greater than the world | |
| பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் | |
| நன்மை கடலிற் பெரிது | |
| Help rendered without weighing fruits | |
| Outweighs the sea in grand effects | |
| தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் | |
| கொள்வர் பயன்தெரி வார் | |
| Help given though millet- small | |
| Knowers count its good palm- tree tall | |
| உதவி வரைத்தன்று உதவி: உதவி | |
| செயப்பட்டார் சால்பின் வரைத்து | |
| A help is not the help's measure | |
| It is gainer's worth and pleasure | |
| மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க | |
| துன்பத்துள் துப்பாயார் நட்பு | |
| Forget not friendship of the pure | |
| Forsake not timely helpers sure | |
| எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் | |
| விழுமம் துடைத்தவர் நட்பு | |
| Through sevenfold births, in memory fares | |
| The willing friend who wiped one's tears | |
| நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது | |
| அன்றே மறப்பது நன்று | |
| To forget good turns is not good | |
| Good it is over wrong not to brood | |
| கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த | |
| ஒன்றுநன்று உள்ளக் கெடும் | |
| Let deadly harms be forgotten | |
| While remembering one good-turn | |
| எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை | |
| செய்ந்நன்றி கொன்ற மகற்கு | |
| The virtue-killer may be saved | |
| Not benefit-killer who is damned | |
| -------- | |
| நடுவுநிலைமை - Equity | |
| தகுதி எனவொன்று நன்றே பகுதியால் | |
| பாற்பட்டு ஒழுகப் பெறின் | |
| Equity is supreme virtue | |
| It is to give each man his due | |
| செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி | |
| எச்சத்திற் கேமாப்பு உடைத்து | |
| Wealth of the man of equity | |
| Grows and lasts to posterity | |
| நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை | |
| அன்றே ஒழிய விடல் | |
| Though profitable, turn away | |
| From unjust gains without delay | |
| தக்கார் தகவிலர் என்பது அவரவர் | |
| எச்சத்தாற் காணப் படும் | |
| The worthy and the unworthy | |
| Are seen in their posterity | |
| கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் | |
| கோடாமை சான்றோர்க் கணி | |
| Loss and gain by cause arise; | |
| Equal mind adorns the wise | |
| கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் | |
| நடுஒரீஇ அல்ல செயின் | |
| Of perdition let him be sure | |
| Who leaves justice to sinful lure | |
| கெடுவாக வையாது உலகம் நடுவாக | |
| நன்றிக்கண் தங்கியான் தாழ்வு | |
| The just reduced to poverty | |
| Is not held down by equity | |
| சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் | |
| கோடாமை சான்றோர்க் கணி | |
| Like balance holding equal scales | |
| A well poised mind is jewel of the wise | |
| சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா | |
| உட்கோட்டம் இன்மை பெறின் | |
| Justice is upright, unbending | |
| And free from crooked word-twisting | |
| வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் | |
| பிறவும் தமபோற் செயின் | |
| A trader's trade prospers fairly | |
| When his dealings are neighbourly | |
| ---- | |
| அடக்கமுடைமை - Self-control | |
| அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை | |
| ஆரிருள் உய்த்து விடும் | |
| Self-rule leads to realms of gods | |
| Indulgence leads to gloomy hades | |
| காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் | |
| அதனினூஉங் கில்லை உயிர்க்கு | |
| No gains with self-control measure | |
| Guard with care this great treasure | |
| செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து | |
| ஆற்றின் அடங்கப் பெறின் | |
| Knowing wisdom who lives controlled | |
| Name and fame seek him untold | |
| நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் | |
| மலையினும் மாணப் பெரிது | |
| Firmly fixed in self serene | |
| The sage looks grander than mountain | |
| எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் | |
| செல்வர்க்கே செல்வந் தகைத்து | |
| Humility is good for all | |
| To the rich it adds a wealth special | |
| ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் | |
| எழுமையும் ஏமாப் புடைத்து | |
| Who senses five like tortoise hold | |
| Their joy prolongs to births sevenfold | |
| யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் | |
| சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு | |
| Rein the tongue if nothing else | |
| Or slips of tongue bring all the woes | |
| ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் | |
| நன்றாகா தாகி விடும் | |
| Even a single evil word | |
| Will turn all good results to bad | |
| தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே | |
| நாவினாற் சுட்ட வடு | |
| The fire-burnt wounds do find a cure | |
| Tongue-burnt wound rests a running sore | |
| கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி | |
| அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து | |
| Virtue seeks and peeps to see | |
| Self-controlled savant anger free | |
| -- | |
| ஒழுக்கமுடைமை - Good decorum | |
| ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் | |
| உயிரினும் ஓம்பப் படும் | |
| Decorum does one dignity | |
| More than life guard its purity | |
| பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் | |
| தேரினும் அஃதே துணை | |
| Virtues of conduct all excel; | |
| The soul aid should be guarded well | |
| ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் | |
| இழிந்த பிறப்பாய் விடும் | |
| Good conduct shows good family | |
| Low manners mark anomaly | |
| மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் | |
| பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் | |
| Readers recall forgotten lore, | |
| But conduct lost returns no more | |
| அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை | |
| ஒழுக்க மிலான்கண் உயர்வு | |
| The envious prosper but ill | |
| The ill-behaved sinks lower still | |
| ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் | |
| ஏதம் படுபாக் கறிந்து | |
| The firm from virtue falter not | |
| They know the ills of evil thought | |
| ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் | |
| எய்துவர் எய்தாப் பழி | |
| Conduct good ennobles man, | |
| Bad conduct entails disgrace mean | |
| நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் | |
| என்றும் இடும்பை தரும் | |
| Good conduct sows seeds of blessings | |
| Bad conduct endless evil brings | |
| ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய | |
| வழுக்கியும் வாயாற் சொலல் | |
| Foul words will never fall from lips | |
| Of righteous men even by slips | |
| உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் | |
| கல்லார் அறிவிலா தார் | |
| Though read much they are ignorant | |
| Whose life is not world-accordant | |
| - | |
| பிறனில் விழையாமை - Against coveting another's wife | |
| பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து | |
| அறம்பொருள் கண்டார்கண் இல் | |
| Who know the wealth and virtue's way | |
| After other's wife do not stray | |
| அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை | |
| நின்றாரின் பேதையார் இல் | |
| He is the worst law breaking boor | |
| Who haunts around his neighbour's door | |
| விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் | |
| தீமை புரிந்துஒழுகு வார் | |
| The vile are dead who evil aim | |
| And put faithful friends' wives to shame | |
| எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் | |
| தேரான் பிறனில் புகல் | |
| Their boasted greatness means nothing | |
| When to another's wife they cling | |
| எளிதுஎன இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் | |
| விளியாது நிற்கும் பழி | |
| Who trifles with another's wife | |
| His guilty stain will last for life | |
| பகைபாவம் அச்சம் பழியென நான்கும் | |
| இகவாவாம் இல்லிறப்பான் கண் | |
| Hatred, sin, fear, and shame-these four | |
| Stain adulterers ever more | |
| அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் | |
| பெண்மை நயவா தவன் | |
| He is the righteous householder | |
| His neighbour's wife who covets never | |
| பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு | |
| அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு | |
| They lead a high-souled manly life | |
| The pure who eye not another's wife | |
| நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் | |
| பிறற்குஉரியாள் தோள்தோயா தார் | |
| Good in storm bound earth is with those | |
| Who clasp not arms of another's spouse | |
| அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் | |
| பெண்மை நயவாமை நன்று | |
| Sinners breaking virtue's behest | |
| Lust not for another's wife at least | |
| பொறையுடைமை - Forgiveness | |
| அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை | |
| இகழ்வார்ப் பொறுத்தல் தலை | |
| As earth bears up with diggers too | |
| To bear revilers is prime virtue | |
| பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை | |
| மறத்தல் அதனினும் நன்று | |
| Forgive insults is a good habit | |
| Better it is to forget it | |
| இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் | |
| வன்மை மடவார்ப் பொறை | |
| Neglect the guest is dearth of dearth | |
| To bear with fools is strength of strength | |
| நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை | |
| போற்றி ஒழுகப் படும் | |
| Practice of patient quality | |
| Retains intact integrity | |
| ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் | |
| பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து | |
| Vengeance is not in esteem held | |
| Patience is praised as hidden gold | |
| ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் | |
| பொன்றுந் துணையும் புகழ் | |
| Revenge accords but one day's joy | |
| Patience carries its praise for aye | |
| திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து | |
| அறனல்ல செய்யாமை நன்று | |
| Though others cause you wanton pain | |
| Grieve not; from unjust harm refrain | |
| மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் | |
| தகுதியான் வென்று விடல் | |
| By noble forbearance vanquish | |
| The proud that have caused you anguish | |
| துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் | |
| இன்னாச்சொல் நோற்கிற் பவர் | |
| More than ascetics they are pure | |
| Who bitter tongues meekly endure | |
| உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் | |
| இன்னாச்சொல் நோற்பாரின் பின் | |
| Who fast are great to do penance | |
| Greater are they who bear offence | |
| - | |
| அழுக்காறாமை - Avoid envy | |
| ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து | |
| அழுக்காறு இல்லாத இயல்பு | |
| Deem your heart as virtuous | |
| When your nature is not jealous | |
| விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் | |
| அழுக்காற்றின் அன்மை பெறின் | |
| No excellence excels the one | |
| That by nature envies none | |
| அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் | |
| பேணாது அழுக்கறுப் பான் | |
| Who envies others' good fortune | |
| Can't prosper in virtue of his own | |
| அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் | |
| ஏதம் படுபாக்கு அறிந்து | |
| The wise through envy don't others wrong | |
| Knowing that woes from evils throng | |
| அழுக்காற உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் | |
| வழுக்கியும் கேடீன் பது | |
| Man shall be wrecked by envy's whim | |
| Even if enemies spare him | |
| கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் | |
| உண்பதூஉம் இன்றிக் கெடும் | |
| Who envies gifts shall suffer ruin | |
| Without food and clothes with his kin | |
| அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் | |
| தவ்வையைக் காட்டி விடும் | |
| Fortune deserts the envious | |
| Leaving misfortune omnious | |
| அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் | |
| தீயுழி உய்த்து விடும் | |
| Caitiff envy despoils wealth | |
| And drags one into evil path | |
| அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான் | |
| கேடும் நினைக்கப் படும் | |
| Why is envy rich, goodmen poor | |
| People with surprise think over | |
| அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் | |
| பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் | |
| The envious prosper never | |
| The envyless prosper ever | |
| -------- | |
| வெஃகாமை - Against covetousness | |
| நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் | |
| குற்றமும் ஆங்கே தரும் | |
| Who covets others' honest wealth | |
| That greed ruins his house forthwith | |
| படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் | |
| நடுவன்மை நாணுவர் பவர் | |
| Who shrink with shame from sin, refrain | |
| From coveting which brings ruin | |
| சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே | |
| மற்றின்பம் வேண்டு பவர் | |
| For spiritual bliss who long | |
| For fleeting joy commit no wrong | |
| இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற | |
| புன்மையில் காட்சி யவர் | |
| The truth-knowers of sense-control | |
| Though in want covet not at all | |
| அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் | |
| வெஃகி வெறிய செயின் | |
| What is one's subtle wisdom worth | |
| If it deals ill with all on earth | |
| அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் | |
| பொல்லாத சூழக் கெடும் | |
| Who seeks for grace on righteous path | |
| Suffers by evil covetous wealth | |
| வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் | |
| மாண்டற் கரிதாம் பயன் | |
| Shun the fruit of covetousness | |
| All its yield is inglorious | |
| அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை | |
| வேண்டும் பிறன்கைப் பொருள் | |
| Against covetousness - The mark of lasting wealth is shown | |
| By not coveting others' own | |
| அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் | |
| திறன்அறிந் தாங்கே திரு | |
| Fortune seeks the just and wise | |
| Who are free from coveting vice | |
| இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் | |
| வேண்டாமை என்னுஞ் செருக்கு | |
| Desireless, greatness conquers all; | |
| Coveting misers ruined fall | |
| புறங்கூறாமை - Against slander | |
| அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் | |
| புறங்கூறான் என்றல் இனிது | |
| Though a man from virtue strays, | |
| To keep from slander brings him praise | |
| அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே | |
| புறனழீஇப் பொய்த்து நகை | |
| Who bite behind, and before smile | |
| Are worse than open traitors vile | |
| புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் | |
| அறங்கூறும் ஆக்கம் தரும் | |
| Virtue thinks it better to die, | |
| Than live to backbite and to lie | |
| கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க | |
| முன்இன்று பின்நோக்காச் சொல் | |
| Though harsh you speak in one's presence | |
| Abuse is worse in his absence | |
| அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் | |
| புன்மையாற் காணப் படும் | |
| Who turns to slander makes it plain | |
| His praise of virtue is in vain | |
| பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் | |
| திறன்தெரிந்து கூறப் படும் | |
| His failings will be found and shown, | |
| Who makes another's failings known | |
| பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி | |
| நட்பாடல் தேற்றா தவர் | |
| By pleasing words who make not friends | |
| Sever their hearts by hostile trends | |
| துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் | |
| என்னைகொல் ஏதிலார் மாட்டு | |
| What will they not to strangers do | |
| Who bring their friends' defects to view? | |
| அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் | |
| புன்சொல் உரைப்பான் பொறை | |
| The world in mercy bears his load | |
| Who rants behind words untoward | |
| ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் | |
| தீதுண்டோ மன்னும் உயிர்க்கு | |
| No harm would fall to any man | |
| If each his own defect could scan | |
| பயனில சொல்லாமை - Against vain speaking | |
| பல்லார் முனியப் பயனில சொல்லுவான் | |
| எல்லாரும் எள்ளப் படும் | |
| With silly words who insults all | |
| Is held in contempt as banal | |
| பயனில பல்லார்முன் சொல்லல் நயனில | |
| நட்டார்கண் செய்தலின் தீது | |
| Vain talk before many is worse | |
| Than doing to friends deeds adverse | |
| நயனிலன் என்பது சொல்லும் பயனில | |
| பாரித் துரைக்கும் உரை | |
| The babbler's hasty lips proclaim | |
| That "good-for-nothing" is his name | |
| நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் | |
| பண்பில்சொல் பல்லா ரகத்து | |
| Vain words before an assembly | |
| Will make all gains and goodness flee | |
| சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில | |
| நீர்மை யுடையார் சொலின் | |
| Glory and grace will go away | |
| When savants silly nonsense say | |
| பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் | |
| மக்கட் பதடி யெனல் | |
| Call him a human chaff who prides | |
| Himself in weightless idle words | |
| நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் | |
| பயனில சொல்லாமை நன்று | |
| Let not men of worth vainly quack | |
| Even if they would roughly speak | |
| அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் | |
| பெரும்பயன் இல்லாத சொல் | |
| The wise who weigh the worth refrain | |
| From words that have no grain and brain | |
| பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த | |
| மாசறு காட்சி யவர் | |
| The wise of spotless self-vision | |
| Slip not to silly words-mention | |
| சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க | |
| சொல்லிற் பயனிலாச் சொல் | |
| To purpose speak the fruitful word | |
| And never indulge in useless load | |
| -------- | |
| தீவினையச்சம் - Fear of sin | |
| தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் | |
| தீவினை என்னுஞ் செருக்கு | |
| Sinners fear not the pride of sin | |
| The worthy dread the ill within | |
| தீயவை தீய பயத்தலால் தீயவை | |
| தீயினும் அஞ்சப் படும் | |
| Since evil begets evil dire | |
| Fear ye evil more than fire | |
| அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய | |
| செறுவார்க்கும் செய்யா விடல் | |
| The wisest of the wise are those | |
| Who injure not even their foes | |
| மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் | |
| அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு | |
| His ruin virtue plots who plans | |
| The ruin of another man's | |
| இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் | |
| இலனாகும் மற்றும் பெயர்த்து | |
| Who makes poverty plea for ill | |
| Shall reduce himself poorer still | |
| தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால | |
| தன்னை அடல்வேண்டா தான் | |
| From wounding others let him refrain | |
| Who would from harm himself remain | |
| எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை | |
| வீயாது பின்சென்று அடும் | |
| Men may escape other foes and live | |
| But sin its deadly blow will give | |
| தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை | |
| வீயாது அடிஉரைந் தற்று | |
| Ruin follows who evil do | |
| As shadow follows as they go | |
| தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் | |
| துன்னற்க தீவினைப் பால் | |
| Let none who loves himself at all | |
| Think of evil however small | |
| அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் | |
| தீவினை செய்யான் எனின் | |
| He is secure, know ye, from ills | |
| Who slips not right path to do evils | |
| ஒப்புரவறிதல் - Duty to society | |
| கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு | |
| என்ஆற்றுங் கொல்லோ உலகு | |
| Duty demands nothing in turn; | |
| How can the world recompense rain? | |
| தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு | |
| வேளாண்மை செய்தற் பொருட்டு | |
| All the wealth that toils give | |
| Is meant to serve those who deserve | |
| புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே | |
| ஒப்புரவின் நல்ல பிற | |
| In heav'n and earth 'tis hard to find | |
| A greater good than being kind | |
| ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் | |
| செத்தாருள் வைக்கப் படும் | |
| He lives who knows befitting act | |
| Others are deemed as dead in fact | |
| ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் | |
| பேரறி வாளன் திரு | |
| The wealth that wise and kind do make | |
| Is like water that fills a lake | |
| பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் | |
| நயனுடை யான்கண் படின் | |
| Who plenty gets and plenty gives | |
| Is like town-tree teeming with fruits | |
| மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் | |
| பெருந்தகை யான்கண் படின் | |
| The wealth of a wide-hearted soul | |
| Is a herbal tree that healeth all | |
| இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் | |
| கடனறி காட்சி யவர் | |
| Though seers may fall on evil days | |
| Their sense of duty never strays | |
| நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர | |
| செய்யாது அமைகலா வாறு | |
| The good man's poverty and grief | |
| Is want of means to give relief | |
| ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் | |
| விற்றுக்கோள் தக்க துடைத்து | |
| By good if ruin comes across | |
| Sell yourself to save that loss | |
| - | |
| ஈகை - Charity | |
| வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் | |
| குறியெதிர்ப்பை நீர துடைத்து | |
| To give the poor is charity | |
| The rest is loan and vanity | |
| நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் | |
| இல்லெனினும் ஈதலே நன்று | |
| To beg is bad e'en from the good | |
| To give is good, were heaven forbid | |
| இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் | |
| குலனுடையான் கண்ணே உள | |
| No pleading, "I am nothing worth," | |
| But giving marks a noble birth | |
| இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் | |
| இன்முகங் காணும் அளவு | |
| The cry for alms is painful sight | |
| Until the giver sees him bright | |
| ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை | |
| மாற்றுவார் ஆற்றலின் பின் | |
| Higher's power which hunger cures | |
| Than that of penance which endures | |
| அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் | |
| பெற்றான் பொருள்வைப் புழி | |
| Drive from the poor their gnawing pains | |
| If room you seek to store your gains | |
| பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் | |
| தீப்பிணி தீண்டல் அரிது | |
| Who shares his food with those who need | |
| Hunger shall not harm his creed | |
| ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை | |
| வைத்திழக்கும் வன்க ணவர் | |
| The joy of give and take they lose | |
| Hard-hearted rich whose hoarding fails | |
| இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய | |
| தாமே தமியர் உணல் | |
| Worse than begging is that boarding | |
| Alone what one's greed is hoarding | |
| சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் | |
| ஈதல் இயையாக் கடை | |
| Nothing is more painful than death | |
| Yet more is pain of giftless dearth | |
| -- | |
| புகழ் - Renown | |
| ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது | |
| ஊதியம் இல்லை உயிர்க்கு | |
| They gather fame who freely give | |
| The greatest gain for all that live | |
| உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று | |
| ஈவார்மேல் நிற்கும் புகழ் | |
| The glory of the alms-giver | |
| Is praised aloud as popular | |
| ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் | |
| பொன்றாது நிற்பதொன்று இல் | |
| Nothing else lasts on earth for e'er | |
| Saving high fame of the giver! | |
| நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் | |
| போற்றாது புத்தேள் உலகு | |
| From hailing gods heavens will cease | |
| To hail the men of lasting praise | |
| நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் | |
| வித்தகர்க் கல்லால் அரிது | |
| Fame in fall and life in death | |
| Are rare but for the soulful worth | |
| தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் | |
| தோன்றலின் தோன்றாமை நன்று | |
| Be born with fame if birth you want | |
| If not of birth you must not vaunt | |
| புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை | |
| இகழ்வாரை நோவது எவன் | |
| Why grieve at those who blame the shame | |
| Of those who cannot live in fame? | |
| வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் | |
| எச்சம் பெறா விடின் | |
| To men on earth it is a shame | |
| Not to beget the child of fame | |
| வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா | |
| யாக்கை பொறுத்த நிலம் | |
| The land will shrink in yield if men | |
| O'erburden it without renown | |
| வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய | |
| வாழ்வாரே வாழா தவர் | |
| They live who live without blemish | |
| The blameful ones do not flourish | |
| - | |
| துறவறவியல் - ASCETIC VIRTUE | |
| அருளுடைமை - Compassion | |
| அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் | |
| பூரியார் கண்ணும் உள | |
| The wealth of wealth is wealth of grace | |
| Earthly wealth e'en the basest has | |
| நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் | |
| தேரினும் அஃதே துணை | |
| Seek by sound ways good compassion; | |
| All faiths mark that for-salvation | |
| அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த | |
| இன்னா உலகம் புகல் | |
| The hearts of mercy shall not go | |
| Into dark worlds of gruesome woe | |
| மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப | |
| தன்னுயிர் அஞ்சும் வினை | |
| His soul is free from dread of sins | |
| Whose mercy serveth all beings | |
| அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் | |
| மல்லல்மா ஞாலம் கரி | |
| The wide wind-fed world witness bears: | |
| Men of mercy meet not sorrows | |
| பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி | |
| அல்லவை செய்தொழுகு வார் | |
| Who grace forsake and graceless act | |
| The former loss and woes forget | |
| அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு | |
| இவ்வுலகம் இல்லாகி யாங்கு | |
| This world is not for weathless ones | |
| That world is not for graceless swines | |
| பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் | |
| அற்றார்மற் றாதல் அரிது | |
| The wealthless may prosper one day; | |
| The graceless never bloom agay | |
| தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் | |
| அருளாதான் செய்யும் அறம் | |
| Like Truth twisted by confused mind | |
| Wisdom is vain in hearts unkind | |
| வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் | |
| மெலியார்மேல் செல்லும் இடத்து | |
| Think how you feel before the strong | |
| When to the feeble you do wrong | |
| ---- | |
| புலால் மறுத்தல் - Abstinence from flesh | |
| தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் | |
| எங்ஙனம் ஆளும் அருள் | |
| What graciousness can one command | |
| who feeds his flesh by flesh gourmand | |
| பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி | |
| ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு | |
| The thriftless have no property | |
| And flesh-eaters have no pity | |
| படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் | |
| உடல்சுவை உண்டார் மனம் | |
| Who wields a steel is steel-hearted | |
| Who tastes body is hard-hearted | |
| அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் | |
| பொருளல்லது அவ்வூன் தினல் | |
| If merciless it is to kill, | |
| To kill and eat is disgraceful | |
| உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண | |
| அண்ணாத்தல் செய்யாது அளறு | |
| Off with flesh; a life you save | |
| The eater hell's mouth shall not waive! | |
| தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் | |
| விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் | |
| None would kill and sell the flesh | |
| For eating it if they don't wish | |
| உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் | |
| புண்ணது உணர்வார்ப் பெறின் | |
| From eating flesh men must abstain | |
| If they but feel the being's pain | |
| செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் | |
| உயிரின் தலைப்பிரிந்த ஊன் | |
| Whose mind from illusion is freed | |
| Refuse on lifeless flesh to feed | |
| அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் | |
| உயிர்செகுத் துண்ணாமை நன்று | |
| Not to-kill-and-eat, truly | |
| Excels thousand pourings of ghee! | |
| கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி | |
| எல்லா உயிரும் தொழும் | |
| All lives shall lift their palms to him | |
| Who eats not flesh nor kills with whim | |
| ------- | |
| தவம் - Penance | |
| உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை | |
| அற்றே தவத்திற் குரு | |
| Pains endure; pain not beings | |
| This is the type of true penance | |
| தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை | |
| அஃதிலார் மேற்கொள் வது | |
| Penance is fit for penitents | |
| Not for him who in vain pretends | |
| துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் | |
| மற்றை யவர்கள் தவம | |
| Is it to true penitent's aid, | |
| That others austere path avoid? | |
| ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் | |
| எண்ணின் தவத்தான் வரும் | |
| In penance lies the power to save | |
| The friends and foil the foe and knave | |
| வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் | |
| ஈண்டு முயலப் படும் | |
| What they wish as they wish is won | |
| Here hence by men penance is done | |
| தவஞ்செய்வார் தங்கமருமஞ் செய்வார்மற் றல்லார் | |
| அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு | |
| Who do penance achieve their aim | |
| Others desire-rid themselves harm | |
| சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் | |
| சுடக்சுட நோற்கிற் பவர்க்கு | |
| Pure and bright gets the gold in fire; | |
| and so the life by pain austere | |
| தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய | |
| மன்னுயி ரெல்லாம் தொழும் | |
| He worship wins from every soul | |
| Who Master is by soul control | |
| கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் | |
| ஆற்றல் தலைப்பட் டவர்க்கு | |
| They can even defy death | |
| Who get by penance godly strength | |
| இலர்பல ராகிய காரணம் நோற்பார் | |
| சிலர்பலர் நோலா தவர் | |
| Many are poor and few are rich | |
| For they care not for penance much | |
| கூடாவொழுக்கம் - Imposture | |
| வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் | |
| ஐந்தும் அகத்தே நகும் | |
| Elements five of feigned life | |
| Of a sly hypocrite within laugh | |
| வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் | |
| தான்அறி குற்றப் படின் | |
| Of what avail are sky-high shows | |
| When guild the conscience gnaws and knows | |
| வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் | |
| புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று | |
| Vaunting sainthood while weak within | |
| Seems a grazer with tiger skin | |
| தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து | |
| வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று | |
| Sinning in saintly show is like | |
| Fowlers in ambush birds to strike | |
| பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று | |
| ஏதம் பலவுந் தரும் | |
| Who false within but freedom feign | |
| Shall moan "What have we done" with pain | |
| நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து | |
| வாழ்வாரின் வன்கணார் இல் | |
| Vilest is he who seems a saint | |
| Cheating the world without restraint | |
| புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி | |
| மூக்கிற் கரியார் உடைத்து | |
| Berry-red is his outward view, | |
| Black like its nose his inward hue | |
| மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி | |
| மறைந்தொழுகும் மாந்தர் பலர் | |
| Filthy in mind some bathe in streams | |
| Hiding sins in showy extremes | |
| கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன | |
| வினைபடு பாலால் கொளல் | |
| Know men by acts and not by forms | |
| Strait arrow kills, bent lute but charms | |
| மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் | |
| பழித்தது ஒழித்து விடின் | |
| No balding nor tangling the hair! | |
| Abstain from condemned acts with care | |
| கள்ளாமை - The absence of fraud | |
| எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் | |
| கள்ளாமை காக்கதன் நெஞ்சு | |
| Let him who would reproachless be | |
| From all frauds guard his conscience free | |
| உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் | |
| கள்ளத்தால் கள்வேம் எனல் | |
| "We will by fraud win other's wealth" | |
| Even this thought is sin and stealth | |
| களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து | |
| ஆவது போலக் கெடும் | |
| The gain by fraud may overflow | |
| But swift to ruin it shall go | |
| களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் | |
| வீயா விழுமம் தரும் | |
| The fruit that fraud and greed obtain | |
| Shall end in endless grief and pain | |
| அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் | |
| பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் | |
| Love and Grace are not their worth | |
| Who watch to waylay dozer's wealth | |
| அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் | |
| கன்றிய காத லவர் | |
| They cannot walk in measured bounds | |
| who crave and have covetous ends | |
| களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் | |
| ஆற்றல் புரிந்தார்கண் இல் | |
| Men of measured wisdom shun | |
| Black art of fraud and what it won | |
| அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்கும் | |
| களவறிந்தார் நெஞ்சில் கரவு | |
| Virtue abides in righteous hearts | |
| Into minds of frauds deceit darts | |
| அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல | |
| மற்றைய தேற்றா தவர் | |
| They perish in their perfidy | |
| Who know nothing but pilfery | |
| கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் | |
| தள்ளாது புத்தே ளுலகு | |
| Even the body rejects thieves; | |
| The honest men, heaven receives | |
| ------ | |
| வாய்மை - Veracity | |
| வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் | |
| தீமை இலாத சொலல் | |
| If "What is truth"? the question be, | |
| It is to speak out evil-free | |
| பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த | |
| நன்மை பயக்கும் எனின் | |
| E'en falsehood may for truth suffice, | |
| When good it brings removing vice | |
| தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் | |
| தன்னெஞ்சே தன்னைச் சுடும் | |
| Let not a man knowingly lie; | |
| Conscience will scorch and make him sigh | |
| உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் | |
| உள்ளத்து ளெல்லாம் உளன் | |
| He lives in loving hearts of all | |
| Who serves the Truth serene in soul | |
| மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு | |
| தானஞ்செய் வாரின் தலை | |
| To speak the truth from heart sincere | |
| Is more than giving and living austere | |
| பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை | |
| எல்லா அறமும் தரும் | |
| Not to lie brings all the praise | |
| All virtues from Truth arise | |
| பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற | |
| செய்யாமை செய்யாமை நன்று | |
| Lie not lie not Naught else you need | |
| All virtues are in Truth indeed | |
| புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை | |
| வாய்மையால் காணப் படும் | |
| Water makes you pure outward | |
| Truth renders you pure inward | |
| எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் | |
| பொய்யா விளக்கே விளக்கு | |
| All lights are not lights for the wise; | |
| Truth light is light bright like sun-light | |
| யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் | |
| வாய்மையின் நல்ல பிற | |
| Of all the things we here have seen | |
| Nothing surpasses Truth serene ! | |
| -------- | |
| வெகுளாமை - Restraining anger | |
| செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் | |
| காக்கின்என் காவாக்கால் என் | |
| Anger against the weak is wrong | |
| It is futile against the strong | |
| செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் | |
| இல்அதனின் தீய பிற | |
| Vain is wrath against men of force | |
| Against the meek it is still worse | |
| மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய | |
| பிறத்தல் அதனான் வரும் | |
| Off with wrath with any one | |
| It is the source of sin and pain | |
| நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் | |
| பகையும் உளவோ பிற | |
| Is there a foe like harmful ire | |
| Which kills the smile and joyful cheer? | |
| தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் | |
| தன்னையே கொல்லும் சினம் | |
| Thyself to save, from wrath away! | |
| If not thyself the wrath will slay | |
| சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் | |
| ஏமப் புணையைச் சுடும் | |
| Friend-killer is the fatal rage | |
| It burns the helpful kinship-barge | |
| சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு | |
| நிலத்தறைந்தான் கைபிழையா தற்று | |
| The wrath-lover to doom is bound | |
| Like failless-hand that strikes the ground | |
| இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் | |
| புணரின் வெகுளாமை நன்று | |
| Save thy soul from burning ire | |
| Though tortured like the touch of fire | |
| உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் | |
| உள்ளான் வெகுளி எனின் | |
| Wishes he gains as he wishes | |
| If man refrains from rage vicious! | |
| இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் | |
| துறந்தார் துறந்தார் துணை | |
| Dead are they who are anger-fed | |
| Saints are they from whom wrath has fled | |
| -------- | |
| இன்னா செய்யாமை - non-violence | |
| சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா | |
| செய்யாமை மாசற்றார் கோள் | |
| The pure by faith mean pain to none | |
| Though princely wealth by that is won | |
| கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா | |
| செய்யாமை மாசற்றார் கோள் | |
| The spotless hearts seek not revenge | |
| Though Malice does the worst in rage | |
| செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் | |
| உய்யா விழுமம் தரும் | |
| Revenging even causeless hate | |
| Bad-blood breeds and baneful heat | |
| இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண | |
| நன்னயம் செய்து விடல் | |
| Doing good-turns, put them to shame | |
| Thus chide the evil who do harm | |
| அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் | |
| தந்நோய்போல் போற்றாக் கடை | |
| What does a man from wisdom gain | |
| If he pines not at other's pain? | |
| இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை | |
| வேண்டும் பிறன்கண் செயல் | |
| What you feel as 'pain' to yourself | |
| Do it not to the other-self | |
| எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் | |
| மாணாசெய் யாமை தலை | |
| Any, anywhere injure not | |
| At any time even in thought | |
| தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ | |
| மன்னுயிர்க்கு இன்னா செயல் | |
| How can he injure other souls | |
| Who in his life injury feels | |
| பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா | |
| பிற்பகல் தாமே வரும் | |
| Harm others in the forenoon | |
| Harm seeks thee in afternoon | |
| நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் | |
| நோயின்மை வேண்டு பவர் | |
| No harm is done by peace-lovers | |
| For pains rebound on pain-givers | |
| -- | |
| கொல்லாமை - Non-killing | |
| அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் | |
| பிறவினை எல்லாம் தரும் | |
| What is Virtue? 'Tis not to kill | |
| For killing causes every ill | |
| பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் | |
| தொகுத்தவற்றுள் எல்லாந் தலை | |
| Share the food and serve all lives | |
| This is the law of all the laws | |
| ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் | |
| பின்சாரப் பொய்யாமை நன்று | |
| Not to kill is unique good | |
| The next, not to utter falsehood | |
| நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் | |
| கொல்லாமை சூழும் நெறி | |
| What way is good? That we can say | |
| The way away from heat to slay | |
| நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் | |
| கொல்லாமை சூழ்வான் தலை | |
| Of saints who renounce birth-fearing | |
| The head is he who dreads killing | |
| கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் | |
| செல்லாது உயிருண்ணுங் கூற்று | |
| Life-eating-Death shall spare the breath | |
| Of him who no life puts to death | |
| தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது | |
| இன்னுயிர் நீக்கும் வினை | |
| Kill not life that others cherish | |
| Even when your life must perish | |
| நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் | |
| கொன்றாகும் ஆக்கம் கடை | |
| The gain of slaughter is a vice | |
| Though deemed good in sacrifice | |
| கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் | |
| புன்மை தெரிவா ரகத்து | |
| Those who live by slaying are | |
| Eaters of carrion bizarre! | |
| உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் | |
| செல்லாத்தீ வாழ்க்கை யவர் | |
| The loathsome poor sickly and sore | |
| Are killers stained by blood before | |
| ------- | |
| நிலையாமை - Instability | |
| நில்லாத வற்றை நிலையின என்றுணரும் | |
| புல்லறி வாண்மை கடை | |
| The worst of follies it is told | |
| The fleeting as lasting to hold | |
| கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் | |
| போக்கும் அதுவிளிந் தற்று | |
| Like a drama-crowd wealth gathers | |
| Like passing show its pride too goes | |
| அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் | |
| அற்குப ஆங்கே செயல் | |
| Wealth wanes away; but when it comes | |
| Take care to do enduring things | |
| நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் | |
| வாளது உணர்வார்ப் பெறின் | |
| The showy day is but a saw | |
| Your life, know that, to file and gnaw | |
| நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை | |
| மேற்சென்று செய்யப் படும் | |
| Ere tongue benumbs and hiccough comes | |
| Rise up to do good deeds betimes | |
| நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் | |
| பெருமை உடைத்துஇவ் வுலகு | |
| One was yesterday; not today! | |
| The wonder of the world's way! | |
| ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப | |
| கோடியும் அல்ல பல | |
| Man knows not his next moment | |
| On crores of things he is intent | |
| குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே | |
| உடம்போடு உயிரிடை நட்பு | |
| The soul from body any day | |
| Like bird from egg-shell flies away | |
| உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி | |
| விழிப்பது போலும் பிறப்பு | |
| Death is like a slumber deep | |
| And birth like waking from that sleep | |
| புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் | |
| துச்சில் இருந்த உயிர்க்கு | |
| The life berthed in this body shows | |
| A fixed home it never knows | |
| -------- | |
| துறவு - Renunciation | |
| யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் | |
| அதனின் அதனின் இலன் | |
| From what from what a man is free | |
| From that, from that his torments flee | |
| வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் | |
| ஈண்டுஇயற் பால பல | |
| Give up all to gain the True | |
| And endless joys shall hence seek you | |
| அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் | |
| வேண்டிய எல்லாம் ஒருங்கு | |
| Curb the senses five and renounce | |
| The craving desires all at once | |
| இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை | |
| மயலாகும் மற்றும் பெயர்த்து | |
| To have nothing is law of vows | |
| Having the least deludes and snares | |
| மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் | |
| உற்றார்க்கு உடம்பும் மிகை | |
| Why add to bonds while this body | |
| Is too much for saints to be birth-free | |
| யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு | |
| உயர்ந்த உலகம் புகும் | |
| Who curbs the pride of I and mine | |
| Gets a world rare for gods to gain | |
| பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் | |
| பற்றி விடாஅ தவர்க்கு | |
| Grief clings on and on to those | |
| Who cling to bonds without release | |
| தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி | |
| வலைப்பட்டார் மற்றை யவர் | |
| Who renounce all are free from care | |
| Others suffer delusive snare | |
| பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று | |
| நிலையாமை காணப் படும் | |
| Bondage cut off, rebirth is off | |
| The world then seems instable stuff | |
| பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் | |
| பற்றுக பற்று விடற்கு | |
| Bind Thyself to the unbound one | |
| That binding breaks all bonds anon | |
| ------- | |
| மெய்யுணர்தல் - Truth consciousness | |
| பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் | |
| மருளானாம் மாணாப் பிறப்பு | |
| That error entails ignoble birth | |
| Which deems vain things as things of worth | |
| இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி | |
| மாசறு காட்சி யவர்க்கு | |
| Men of spotless pure insight | |
| Enjoy delight devoid of night | |
| ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் | |
| வானம் நணிய துடைத்து | |
| To doubtless minds whose heart is clear | |
| More than earth heaven is near | |
| ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே | |
| மெய்யுணர்வு இல்லா தவர்க்கு | |
| Knowledge of five senses is vain | |
| Without knowing the Truth within | |
| எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் | |
| மெய்ப்பொருள் காண்பது அறிவு | |
| Knowledge is Truth of things to find | |
| In every case of every kind | |
| கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் | |
| மற்றீண்டு வாரா நெறி | |
| Who learn and here the Truth discern | |
| Enter the path of non-return | |
| ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் | |
| பேர்த்துள்ள வேண்டா பிறப்பு | |
| One-minded sage sees inner-truth | |
| He is free from thoughts of rebirth | |
| பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் | |
| செம்பொருள் காண்பது அறிவு | |
| It is knowledge to know Self-Truth | |
| And remove the folly of birth | |
| சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் | |
| சார்தரா சார்தரு நோய் | |
| Know the Refuge; off with bondage | |
| Be free from ills of thraldom, O sage | |
| காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் | |
| நாமம் கெடக்கெடும் நோய் | |
| Woes expire when lust, wrath, folly | |
| Expire even to name, fully | |
| அவா அறுத்தல் - Curbing of desire | |
| அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் | |
| தவாஅப் பிறப்பீனும் வித்து | |
| Desire to all, always is seed | |
| From which ceaseless births proceed | |
| வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது | |
| வேண்டாமை வேண்ட வரும் | |
| If long thou must, long for non-birth | |
| It comes by longing no more for earth | |
| வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை | |
| யாண்டும் அஃதொப்பது இல் | |
| No such wealth is here and there | |
| As peerless wealth of non-desire | |
| தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது | |
| வாஅய்மை வேண்ட வரும் | |
| To nothing crave is purity | |
| That is the fruit of verity | |
| அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் | |
| அற்றாக அற்றது இலர் | |
| The free are those who desire not | |
| The rest not free in bonds are caught | |
| அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை | |
| வஞ்சிப்ப தோரும் அவா | |
| Dread desire; Virtue is there | |
| To every soul desire is snare! | |
| அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை | |
| தான்வேண்டு மாற்றான் வரும் | |
| Destroy desire; deliverance | |
| Comes as much as you aspire hence | |
| அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் | |
| தவாஅது மேன்மேல் வரும் | |
| Desire extinct no sorrow-taints | |
| Grief comes on grief where it pretends | |
| இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் | |
| துன்பத்துள் துன்பம் கெடின் | |
| Desire, the woe of woes destroy | |
| Joy of joys here you enjoy | |
| ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே | |
| பேரா இயற்கை தரும் | |
| Off with desire insatiate | |
| You gain the native blissful state | |
| ------ | |
| ஊழ் - Destiny | |
| ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் | |
| போகூழால் தோன்றும் மடி | |
| Efforts succeed by waxing star | |
| Wealth-losing brings waning star | |
| பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் | |
| ஆகலூழ் உற்றக் கடை | |
| Loss-fate makes a dull fool of us | |
| Gain-fate makes us prosperous, wise! | |
| நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் | |
| உண்மை அறிவே மிகும் | |
| What matters subtle study deep? | |
| Levels of innate wisdom-keep | |
| இருவேறு உலகத்து இயற்கை திருவேறு | |
| தெள்ளிய ராதலும் வேறு | |
| Two natures in the world obtain | |
| Some wealth and others wisdom gain | |
| நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் | |
| நல்லவாம் செல்வம் செயற்கு | |
| In making wealth fate changes mood; | |
| The good as bad and bad as good | |
| பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் | |
| சொரியினும் போகா தம | |
| Things not thine never remain | |
| Things destined are surely thine | |
| வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி | |
| தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது | |
| Who crores amass enjoy but what | |
| The Dispenser's decrees allot | |
| துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால | |
| ஊட்டா கழியும் எனின் | |
| The destitute desire will quit | |
| If fate with ills visit them not | |
| நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் | |
| அல்லற் படுவ தெவன் | |
| Who good in time of good perceive | |
| In evil time why should they grieve? | |
| ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று | |
| சூழினும் தான்முந் துறும் | |
| What power surpasses fate? Its will | |
| Persists against the human skill | |
| -- | |
| பொருட்பால்- Part II - WEALTH | |
| அரசியல்-Royalty | |
| இறைமாட்சி The grandeur of monarchy | |
| கல்வி Education | |
| கல்லாமை Non- learning | |
| கேள்வி Listening | |
| அறிவுடைமை The possession of knowledge | |
| குற்றங்கடிதல் Avoiding faults | |
| பெரியாரைத் துணைக்கோடல் Gaining great men's help | |
| சிற்றினஞ் சேராமை Avoiding mean company | |
| தெரிந்து செயல்வகை Deliberation before action | |
| வலியறிதல் Judging strength | |
| காலம் அறிதல் Knowing proper time | |
| இடன் அறிதல் Judging the place | |
| தெரிந்து தெளிதல் Testing of men for confidence | |
| தெரிந்து வினையாடல் Testing and entrusting | |
| சுற்றந்தழால் Cherishing kinsmen | |
| பொச்சாவாமை Unforgetfulness | |
| செங்கோன்மை Just government | |
| கொடுங்கோன்மை The cruel tyranny | |
| வெருவந்த செய்யாமை Avoiding terrorism | |
| கண்ணோட்டம் Benign looks | |
| ஒற்றாடல் Espionage | |
| ஊக்கம் உடைமை Energy | |
| மடியின்மை Freedom from sloth | |
| ; ஆள்வினை உடைமை Manly effort | |
| இடுக்கண் அழியாமை Hope in mishap | |
| அமைச்சியல் - STATE CABINET | |
| அமைச்சு Ministers | |
| சொல்வன்மை Power of speech | |
| வினைத்தூய்மை Purity of action | |
| வினைத்திடபம் Powerful acts | |
| வினைசெயல்வகை Modes of action | |
| தூது The embassy | |
| மன்னரைச் சேர்ந்தொழுகல் Walk with kings | |
| குறிப்பறிதல் Divining the mind | |
| அவை அறிதல் Judging the audience | |
| அவை அஞ்சாமை Courage before councils | |
| அரணியல், கூழியல், படையியல் - POLITICS | |
| நாடு The country | |
| அரண் Fortress | |
| பொருள் செயல்வகை Way of making wealth | |
| படையாட்சி The glory of army | |
| படைச்செருக்கு Military pride | |
| நட்பியல் - ALLIANCE | |
| நட்பு Friendship | |
| நட்பாராய்தல் Testing friendship | |
| பழைமை Intimacy | |
| தீநட்பு Bad friendship | |
| கூடாநட்பு False friendship | |
| பேதமை Folly | |
| புலலறிவான்மை Petty conceit | |
| இகல் Hatred | |
| பகைமாட்சி Noble hostility | |
| பகைத்திறம் தெரிதல் Apparising enemies | |
| உட்பகை Secret foe | |
| பெரியாரைப்பிழையாமை Offend not the great | |
| பெண்வழிச்சேறல் Being led by women | |
| வரைவின் மகளிர் Wanton women | |
| கள்ளுண்ணாமை Not drinking liquor | |
| சூது Gambling | |
| மருந்து Medicine | |
| ஒழிபியல் - MISCELLANEOUS | |
| மானம் Honour | |
| பெருமை Greatness | |
| சான்றாண்மை Sublimity | |
| பண்புடைமை Courtesy | |
| நன்றியில் செல்வம் Futile wealth | |
| நாணுடைமை Sensitiveness to shame | |
| குடிசெயல் வகை Promoting family welfare | |
| உழவு Farming | |
| நல்குரவு Poverty | |
| இரவு Asking | |
| இரவச்சம் Dread of beggary | |
| கயமை Meanness | |
| - | |
| இறைமாட்சி - The grandeur of monarchy | |
| படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் | |
| உடையான் அரசருள் ஏறு | |
| People, troops, wealth, forts, council, friends | |
| Who owns these six is lion of kings | |
| அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் | |
| எஞ்சாமை வேந்தர்க் கியல்பு | |
| Courage, giving, knowledge and zeal | |
| Are four failless features royal | |
| தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் | |
| நீங்கா நிலனாள் பவர்க்கு | |
| Alertness, learning, bravery | |
| Are adjuncts three of monarchy | |
| அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா | |
| மானம் உடைய தரசு | |
| A brave noble king refrains from vice | |
| Full of virtue and enterprise | |
| இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த | |
| வகுத்தலும் வல்ல தரசு | |
| The able king gets, stores and guards | |
| And spends them for people's safeguards | |
| காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் | |
| மீக்கூறும் மன்னன் நிலம் | |
| That land prospers where the king is | |
| Easy to see, not harsh of words | |
| இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் | |
| தான்கண் டனைத்திவ் வுலகு | |
| The world commends and acts his phrase | |
| Who sweetly speaks and gives with grace | |
| முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு | |
| இறையென்று வைக்கப் படும் | |
| He is the Lord of men who does | |
| Sound justice and saves his race | |
| செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் | |
| கவிகைக்கீழ்த் தங்கும் உலகு | |
| Under his shelter thrives the world | |
| Who bears remarks bitter and bold | |
| கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் | |
| உடையானாம் வேந்தர்க் கொளி | |
| He is the Light of Kings who has | |
| Bounty, justice, care and grace | |
| ------ | |
| கல்வி - Education | |
| கற்க கசடறக் கற்பவை கற்றபின் | |
| நிற்க அதற்குத் தக | |
| Lore worth learning, learn flawlessly | |
| Live by that learning thoroughly | |
| எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் | |
| கண்ணென்ப வாழும் உயிர்க்கு | |
| Letter, number, art and science | |
| Of living kind both are the eyes | |
| கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு | |
| புண்ணுடையர் கல்லா தவர் | |
| The learned alone have eyes on face | |
| The ignorant two sores of disgrace | |
| உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் | |
| அனைத்தே புலவர் தொழில் | |
| To meet with joy and part with thought | |
| Of learned men this is the art | |
| உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் | |
| கடையரே கல்லா தவர் | |
| Like poor before rich they yearn: | |
| For knowledge: the low never learn | |
| தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் | |
| கற்றனைத் தூறும் அறிவு | |
| As deep you dig the sand spring flows | |
| As deep you learn the knowledge grows | |
| யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் | |
| சாந்துணையுங் கல்லாத வாறு | |
| All lands and towns are learner's own | |
| Why not till death learning go on! | |
| ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு | |
| எழுமையும் ஏமாப் புடைத்து | |
| The joy of learning in one birth | |
| Exalts man upto his seventh | |
| தாமின் புறுவது உலகின் புறக்கண்டு | |
| காமுறுவர் கற்றறிந் தார் | |
| The learned foster learning more | |
| On seeing the world enjoy their lore | |
| கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு | |
| மாடல்ல மற்றை யவை | |
| Learning is wealth none could destroy | |
| Nothing else gives genuine joy | |
| -------- | |
| கல்லாமை - Non-learning | |
| அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய | |
| நூலின்றிக் கோட்டி கொளல் | |
| Like play of chess on squareless board | |
| Vain is imperfect loreless word | |
| கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் | |
| இல்லாதாள் பெண்காமுற் றற்று | |
| Unlearned man aspiring speech | |
| Is breastless lady's love-approach | |
| கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் | |
| சொல்லா திருக்கப் பெறின் | |
| Ev'n unread men are good and wise | |
| If before the wise, they hold their peace | |
| கல்லாதான் ஓட்பம் கழியநன் றாயினும் | |
| கொள்ளார் அறிவுடை யார் | |
| The unread's wit though excellent | |
| Is not valued by the savant | |
| கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து | |
| சொல்லாடச் சோர்வு படும் | |
| A man untaught when speech he vaunts | |
| Sadly fails before savants | |
| உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் | |
| களரனையர் கல்லா தவர் | |
| People speak of untaught minds | |
| "They just exist like barren lands" | |
| நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் | |
| மண்மாண் புனைபாவை யற்று | |
| Like painted clay-doll is his show | |
| Grand subtle lore who fails to know | |
| நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே | |
| கல்லார்கண் பட்ட திரு | |
| Wealth in the hand of fools is worse | |
| Than a learned man's empty purse | |
| மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் | |
| கற்றார் அனைத்திலர் பாடு | |
| Lower are fools of higher birth | |
| Than low-born men of learning's worth | |
| விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் | |
| கற்றாரோடு ஏனை யவர் | |
| Like beasts before men, dunces are | |
| Before scholars of shining lore | |
| - | |
| கேள்வி - Listening | |
| செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் | |
| செல்வத்து ளெல்லாந் தலை | |
| Wealth of wealths is listening's wealth | |
| It is the best of wealths on earth | |
| செவிக்குண வில்லாத போழ்து சிறிது | |
| வயிற்றுக்கும் ஈயப் படும் | |
| Some food for the stomach is brought | |
| When the ear gets no food for thought | |
| செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் | |
| ஆன்றாரோ டொப்பர் நிலத்து | |
| Whose ears get lots of wisdom-food | |
| Equal gods on oblations fed | |
| கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு | |
| ஒற்கத்தின் ஊற்றாந் துணை | |
| Though not learned, hear and heed | |
| That serves a staff and stay in need | |
| இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே | |
| ஒழுக்க முடையார்வாய்ச் சொல் | |
| Virtuous men's wisdom is found | |
| A strong staff on slippery ground | |
| எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் | |
| ஆன்ற பெருமை தரும் | |
| Lend ear to good words however few | |
| That much will highly exalt you | |
| பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் | |
| தீண்டிய கேள்வி யவர் | |
| Who listen well and learn sharply | |
| Not ev'n by slip speak foolishly | |
| கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் | |
| தோட்கப் படாத செவி | |
| That ear though hearing is dulled | |
| Which is not by wisdom drilled | |
| நுணங்கிய கேள்வியர் ரல்லார் வணங்கிய | |
| வாயின ராதல் அரிது | |
| A modest mouth is hard for those | |
| Who care little to counsels wise | |
| செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் | |
| அவியினும் வாழினும் என் | |
| Who taste by mouth and not by ear | |
| What if they fare ill or well here? | |
| - | |
| அறிவுடைமை - The possession of knowledge | |
| அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் | |
| உள்ளழிக்க லாகா அரண் | |
| Wisdom's weapon wards off all woes | |
| It is a fort defying foes | |
| சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ | |
| நன்றின்பால் உய்ப்ப தறிவு | |
| Wisdom checks the straying senses | |
| Expels evils, impels goodness | |
| எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் | |
| மெய்ப்பொருள் காண்பது அறிவு | |
| To grasp the Truth from everywhere | |
| From everyone is wisdom fair | |
| எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் | |
| நுண்பொருள் காண்பது அறிவு | |
| Speaking out thoughts in clear trends | |
| Wisdom subtle sense comprehends | |
| உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் | |
| கூம்பலும் இல்ல தறிவு | |
| The wise-world the wise befriend | |
| They bloom nor gloom, equal in mind | |
| எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு | |
| அவ்வ துறைவது அறிவு | |
| As moves the world so move the wise | |
| In tune with changing times and ways | |
| அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் | |
| அஃதறி கல்லா தவர் | |
| The wise foresee what is to come | |
| The unwise lack in that wisdom | |
| அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது | |
| அஞ்சல் அறிவார் தொழில் | |
| Fear the frightful and act wisely | |
| Not to fear the frightful's folly | |
| எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை | |
| அதிர வருவதோர் நோய் | |
| No frightful evil shocks the wise | |
| Who guard themselves against surprise | |
| அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் | |
| என்னுடைய ரேனும் இலர் | |
| Who have wisdom they are all full | |
| Whatev'r they own, misfits are nil | |
| -- | |
| குற்றங்கடிதல் - Avoiding faults | |
| செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் | |
| பெருக்கம் பெருமித நீர்த்து | |
| Plenty is their prosperity | |
| Who're free from wrath pride lust petty | |
| இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா | |
| உவகையும் ஏதம் இறைக்கு | |
| Mean pride, low pleasure, avarice | |
| These add blemishes to a prince | |
| தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் | |
| கொள்வர் பழிநாணு வார் | |
| Though millet-small their faults might seem | |
| Men fearing disgrace, Palm-tall deem | |
| குற்றமே காக்க பொருளாகக் குற்றமே | |
| அற்றம் தரூஉம் பகை | |
| Watch like treasure freedom from fault | |
| Our fatal foe is that default | |
| வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் | |
| வைத்தூறு போலக் கெடும் | |
| Who fails to guard himself from flaw | |
| Loses his life like flame-lit straw | |
| தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் | |
| என்குற்ற மாகும் இறைக்கு | |
| What fault can be the king's who cures | |
| First his faults, then scans others | |
| செயற்பால செய்யா திவறியான் செல்வம் | |
| உயற்பால தன்றிக் கெடும் | |
| That miser's wealth shall waste and end | |
| Who would not for a good cause spend | |
| பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் | |
| எண்ணப் படுவதொன் றன்று | |
| The gripping greed of miser's heart | |
| Is more than fault the worst apart | |
| வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க | |
| நன்றி பயவா வினை | |
| Never boast yourself in any mood | |
| Nor do a deed that does no good | |
| காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் | |
| ஏதில ஏதிலார் நூல் | |
| All designs of the foes shall fail | |
| If one his wishes guards in veil | |
| -------- | |
| பெரியாரைத் துணைக்கோடல் - Gaining great men's help | |
| அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை | |
| திறனறிந்து தேர்ந்து கொளல் | |
| Weigh their worth and friendship gain | |
| Of men of virtue and mature brain | |
| உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் | |
| பெற்றியார்ப் பேணிக் கொளல் | |
| Cherish the help of men of skill | |
| Who ward and safe-guard you from ill | |
| அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் | |
| பேணித் தமராக் கொளல் | |
| Honour and have the great your own | |
| Is rarest of the rare things known | |
| தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் | |
| வன்மையு ளெல்லாந் தலை | |
| To have betters as intimates | |
| Power of all powers promotes | |
| சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் | |
| சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் | |
| Ministers are the monarch's eyes | |
| Round him should be the right and wise | |
| தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் | |
| செற்றார் செயக்கிடந்த தில் | |
| To move with worthy friends who knows | |
| Has none to fear from frightful foes | |
| இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே | |
| கெடுக்குந் தகைமை யவர் | |
| No foe can foil his powers | |
| whose friends reprove him when he errs | |
| இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் | |
| கெடுப்பா ரிலானுங் கெடும் | |
| The careless king whom none reproves | |
| Ruins himself sans harmful foes | |
| முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் | |
| சார்பிலார்க்கு இல்லை நிலை | |
| No capital, no gain in trade | |
| No prop secure sans good comrade | |
| பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே | |
| நல்லார் தொடர்கை விடல் | |
| To give up good friends is ten times worse | |
| Than being hated by countless foes | |
| --- | |
| சிற்றினஞ் சேராமை - Avoiding mean company | |
| சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் | |
| சுற்றமாச் சூழ்ந்து விடும் | |
| The ignoble the noble fear | |
| The mean hold them as kinsmen dear | |
| நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு | |
| இனத்தியல்ப தாகும் அறிவு | |
| With soil changes water's taste | |
| With mates changes the mental state | |
| மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் | |
| இன்னான் எனப்படுஞ் சொல் | |
| Wisdom depends upon the mind | |
| The worth of man upon his friend | |
| மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு | |
| இனத்துள தாகும் அறிவு | |
| Wisdom seems to come from mind | |
| But it truly flows from the kind | |
| மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் | |
| இனம்தூய்மை தூவா வரும் | |
| Purity of the thought and deed | |
| Comes from good company indeed | |
| மனம்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு | |
| இல்லைநன் றாகா வினை | |
| Pure-hearted get good progeny | |
| Pure friendship acts with victory | |
| மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் | |
| எல்லாப் புகழும் தரும் | |
| Goodness of mind increases gain | |
| Good friendship fosters fame again | |
| மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு | |
| இனநலம் ஏமாப் புடைத்து | |
| Men of wisdom, though good in mind | |
| In friends of worth a new strength find | |
| மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் | |
| இனநலத்தின் ஏமாப் புடைத்து | |
| Good mind decides the future bliss | |
| Good company gains strength to this | |
| நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் | |
| அல்லற் படுப்பதூஉம் இல் | |
| No help good company exeeds; | |
| The bad to untold anguish leads | |
| தெரிந்து செயல்வகை - Deliberation before action | |
| அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் | |
| ஊதியமும் சூழ்ந்து செயல் | |
| Weigh well output the loss and gain | |
| And proper action ascertain | |
| தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு | |
| அரும்பொருள் யாதொன்றும் இல் | |
| Nothing is hard for him who acts | |
| With worthy counsels weighing facts | |
| ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை | |
| ஊக்கார் அறிவுடை யார், | |
| The wise risk not their capital | |
| In doubtful gains and lose their all | |
| தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் | |
| ஏதப்பாடு அஞ்சு பவர் | |
| They who scornful reproach fear | |
| Commence no work not made clear | |
| வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் | |
| பாத்திப் படுப்பதோ ராறு | |
| Who marches without plans and ways | |
| His field is sure to foster foes | |
| செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க | |
| செய்யாமை யானும் கெடும் | |
| Doing unfit action ruins | |
| Failing fit-act also ruins | |
| எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் | |
| எண்ணுவம் என்பது இழுக்கு | |
| Think and dare a proper deed | |
| Dare and think is bad in need | |
| ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று | |
| போற்றினும் பொத்துப் படும் | |
| Toil without a plan ahead | |
| Is doomed to fall though supported | |
| நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் | |
| பண்பறிந் தாற்றாக் கடை | |
| Attune the deeds to habitude | |
| Or ev'n good leads to evil feud | |
| எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு | |
| கொள்ளாத கொள்ளாது உலகு | |
| Do deeds above reproachfulness | |
| The world refutes uncomely mess | |
| வலியறிதல் - Judging strength | |
| வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் | |
| துணைவலியும் தூக்கிச் செயல் | |
| Judge act and might and foeman's strength | |
| The allies' strength and go at length | |
| ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் | |
| செல்வார்க்குச் செல்லாதது இல் | |
| Nothing hampers the firm who know | |
| What they can and how to go | |
| உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி | |
| இடைக்கண் முரிந்தார் பலர் | |
| Many know not their meagre might | |
| Their pride breaks up in boastful fight | |
| அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை | |
| வியந்தான் விரைந்து கெடும் | |
| Who adapts not, outsteps measure | |
| And brags himself-his fall is sure | |
| பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் | |
| சால மிகுத்துப் பெயின் | |
| Even the gentle peacock's plume | |
| Cart's axle breaks by gross volume | |
| நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் | |
| உயிர்க்கிறுதி யாகி விடும் | |
| Beyond the branches' tip who skips | |
| Ends the life as his body rips | |
| ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் | |
| போற்றி வழங்கும் நெறி | |
| Know the limit; grant with measure | |
| This way give and guard your treasure | |
| ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை | |
| போகாறு அகலாக் கடை | |
| The outflow must not be excess | |
| No matter how small income is | |
| அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல | |
| இல்லாகித் தோன்றாக் கெடும் | |
| Who does not know to live in bounds | |
| His life seems rich but thins and ends | |
| உளவரை தூக்காத ஒப்புர வாண்மை | |
| வளவரை வல்லைக் கெடும் | |
| Wealth amassed quickly vanishes | |
| Sans level if one lavishes | |
| - | |
| காலமறிதல் - Knowing proper time | |
| பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் | |
| வேந்தர்க்கு வேண்டும் பொழுது | |
| By day the crow defeats the owl | |
| Kings need right time their foes to quell | |
| பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் | |
| தீராமை ஆர்க்கும் கயிறு | |
| Well-ordered seasoned act is cord | |
| That fortune binds in bon accord | |
| அருவினை என்ப உளவோ கருவியான் | |
| காலம் அறிந்து செயின் | |
| What is hard for him who acts | |
| With proper means and time and tacts? | |
| ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் | |
| கருதி இடத்தாற் செயின் | |
| Choose proper time and act and place | |
| Even the world you win with ease | |
| காலம் கருதி இருப்பர் கலங்காது | |
| ஞாலம் கருது பவர் | |
| Who want to win the world sublime | |
| Wait unruffled biding their time | |
| ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் | |
| தாக்கற்குப் பேருந் தகைத்து | |
| By self-restraint stalwarts keep fit | |
| Like rams retreating but to butt | |
| பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து | |
| உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் | |
| The wise jut not their vital fire | |
| They watch their time with hidden ire | |
| செறுநரைக் காணின் சுமக்க இறுவரை | |
| காணின் கிழக்காம் தலை | |
| Bear with hostiles when you meet them | |
| Fell down their head in fateful time | |
| எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே | |
| செய்தற் கரிய செயல் | |
| When comes the season ripe and rare | |
| Dare and do hard things then and there | |
| கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் | |
| குத்தொக்க சீர்த்த இடத்து | |
| In waiting time feign peace like stork | |
| In fighting time strike like its peck | |
| -------- | |
| இடனறிதல் - Judging the place | |
| தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் | |
| இடங்கண்ட பின்அல் லது | |
| No action take, no foe despise | |
| Until you have surveyed the place | |
| முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் | |
| ஆக்கம் பலவுந் தரும் | |
| Many are gains of fortresses | |
| Ev'n to kings of power and prowess | |
| ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து | |
| போற்றார்கண் போற்றிச் செயின் | |
| Weaklings too withstand foe's offence | |
| In proper fields of strong defence | |
| எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து | |
| துன்னியார் துன்னிச் செயின் | |
| If fighters fight in vantage field | |
| The plans of foes shall be baffled | |
| நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் | |
| நீங்கின் அதனைப் பிற | |
| In water crocodile prevails | |
| In land before others it fails | |
| கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் | |
| நாவாயும் ஓடா நிலத்து | |
| Sea-going ship goes not on shore | |
| Nor on sea the strong-wheeled car | |
| அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை | |
| எண்ணி இடத்தால் செயின் | |
| No aid but daring dash they need | |
| When field is chosen right for deed | |
| சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் | |
| ஊக்கம் அழிந்து விடும் | |
| Though force is small, if place is right | |
| One quells a foe of well-armed might | |
| சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் | |
| உறைநிலத்தோடு ஒட்டல் அரிது | |
| To face a foe at home is vain | |
| Though fort and status are not fine | |
| காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா | |
| வேளாள் முகத்த களிறு | |
| A fox can kill a war tusker | |
| Fearless with feet in deep quagmire | |
| ------ | |
| தெரிந்து தெளிதல் - Testing of men for confidence | |
| அறம்பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின் | |
| திறந்தெரிந்து தேறப் படும் | |
| Pleasure, gold, fear of life Virtue- | |
| Test by these four and trust the true | |
| குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் | |
| நாணுடையான் கட்டே தெளிவு | |
| Spotless name of noble birth | |
| Shamed of stain-that choice is worth | |
| அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் | |
| இன்மை அரிதே வெளிறு | |
| Though deep scholars of stainless sense | |
| Rare is freedom from ignorance | |
| குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் | |
| மிகைநாடி மிக்க கொளல் | |
| Good and evil in man weigh well | |
| Judge him by virtues which prevail | |
| பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் | |
| கருமமே கட்டளைக் கல் | |
| By the touchstone of deeds is seen | |
| If any one is great or mean | |
| அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் | |
| பற்றிலர் நாணார் பழி | |
| Choose not those men without kinsmen | |
| Without affine or shame of sin | |
| காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் | |
| பேதைமை யெல்லாம் தரும் | |
| On favour leaning fools you choose; | |
| Folly in all its forms ensues | |
| தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை | |
| தீரா இடும்பை தரும் | |
| To trust an untried stranger brings | |
| Endless troubles on all our kins | |
| தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் | |
| தேறுக தேறும் பொருள் | |
| Trust not without testing and then | |
| Find proper work for trusted men | |
| தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் | |
| தீரா இடும்பை தரும் | |
| Trust without test; The trusted doubt; | |
| Both entail troubles in and out | |
| -- | |
| தெரிந்து வினையாடல் - Testing and entrusting | |
| நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த | |
| தன்மையான் ஆளப் படும் | |
| Employ the wise who will discern | |
| The good and bad and do good turn | |
| வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை | |
| ஆராய்வான் செய்க வினை | |
| Let him act who resource swells; | |
| Fosters wealth and prevents ills | |
| அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் | |
| நன்குடையான் கட்டே தெளிவு | |
| Trust him in whom these four you see: | |
| Love, wit, non-craving, clarity | |
| எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் | |
| வேறாகும் மாந்தர் பலர் | |
| Though tried and found fit, yet we see | |
| Many differ before duty | |
| அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் | |
| சிறந்தானென்று ஏவற்பாற் றன்று | |
| Wise able men with power invest | |
| Not by fondness but by hard test | |
| செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு | |
| எய்த உணர்ந்து செயல் | |
| Discern the agent and the deed | |
| And just in proper time proceed | |
| இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து | |
| அதனை அவன்கண் விடல் | |
| This work, by this, this man can do | |
| Like this entrust the duty due | |
| வினைக்குரிமை நாடிய பின்றை அவனை | |
| அதற்குரிய னாகச் செயல் | |
| His fitness for the duty scan | |
| Leave him to do the best he can | |
| வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக | |
| நினைப்பானை நீங்கும் திரு | |
| Who do duty for duty's sake | |
| Doubt them; and fortune departs quick | |
| நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் | |
| கோடாமை கோடா துலகு | |
| Worker straight the world is straight | |
| The king must look to this aright | |
| -------- | |
| சுற்றந்தழால் - Cherishing kinsmen | |
| பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் | |
| சுற்றத்தார் கண்ணே யுள | |
| Let fortunes go; yet kinsmen know | |
| The old accustomed love to show | |
| விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா | |
| ஆக்கம் பலவுந் தரும் | |
| The gift of loving Kins bestows | |
| Fadeless fortune's fresh flowers | |
| அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் | |
| கோடின்றி நீர்நிறைந் தற்று | |
| A kinless wealth is like a tank | |
| Which overflows without a bank | |
| சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் | |
| பெற்றத்தால் பெற்ற பயன் | |
| The fruit of growing wealth is gained | |
| When kith and kin are happy found | |
| கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய | |
| சுற்றத்தால் சுற்றப் படும் | |
| Loving words and liberal hand | |
| Encircle kith and kin around | |
| பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின் | |
| மருங்குஉடையார் மாநிலத்து இல் | |
| Large giver and wrathless man | |
| Commands on earth countless kinsmen | |
| காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் | |
| அன்னநீ ரார்க்கே உள | |
| The crows hide not; thy call and eat | |
| Welfare abides a man of heart | |
| பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் | |
| அதுநோக்கி வாழ்வார் பலர் | |
| From public gaze when kings perceive | |
| Each one's merits so many thrive | |
| தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் | |
| காரணம் இன்றி வரும் | |
| Forsaken friends will come and stay | |
| When cause for discord goes away | |
| உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் | |
| இழைத்திருந்து எண்ணிக் கொளல் | |
| Who leaves and returns with motive | |
| The king should test him and receive | |
| ------- | |
| பொச்சாவாமை - Unforgetfulness | |
| இறந்த வெகுளியின் தீதே சிறந்த | |
| உவகை மகிழ்ச்சியிற் சோர்வு | |
| Worse than wrath in excess is | |
| Forgetfulness in joy-excess | |
| பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை | |
| நிச்ச நிரப்புக்கொன் றாங்கு | |
| Negligence kills renown just as | |
| Ceaseless want wisdom destroys | |
| பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து | |
| எப்பால்நூ லோர்க்கும் துணிவு | |
| Forgetful nature fails of fame | |
| All schools of thinkers say the same | |
| அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை | |
| பொச்சாப் புடையார்க்கு நன்கு | |
| The fearful find no fortress here | |
| The forgetful find good never | |
| முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை | |
| பின்னூறு இரங்கி விடும் | |
| Failing foresight the guardless man | |
| Shall rue his folly later on | |
| இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை | |
| வாயின் அதுவொப்பது இல் | |
| Forget none; watch with wakeful care | |
| Miss none; the gain is sans compare | |
| அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் | |
| கருவியால் போற்றிச் செயின் | |
| With cautious care pursue a thing | |
| Impossible there is nothing | |
| புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது | |
| இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் | |
| Do what the wise commend as worth | |
| If not, for seven births no mirth | |
| இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் | |
| மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து | |
| When joy deludes, their fate recall | |
| Whom negligence has made to fall | |
| உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் | |
| உள்ளியது உள்ளப் பெறின் | |
| Easy it is a thing to get | |
| When the mind on it is set | |
| ------ | |
| செங்கோன்மை - Just government | |
| ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் | |
| தேர்ந்துசெய் வஃதே முறை | |
| Test and attest impartially | |
| Consult and act the laws justly | |
| வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் | |
| கோல்நோக்கி வாழும் குடி | |
| The earth looks up to sky and thrives | |
| And mankind to king's rod of justice | |
| அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் | |
| நின்றது மன்னவன் கோல் | |
| The Sage's scripture and virtue spring | |
| From the sceptre of a stately king | |
| குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் | |
| அடிதழீஇ நிற்கும் உலகு | |
| The world clings to the ruler's feet | |
| Whose sceptre clasps the people's heart | |
| இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட | |
| பெயலும் விளையுளும் தொக்கு | |
| Full rains and yields enrich the land | |
| Which is ruled by a righteous hand | |
| வேலன்று வென்றி தருவது மன்னவன் | |
| கோலதூஉம் கோடா தெனின் | |
| Not the spear but the sceptre straight | |
| That brings success to monarch's might | |
| இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை | |
| முறைகாக்கும் முட்டாச் செயின் | |
| The king protects the entire earth | |
| And justice protects his royal worth | |
| எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் | |
| தண்பதத்தான் தானே கெடும் | |
| Hard of access, the unjust king | |
| He shall himself his ruin bring | |
| குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் | |
| வடுவன்று வேந்தன் தொழில் | |
| Save his subjects and chide the wrong | |
| Is flawless duty of a king | |
| கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் | |
| களைகட் டதனொடு நேர் | |
| Killing killers, the king, behold | |
| Weeds removes from cropful field | |
| -------- | |
| கொடுங்கோன்மை - The cruel tyranny | |
| கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு | |
| அல்லவை செய்துஒழுகும் வேந்து | |
| The unjust tyrant oppressor | |
| Is worse than cruel murderer | |
| வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் | |
| கோலொடு நின்றான் இரவு | |
| Sceptered tyrant exacting gold | |
| Is "give" of lanced robber bold | |
| நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் | |
| நாடொறும் நாடு கெடும் | |
| Spy wrongs daily and do justice | |
| Or day by day the realm decays | |
| கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் | |
| சூழாது செய்யும் அரசு | |
| The king shall wealth and subjects lose | |
| If his sceptre he dares abuse | |
| அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே | |
| செல்வத்தைத் தேய்க்கும் படை | |
| Groaning tears caused by tyrant's sway | |
| File the royal wealth away | |
| மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் | |
| மன்னாவாம் மன்னர்க் கொளி | |
| Glory endures by sceptre right | |
| Without it wanes the royal light | |
| துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் | |
| அளியின்மை வாழும் உயிர்க்கு | |
| Dry like the earth without rainfall | |
| Is graceless king to creatures all | |
| இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா | |
| மன்னவன் கோற்கீழ்ப் படின் | |
| To have is worse than having not | |
| If ruler is unjust despot | |
| முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி | |
| ஒல்லாது வானம் பெயல் | |
| The sky withdraws season's shower | |
| If the king misuses his power | |
| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் | |
| காவலன் காவான் எனின் | |
| The *six-functioned forget their lore | |
| Cows give less if kings guard no more | |
| --- | |
| * the six functions are : learning, teaching, giving, | |
| getting, sacrificing, kindling sacrifice - These are duties of Vedic savants | |
| ------ | |
| வெருவந்த செய்யாமை - Avoiding terrorism | |
| தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் | |
| ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து | |
| A king enquires and gives sentence | |
| Just to prevent future offence | |
| கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் | |
| நீங்காமை வேண்டு பவர் | |
| Wield fast the rod but gently lay | |
| This strict mildness prolongs the sway | |
| வெருவந்த செய்துஒழுகும் வெங்கோல னாயின் | |
| ஒருவந்தம் ஒல்லைக் கெடும் | |
| His cruel rod of dreadful deed | |
| Brings king's ruin quick indeed | |
| இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் | |
| உறைகடுகி ஒல்லைக் கெடும் | |
| As men the king a tyrant call | |
| His days dwindled, hasten his fall | |
| அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் | |
| பேஎய்கண் டன்னது உடைத்து | |
| Whose sight is scarce, whose face is foul | |
| His wealth seems watched by a ghoul | |
| கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் | |
| நீடின்றி ஆங்கே கெடும் | |
| Whose word is harsh, whose sight is rude | |
| His wealth and power quickly fade | |
| கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் | |
| அடுமுரண் தேய்க்கும் அரம் | |
| Reproofs rough and punishments rude | |
| Like files conquering power corrode | |
| இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் | |
| சீறின் சிறுகும் திரு | |
| The king who would not take counsels | |
| Rages with wrath-his fortune fails | |
| செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் | |
| வெருவந்து வெய்து கெடும் | |
| The king who builds not fort betimes | |
| Fears his foes in wars and dies | |
| கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது | |
| இல்லை நிலக்குப் பொறை | |
| The crushing burden borne by earth | |
| Is tyrants bound to fools uncouth | |
| ------- | |
| கண்ணோட்டம் - Benign looks | |
| கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை | |
| உண்மையான் உண்டிவ் வுலகு | |
| Living in the world implies | |
| The bounteous dame of benign eyes | |
| கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் | |
| உண்மை நிலக்குப் பொறை | |
| World lives by looks of lovely worth | |
| Who lack them are burdens of earth | |
| பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் | |
| கண்ணோட்டம் இல்லாத கண் | |
| Of tuneless song what is the use? | |
| Without gracious looks what are eyes? | |
| உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் | |
| கண்ணேட்டம் இல்லாத கண் | |
| Except that they are on the face | |
| What for are eyes sans measured grace | |
| கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் | |
| புண்ணென்று உணரப் படும் | |
| Kind looks are jewels for eyes to wear | |
| Without them they are felt as sore | |
| மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ | |
| டியைந்துகண் ணோடா தவர் | |
| Like trees on inert earth they grow | |
| Who don't eye to eye kindness show | |
| கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் | |
| கண்ணோட்டம் இன்மையும் இல் | |
| Ungracious men lack real eyes | |
| Men of real eyes show benign grace | |
| கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு | |
| உரிமை உடைத்திவ் வுலகு | |
| Who gracious are but dutiful | |
| Have right for this earth beautiful | |
| ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் | |
| பொறுத்தாற்றும் பண்பே தலை | |
| To be benign and bear with foes | |
| Who vex us is true virtue's phase | |
| பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க | |
| நாகரிகம் வேண்டு பவர் | |
| Men of graceful courtesy | |
| Take hemlock and look cheerfully | |
| --- | |
| ஒற்றாடல் - Espionage | |
| ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் | |
| தெற்றென்க மன்னவன் கண் | |
| A king should treat these two as eyes | |
| The code of laws and careful spies | |
| எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் | |
| வல்லறிதல் வேந்தன் தொழில் | |
| All that happens, always, to all | |
| The king should know in full detail | |
| ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன் | |
| கொற்றங் கொளக்கிடந்தது இல் | |
| Conquests are not for the monarch | |
| Who cares not for the Spy's remark | |
| வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு | |
| அனைவரையும் ஆராய்வது ஒற்று | |
| His officers, kinsmen and foes | |
| Who watch keenly are worthy spies | |
| கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் | |
| உகாஅமை வல்லதே ஒற்று | |
| Fearless gaze, suspectless guise | |
| Guarding secrets mark the spies | |
| துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து | |
| என்செயினும் சோர்விலது ஒற்று | |
| Guised as monks they gather secrets | |
| They betray them not under threats | |
| மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை | |
| ஐயப்பாடு இல்லதே ஒற்று | |
| A spy draws out other's secrets | |
| Beyond a doubt he clears his facts | |
| ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் | |
| ஒற்றினால் ஒற்றிக் கொளல் | |
| The reports given by one spy | |
| By another spy verify | |
| ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர் | |
| சொல்தொக்க தேறப் படும் | |
| Engage the spies alone, apart | |
| When three agree confirm report | |
| சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் | |
| புறப்படுத்தா னாகும் மறை | |
| Give not the spy open reward | |
| It would divulge the secret heard! | |
| ------ | |
| ஊக்கமுடைமை - Energy | |
| உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார் | |
| உடையது உடையரோ மற்று | |
| To own is to own energy | |
| All others own but lethargy | |
| உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை | |
| நில்லாது நீங்கி விடும் | |
| Psychic heart is wealth indeed | |
| Worldly wealth departs in speed | |
| ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் | |
| ஒருவந்தம் கைத்துடை யார் | |
| he strong in will do not complain | |
| The loss of worldly wealth and gain | |
| ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா | |
| ஊக்க் முடையா னுழை | |
| Fortune enquires, enters with boom | |
| Where tireless strivers have their home | |
| வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் | |
| உள்ளத் தனையது உயர்வு | |
| Water depth is lotus height | |
| Mental strength is men's merit | |
| உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது | |
| தள்ளினும் தள்ளாமை நீர்த்து | |
| Let thoughts be always great and grand | |
| Though they fail their virtues stand | |
| சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் | |
| பட்டுப்பா டூன்றும் களிறு | |
| Elephants are firm when arrows hit | |
| Great minds keep fit ev'n in defeat | |
| உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து | |
| வள்ளியம் என்னும் செருக்கு | |
| Heartless persons cannot boast | |
| "We are liberal to our best" | |
| பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை | |
| வெரூஉம் புலிதாக் குறின் | |
| Huge elephant sharp in tusk quails | |
| When tiger, less in form, assails | |
| உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் | |
| மரம்மக்க ளாதலே வேறு | |
| Mental courage is true manhood | |
| Lacking that man is like a wood | |
| -------- | |
| மடியின்மை - Freedom from sloth | |
| குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் | |
| மாசூர மாய்ந்து கெடும் | |
| Quenchless lamp of ancestry goes | |
| When foul idleness encloses | |
| மடியை மடியா ஒழுகல் குடியைக் | |
| குடியாக வேண்டு பவர் | |
| To make your home an ideal home | |
| Loath sloth as sloth; refuse it room | |
| மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த | |
| குடிமடியும் தன்னினும் முந்து | |
| The fool who fosters sluggishness | |
| Before he dies ruins his house | |
| குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து | |
| மாண்ட உஞற்றில வர்க்கு | |
| Who strive not high, sunk deep in sloth | |
| Ruin their house by evil growth | |
| நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் | |
| கெடுநீரார் காமக் கலன் | |
| To lag, forget, idle and doze | |
| These four are pleasure boats of loss | |
| படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் | |
| மாண்பயன் எய்தல் அரிது | |
| With all the wealth of lords of earth | |
| The slothful gain nothing of worth | |
| இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து | |
| மாண்ட உஞற்றி லவர் | |
| The slothful lacking noble deeds | |
| Subject themselves to scornful words | |
| மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு | |
| அடிமை புகுத்தி விடும் | |
| If sloth invades a noble house | |
| It will become a slave of foes | |
| குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் | |
| மடியாண்மை மாற்றக் கெடும் | |
| The blots on race and rule shall cease | |
| When one from sloth gets his release | |
| மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் | |
| தாஅய தெல்லாம் ஒருங்கு | |
| The slothless king shall gain en masse | |
| *All regions trod by Lord apace | |
| *Hindu mythology holds that Lord Vishnu | |
| measured with his feet the three worlds | |
| -------- | |
| ஆள்வினையுடைமை - Manly effort | |
| அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் | |
| பெருமை முயற்சி தரும் | |
| Feel not frustrate saying "Tis hard" | |
| Who tries attains striving's reward | |
| வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை | |
| தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு | |
| In doing work don't break and shirk | |
| The world will quit who quits his work | |
| தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே | |
| வேளாண்மை என்னுஞ் செருக்கு | |
| On excellence of industry | |
| Depends magnanimous bounty | |
| தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை | |
| வாளாண்மை போலக் கெடும் | |
| Bounty of man who never strives | |
| Like sword in eunuch's hand it fails | |
| இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் | |
| துன்பம் துடைத்தூன்றும் தூண் | |
| Work who likes and not pleasure | |
| Wipes grief of friends, pillar secure | |
| முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை | |
| இன்மை புகுத்தி விடும் | |
| Industry adds prosperity | |
| Indolence brings but poverty | |
| மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் | |
| தாளுளாள் தாமரையி னாள் | |
| Illuck abides with sloth they say | |
| *Laxmi's gifts with labourers stay | |
| பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து | |
| ஆள்வினை இன்மை பழி | |
| Misfortune is disgrace to none | |
| The shame is nothing learnt or done | |
| தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் | |
| மெய்வருத்தக் கூலி தரும் | |
| Though fate is against fulfilment | |
| Hard labour has ready payment | |
| ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் | |
| தாழாது உஞற்று பவர் | |
| Tireless Toiler's striving hand | |
| Shall leave even the fate behind | |
| *Laxmi the Goddes of wealth and prosperity | |
| --- | |
| இடுக்கணழியாமை - Hope in mishap | |
| இடுக்கண் வருங்கால் நகுக அதனை | |
| அடுத்தூர்வது அஃதொப்பது இல் | |
| Laugh away troubles; there is | |
| No other way to conquer woes | |
| வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் | |
| உள்ளத்தின் உள்ளக் கெடும் | |
| Deluging sorrows come to nought | |
| When wise men face them with firm thought | |
| இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு | |
| இடும்பை படாஅ தவர் | |
| Grief they face and put to grief | |
| Who grieve not grief by mind's relief | |
| மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற | |
| இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து | |
| Who pulls like bulls patiently on | |
| Causes grief to grieve anon | |
| அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற | |
| இடுக்கண் இடுக்கட் படும் | |
| Before the brave grief grieves and goes | |
| Who dare a host of pressing woes | |
| அற்றேமென்று அல்லற்படுபவோ பெற்றேமென்று | |
| ஓம்புதல் தேற்றா தவர் | |
| The wise that never gloat in gain | |
| Do not fret in fateful ruin | |
| இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் | |
| கையாறாக் கொள்ளாதாம் மேல் | |
| The wise worry no more of woes | |
| Knowing body's butt of sorrows | |
| இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் | |
| துன்பம் உறுதல் இலன் | |
| Who seek not joy, deem grief norm | |
| By sorrows do not come to harm | |
| இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் | |
| துன்பம் உறுதல் இலன் | |
| In joy to joy who is not bound | |
| In grief he grieves not dual round! | |
| இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் | |
| ஒன்னார் விழையுஞ் சிறப்பு | |
| His glory is esteemed by foes | |
| Who sees weal in wanton woes! | |
| --- | |
| அமைச்சியல் - STATE CABINET | |
| அமைச்சு - Ministers | |
| கருவியும் காலமும் செய்கையும் செய்யும் | |
| அருவினையும் மாண்டது அமைச்சு | |
| He is minister who chooses | |
| Right means, time, mode and rare ventures | |
| வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு | |
| ஐந்துடன் மாண்டது அமைச்சு | |
| With these he guards people, - by his | |
| Knowledge, firmness and manliness | |
| பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் | |
| பொருத்தலும் வல்லது அமைச்சு | |
| A minister cherishes friends | |
| Divides foes and the parted blends | |
| தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் | |
| சொல்லலும் வல்லது அமைச்சு | |
| A minister must sift reflect | |
| Select and say surely one fact | |
| அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் | |
| திறனறிந்தான் தேர்ச்சித் துணை | |
| Have him for help who virtue knows | |
| Right wisdom speaks, ever apt in acts | |
| மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் | |
| யாஉள முன்னிற் பவை | |
| Which subtler brain can stand before | |
| The keen in brain with learned love? | |
| செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து | |
| இயற்கை அறிந்து செயல் | |
| Albeit you know to act from books | |
| Act after knowing world's outlooks | |
| அறிகொன்று அறியான் எனினும் உறுதி | |
| உழையிருந்தான் கூறல் கடன் | |
| The man in place must tell the facts | |
| Though the ignorant king refutes | |
| பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் | |
| எழுபது கோடி உறும் | |
| Seventy crores of foes are better | |
| Than a minister with mind bitter | |
| முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் | |
| திறப்பாடு இலாஅ தவர் | |
| The unresolved, though well designed | |
| To fulfil an act they have no mind | |
| - | |
| சொல்வன்மை - Power of speech | |
| நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் | |
| யாநலத்து உள்ளதூஉம் அன்று | |
| The goodness called goodness of speech | |
| Is goodness which nothing can reach | |
| ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் | |
| காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு | |
| Since gain or ruin speeches bring | |
| Guard against the slips of tongue | |
| கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கோளாரும் | |
| வேட்ப மொழிவதாஞ் சொல் | |
| A speech is speech that holds ears | |
| And attracts ev'n those that are averse | |
| திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் | |
| பொருளும் அதனினூஉங்கு இல் | |
| Weigh thy words and speak; because | |
| No wealth or virtue words surpass | |
| சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை | |
| வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து | |
| Speak out thy world so that no word | |
| Can win it and say untoward | |
| வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் | |
| மாட்சியின் மாசற்றார் கோள் | |
| Spotless men speak what is sweet | |
| And grasp in others what is meet | |
| சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை | |
| இகல்வெல்லல் யார்க்கும் அரிது | |
| No foe defies the speaker clear | |
| Flawless, puissant, and free from fear | |
| விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது | |
| சொல்லுதல் வல்லார்ப் பெறின் | |
| The world will quickly carry out | |
| The words of counsellors astute | |
| பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற | |
| சிலசொல்லல் தேற்றா தவர் | |
| They overspeak who do not seek | |
| A few and flawless words to speak | |
| இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது | |
| உணர விரித்துரையா தார் | |
| Who can't express what they have learnt | |
| Are bunch of flowers not fragrant | |
| -------- | |
| வினைத்துய்மை - Purity of action | |
| துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் | |
| வேண்டிய எல்லாம் தரும் | |
| Friendship brings gain; but action pure | |
| Does every good thing we desire | |
| என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு | |
| நன்றி பயவா வினை | |
| Eschew always acts that do not | |
| Bring good nor glory on their part | |
| ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை | |
| ஆஅதும் என்னு மவர் | |
| Those in the world desire for fame | |
| Should shun the deed that dims their name | |
| இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் | |
| நடுக்கற்ற காட்சி யவர் | |
| Though perils press the faultless wise | |
| Shun deeds of mean, shameful device | |
| எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் | |
| மற்றன்ன செய்யாமை நன்று | |
| Do not wrong act and grieve, "Alas" | |
| If done, do not repeat it twice | |
| ஈன்றான் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க | |
| சான்றோர் பழிக்கும் வினை | |
| Though she who begot thee hungers | |
| Shun acts denounced by ancient seers | |
| பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் | |
| கழிநல் குரவே தலை | |
| Pinching poverty of the wise | |
| Is more than wealth hoarded by Vice | |
| கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் | |
| முடிந்தாலும் பீழை தரும் | |
| Those who dare a forbidden deed | |
| Suffer troubles though they succeed | |
| அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் | |
| பிற்பயக்கும் நற்பா லவை | |
| Gains from weeping, weeping go | |
| Though lost, from good deeds blessings flow | |
| சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் | |
| கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று | |
| The wealth gathered in guilty ways | |
| Is water poured in wet clay vase | |
| -------- | |
| வினைத்திட்பம் - Powerful acts | |
| வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் | |
| மற்றைய எல்லாம் பிற | |
| A powerful mind does powerful act | |
| And all the rest are imperfect | |
| ஊறொராவ் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் | |
| ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் | |
| Shun failing fuss; fail not purpose | |
| These two are maxims of the wise | |
| கடைகொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் | |
| எற்றா விழுமந் தரும் | |
| The strong achieve and then display | |
| Woe unto work displayed midway | |
| சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் | |
| சொல்லிய வண்ணம் செயல் | |
| Easy it is to tell a fact | |
| But hard it is to know and act | |
| வீறெய்தி மாண்டார் வினைதிட்பம் வேந்தன்கண் | |
| ஊறெய்தி உள்ளப் படும் | |
| Dynamic deeds of a doughty soul | |
| Shall win the praise of king and all | |
| எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் | |
| திண்ணிய ராகப் பெறின் | |
| The will-to-do achieves the deed | |
| When mind that wills is strong indeed | |
| உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு | |
| அச்சாணி அன்னார் உடைத்து | |
| Scorn not the form: for men there are | |
| Like linchpin of big rolling car | |
| கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது | |
| தூக்கம் கடிந்து செயல் | |
| Waver not; do wakefully | |
| The deed resolved purposefully | |
| துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி | |
| இன்பம் பயக்கும் வினை | |
| Do with firm will though pains beset | |
| The deed that brings delight at last | |
| எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் | |
| வேண்டாரை வேண்டாது உலகு | |
| The world merits no other strength | |
| But strength of will-to-do at length | |
| ------- | |
| வினைசெயல்வகை - Modes of action | |
| சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு | |
| தாழ்ச்சியுள் தங்குதல் தீது | |
| When counsel takes a resolve strong | |
| Weak delay of action is wrong | |
| தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க | |
| தூங்காது செய்யும் வினை | |
| Delay such acts as need delay | |
| Delay not acts that need display | |
| ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் | |
| செல்லும்வாய் நோக்கிச் செயல் | |
| It's best to act when feasible | |
| If not see what is possible | |
| வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் | |
| தீயெச்சம் போலத் தெறும் | |
| Work or foe left unfinished | |
| Flare up like fire unextinguished | |
| பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் | |
| இருள்தீர எண்ணிச் செயல் | |
| Money and means, time, place and deed | |
| Decide these five and then proceed | |
| முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் | |
| படுபயனும் பார்த்துச் செயல் | |
| Weigh well the end, hindrance, profit | |
| And then pursue a fitting act | |
| செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை | |
| உள்ளறிவான் உள்ளம் கொளல் | |
| Know first the secret from experts | |
| That is the way of fruitful acts | |
| வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் | |
| யானையால் யானையாத் தற்று | |
| Lure a tusker by a tusker | |
| Achieve a deed by deed better | |
| நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே | |
| ஒட்டாரை ஒட்டிக் கொளல் | |
| Than doing good to friends it is | |
| More urgent to befriend the foes | |
| உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் | |
| கொள்வர் பெரியார்ப் பணிந்து | |
| Small statesmen fearing people's fear | |
| Submit to foes superior | |
| -------- | |
| தூது - The embassy | |
| அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் | |
| பண்புடைமை தூதுரைப்பான் பண்பு | |
| Love, noble birth, good courtesy | |
| Pleasing kings mark true embassy | |
| அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு | |
| இன்றி யமையாத மூன்று | |
| Envoys must bear love for their prince | |
| Knowledge and learned eloquence | |
| நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் | |
| வென்றி வினையுரைப்பான் பண்பு | |
| Savant among savants, he pleads | |
| Before lanced king, triumphant words | |
| அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் | |
| செறிவுடையான் செல்க வினைக்கு | |
| Who has these three: good form, sense, lore | |
| Can act as bold ambassador | |
| தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி | |
| நன்றி பயப்பதாம் தூது | |
| Not harsh, the envoy's winsome ways | |
| Does good by pleasant words concise | |
| கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் | |
| தக்கது அறிவதாம் தூது | |
| Learned; fearless, the envoy tends | |
| Convincing words which time demands | |
| கடனறிந்து காலம் கருதி இடனறிந்து | |
| எண்ணி உரைப்பான் தலை | |
| Knowing duty time and place | |
| The envoy employs mature phrase | |
| தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் | |
| வாய்மை வழியுரைப்பான் பண்பு | |
| The true envoy of three virtues | |
| Is pure helpful and bold in views | |
| விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் - | |
| வாய்சோரா வன்க ணவன் | |
| The envoy who ports the king's message | |
| Has flawless words and heart's courage | |
| இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு | |
| உறுதி பயப்பதாம் தூது | |
| Braving death the bold envoy | |
| Assures his king's safety and joy | |
| மன்னரைச் சேர்ந்தொழுகல் - Walk with kings | |
| அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க | |
| இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் | |
| Move with hostile kings as with fire | |
| Not coming close nor going far | |
| மன்னர் விழைப விழையாமை மன்னரால் | |
| மன்னிய ஆக்கம் தரும் | |
| Crave not for things which kings desire | |
| This brings thee their fruitful favour | |
| போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் | |
| தேற்றுதல் யார்க்கும் அரிது | |
| Guard thyself from petty excess | |
| Suspected least, there's no redress | |
| செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் | |
| ஆன்ற பெரியா ரகத்து | |
| Whisper not; nor smile exchange | |
| Amidst august men's assemblage | |
| எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை | |
| விட்டக்கால் கேட்க மறை | |
| Hear not, ask not the king's secret | |
| Hear only when he lets it out | |
| குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில் | |
| வேண்டுப வேட்பச் சொலல் | |
| Discern his mood and time and tell | |
| No dislikes but what king likes well | |
| வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் | |
| கேட்பினும் சொல்லா விடல் | |
| Tell pleasing things; and never tell | |
| Even if pressed what is futile | |
| இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற | |
| ஒளியோடு ஒழுகப் படும் | |
| As young and kinsman do not slight; | |
| Look with awe king's light and might | |
| கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் | |
| துளக்கற்ற காட்சி யவர் | |
| The clear-visioned do nothing base | |
| Deeming they have the monarch's grace | |
| பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் | |
| கெழுதகைமை கேடு தரும் | |
| Worthless acts based on friendship old | |
| Shall spell ruin and woe untold | |
| --- | |
| குறிப்பறிதல் - Divining the mind | |
| கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் | |
| மாறாநீர் வையக்கு அணி | |
| Who reads the mind by look, untold | |
| Adorns the changeless sea-girt world | |
| ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் | |
| தெய்வத்தோ டொப்பக் கொளல் | |
| Take him as God who reads the thought | |
| Of another man without a doubt | |
| குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் | |
| யாது கொடுத்தும் கொளல் | |
| By sign who scans the sign admit | |
| At any cost in cabinet | |
| குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை | |
| உறுப்போ ரனையரால் வேறு | |
| Untold, he who divines the thought | |
| Though same in form is quite apart | |
| குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் | |
| என்ன பயத்தவோ கண் | |
| Among senses what for is eye | |
| If thought by thought one can't descry? | |
| அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் | |
| கடுத்தது காட்டும் முகம் | |
| What throbs in mind the face reflects | |
| Just as mirror nearby objects | |
| முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் | |
| காயினும் தான்முந் துறும் | |
| Than face what is subtler to tell | |
| First if the mind feels well or ill | |
| முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி | |
| உற்ற துணர்வார்ப் பெறின் | |
| Just standing in front would suffice | |
| For those who read the mind on face | |
| பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் | |
| வகைமை உணர்வார்ப் பெறின் | |
| Friend or foe the eyes will show | |
| To those who changing outlooks know | |
| நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் | |
| கண்ணல்லது இல்லை பிற | |
| The scale of keen discerning minds | |
| Is eye and eye that secrets finds | |
| - | |
| அவையறிதல் - Judging the audience | |
| அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் | |
| தொகையறிந்த தூய்மை யவர் | |
| The pure in thought and eloquence | |
| Adapt their words to audience | |
| இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் | |
| நடைதெரிந்த நன்மை யவர் | |
| Who know the art of speech shall suit | |
| Their chosen words to time in fact | |
| அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் | |
| வகையறியார் வல்லதூஉம் இல் | |
| They speak in vain at length who talk | |
| Words unversed which ears don't take | |
| ஓளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் | |
| வான்சுதை வண்ணம் கொளல் | |
| Before the bright be brilliant light | |
| Before the muff be mortar white | |
| நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் | |
| முந்து கிளவாச் செறிவு | |
| Modest restraint all good excels | |
| Which argues not before elders | |
| ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் | |
| ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு | |
| Tongue-slip before the talented wise | |
| Is like slipping from righteous ways | |
| கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் | |
| சொல்தெரிதல் வல்லா ரகத்து | |
| The learning of the learned shines | |
| Valued by flawless scholar-minds | |
| உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் | |
| பாத்தியுள் நீர்சொரிந் தற்று | |
| To address understanding ones | |
| Is to water beds of growing grains | |
| புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் | |
| நன்கு செலச்சொல்லு வார் | |
| O ye who speak before the keen | |
| Forgetful, address not the mean | |
| அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார் | |
| அல்லார்முன் கோட்டி கொளல் | |
| To hostiles who wise words utters | |
| Pours ambrosia into gutters | |
| -------- | |
| அவையஞ்சாமை - Courage before councils | |
| வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் | |
| தொகையறிந்த தூய்மை யவர் | |
| The pure fail not in power of words | |
| Knowing grand council's moods and modes | |
| கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் | |
| கற்ற செலச்சொல்லு வார் | |
| Among scholars he is scholar | |
| Who holds scholars with learned lore | |
| பகையகத்துச் சாவார் எளியர் அரியர் | |
| அவையகத்து அஞ்சா தவர் | |
| Many brave foes and die in fields | |
| The fearless few face wise councils | |
| கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற | |
| மிக்காருள் மிக்க கொளல் | |
| Impress the learned with your lore | |
| From greater savants learn still more | |
| ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா | |
| மாற்றம் கொடுத்தற் பொருட்டு | |
| Grammar and logic learn so that | |
| Foes you can boldly retort | |
| வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் | |
| நுண்ணவை அஞ்சு பவர்க்கு | |
| To cowards what can sword avail | |
| And books to those who councils fail? | |
| பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து | |
| அஞ்சு மவன்கற்ற நூல் | |
| Like eunuch's sword in field, is vain | |
| His lore who fears men of brain | |
| பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் | |
| நன்கு செலச்சொல்லா தார் | |
| Though learned much his lore is dead | |
| Who says no good before the good | |
| கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் | |
| நல்லார் அவையஞ்சு வார் | |
| Who fear to face good assembly | |
| Are learned idiots, certainly | |
| உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் | |
| கற்ற செலச்சொல்லா தார் | |
| They are breathing dead who dare not | |
| Empress before the wise their art | |
| -- | |
| அரணியல், கூழியல், படையியல் – POLITICS | |
| நாடு - The country | |
| தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் | |
| செல்வரும் சேர்வது நாடு | |
| It's country which has souls of worth | |
| Unfailing yields and ample wealth | |
| பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் | |
| ஆற்ற விளைவது நாடு | |
| The Land has large luring treasure | |
| Where pests are nil and yields are sure | |
| பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு | |
| இறையொருங்கு நேர்வது நாடு | |
| It's land that bears pressing burdens | |
| And pays its tax which king demands | |
| உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் | |
| சேரா தியல்வது நாடு | |
| It is country which is free from | |
| Fierce famine, plague and foemen's harm | |
| பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் | |
| கொல்குறும்பும் இல்லது நாடு | |
| Sects and ruinous foes are nil | |
| No traitors in a land tranquil | |
| கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா | |
| நாடென்ப நாட்டின் தலை | |
| The land of lands no ruin knows | |
| Even in grief its wealth yet grows | |
| இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் | |
| வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு | |
| Waters up and down, hills and streams | |
| With strong forts as limbs country beams | |
| பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் | |
| அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து | |
| Rich yield, delight, defence and wealth | |
| Are jewels of lands with blooming health | |
| நாடென்ப நாடா வளத்தன நாடல்ல | |
| நாட வளந்தரு நாடு | |
| A land is land which yields unsought | |
| Needing hard work the land is nought | |
| ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே | |
| வேந்தமை வில்லாத நாடு | |
| Though a land has thus every thing | |
| It is worthless without a king | |
| -- | |
| அரண் - Fortress | |
| ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் | |
| போற்று பவர்க்கும் பொருள் | |
| The fort is vital for offence | |
| Who fear the foes has its defence | |
| மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் | |
| காடும் உடையது அரண் | |
| A crystal fount, a space a mount | |
| Thick woods form a fort paramount | |
| உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் | |
| அமைவரண் என்றுரைக்கும் நூல் | |
| An ideal fort's so says science: | |
| High, broad, strong and hard for access | |
| சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை | |
| ஊக்கம் அழிப்பது அரண் | |
| Ample in space, easy to hold | |
| The fort foils enemies bold | |
| கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் | |
| நிலைக்கெளிதாம் நீரது அரண் | |
| Impregnable with stores of food | |
| Cosy to live-That fort is good | |
| எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் | |
| நல்லாள் உடையது அரண் | |
| A fort is full of stores and arms | |
| And brave heroes to meet alarms | |
| முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் | |
| பற்றற் கரியது அரண் | |
| Besieging foes a fort withstands | |
| Darts and mines of treacherous hands | |
| முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் | |
| பற்றியார் வெல்வது அரண் | |
| A fort holds itself and defies | |
| The attacks of encircling foes | |
| முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து | |
| வீறெய்தி மாண்டது அரண் | |
| A fort it is that fells the foes | |
| And gains by deeds a name glorious | |
| எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி | |
| இல்லார்கண் இல்லது அரண் | |
| But a fort however grand | |
| Is nil if heroes do not stand | |
| -- | |
| பொருள் செயல்வகை - Way of making wealth | |
| பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் | |
| பொருளல்லது இல்லை பொருள் | |
| Naught exists that can, save wealth | |
| Make the worthless as men of worth | |
| இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை | |
| எல்லாரும் செய்வர் சிறப்பு | |
| The have-nothing poor all despise | |
| The men of wealth all raise and praise | |
| பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் | |
| எண்ணிய தேயத்துச் சென்று | |
| Waneless wealth is light that goes | |
| To every land and gloom removes | |
| அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து | |
| தீதின்றி வந்த பொருள் | |
| The blameless wealth from fairest means | |
| Brings good virtue and also bliss | |
| அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் | |
| புல்லார் புரள விடல் | |
| Riches devoid of love and grace | |
| Off with it; it is disgrace! | |
| உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் | |
| தெறுபொருளும் வேந்தன் பொருள் | |
| Escheats, derelicts; spoils of war | |
| Taxes duties are king's treasure | |
| அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் | |
| செல்வச் செவிலியால் உண்டு | |
| Grace the child of love is nourished | |
| By the wet-nurse of wealth cherished | |
| குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று | |
| உண்டாகச் செய்வான் வினை | |
| Treasures in hand fulfil all things | |
| Like hill-tuskers the wars of kings | |
| செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் | |
| எஃகதனிற் கூரியது இல் | |
| Make wealth; there is no sharper steel | |
| The insolence of foes to quell | |
| ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் | |
| ஏனை இரண்டும் ஒருங்கு | |
| They have joy and virtue at hand | |
| Who acquire treasures abundant | |
| -- | |
| படைமாட்சி - The glory of army | |
| உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் | |
| வெறுக்கையு ளெல்லாம் தலை | |
| The daring well-armed winning force | |
| Is king's treasure and main resource | |
| உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் | |
| தொல்படைக் கல்லால் அரிது | |
| Through shots and wounds brave heroes hold | |
| Quailing not in fall, the field | |
| ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை | |
| நாகம் உயிர்ப்பக் கெடும் | |
| Sea-like ratfoes roar What if? | |
| They perish at a cobra's whiff | |
| அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த | |
| வன்க ணதுவே படை | |
| The army guards its genial flame | |
| Not crushed, routed nor marred in name | |
| கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் | |
| ஆற்ற லதுவே படை | |
| The real army with rallied force | |
| Resists even Death-God fierce | |
| மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் | |
| எனநான்கே ஏமம் படைக்கு | |
| Manly army has merits four:- | |
| Stately-march, faith, honour, valour | |
| தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த | |
| போர்தாங்கும் தன்மை அறிந்து | |
| Army sets on to face the foes | |
| Knowing how the trend of war goes | |
| அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை | |
| படைத்தகையால் பாடு பெறும் | |
| Army gains force by grand array | |
| Lacking in stay or dash in fray | |
| சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் | |
| இல்லாயின் வெல்லும் படை | |
| Army shall win if it is free | |
| From weakness, aversion, poverty | |
| நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை | |
| தலைமக்கள் இல்வழி இல் | |
| With troops in large numbers on rolls | |
| Army can't march missing gen'rals | |
| படைச்செருக்கு - Military pride | |
| என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை | |
| முன்நின்று கல்நின் றவர் | |
| Stand not before my chief, O foes! | |
| Many who stood, in stones repose | |
| கான முயலெய்த அம்பினில் யானை | |
| பிழைத்தவேல் ஏந்தல் இனிது | |
| To lift a lance that missed a tusker | |
| Is prouder than shaft that hit a hare | |
| பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் | |
| ஊராண்மை மற்றதன் எஃகு | |
| Valour is fight with fierce courage | |
| Mercy to the fallen is its edge | |
| கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் | |
| மெய்வேல் பறியா நகும் | |
| At the tusker he flings his lance | |
| One in body smiles another chance | |
| விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் | |
| ஒட்டன்றோ வன்க ணவர்க்கு | |
| When lances dart if heroes wink | |
| "It is a rout" the world will think | |
| விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் | |
| வைக்கும்தன் நாளை எடுத்து | |
| The brave shall deem the days as vain | |
| Which did not battle-wounds sustain | |
| சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் | |
| கழல்யாப்புக் காரிகை நீர்த்து | |
| Their anklets aloud jingle their name | |
| Who sacrifice their life for fame | |
| உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் | |
| செறினும்சீர் குன்றல் இலர் | |
| The king may chide, they pursue strife; | |
| They fear loss of glory; not life | |
| இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே | |
| பிழைத்தது ஒறுக்கிற் பவர் | |
| Who will blame the heroes that lose | |
| Their lives in war to keep their vows? | |
| புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு | |
| இரந்துகோள் தக்கது உடைத்து | |
| Such a death shall be prayed for | |
| Which draws the tears of the ruler | |
| - | |
| நட்பியல் – ALLIANCE | |
| நட்பு - Friendship | |
| செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் | |
| வினைக்கரிய யாவுள காப்பு | |
| Like friendship what's so hard to gain? | |
| That guards one against acts villain? | |
| நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் | |
| பின்நீர பேதையார் நட்பு - Friendship | |
| Good friendship shines like waxing moon, | |
| The bad withers like waning moon | |
| நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் | |
| பண்புடை யாளர் தொடர்பு | |
| Like taste in books good friendship grows | |
| The more one moves the more he knows | |
| நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் | |
| மேற்சென்று இடித்தற் பொருட்டு | |
| Not to laugh is friendship made | |
| But to hit when faults exceed | |
| புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் | |
| நட்பாம் கிழமை தரும் | |
| No close living nor clasping grip | |
| Friendship's feeling heart's fellowship | |
| முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து | |
| அகநக நட்பது நட்பு | |
| Friendship is not more smile on face | |
| It is the smiling heart's embrace | |
| அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் | |
| அல்லல் உழப்பதாம் நட்பு | |
| From ruin friendship saves and shares | |
| The load of pain and right path shows | |
| உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே | |
| இடுக்கண் களைவதுஆம் நட்பு | |
| Friendship hastens help in mishaps | |
| Like hands picking up dress that slips | |
| நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி | |
| ஒல்லும்வாய் ஊன்றும் நிலை | |
| Friendship is enthroned on the strength | |
| That always helps with utmost warmth | |
| இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று | |
| புனையினும் புல்லென்னும் நட்பு | |
| "Such we are and such they are" | |
| Ev'n this boast will friendship mar | |
| ------- | |
| நட்பாராய்தல் - Testing friendship | |
| நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் | |
| வீடில்லை நட்பாள் பவர்க்கு | |
| Than testless friendship nought is worse | |
| For contacts formed will scarcely cease | |
| ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை | |
| தான்சாந் துயரம் தரும் | |
| Friendship made without frequent test | |
| Shall end in grief and death at last | |
| குணனுங் குடிமையும் குற்றமுங் குன்றா | |
| வினனு மறிந்தியாக்க நட்பு | |
| Temper, descent, defects and kins | |
| Trace well and take companions | |
| குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் | |
| கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு | |
| Take as good friend at any price | |
| The nobly born who shun disgrace | |
| அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய | |
| வல்லார்நட் பாய்ந்து கொளல் | |
| Who make you weep and chide wrong trends | |
| And lead you right are worthy friends | |
| கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை | |
| நீட்டி யளப்பதோர் கோல் | |
| Is there a test like misfortune | |
| A rod to measure out kinsmen? | |
| ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் | |
| கேண்மை யொரீஇ விடல் | |
| Keep off contacts with fools; that is | |
| The greatest gain so say the wise | |
| உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க | |
| அல்லற்கண் ணாற்றறுப்பார் நட்பு | |
| Off with thoughts that depress the heart | |
| Off with friends that in woe depart | |
| கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை | |
| யுள்ளினு முள்ளஞ் சுடும் | |
| Friends who betray at ruin's brink | |
| Burn our mind ev'n at death to think | |
| மருவுக மாசற்றார் கேண்மையொன் றீந்தும் | |
| ஒருவுக வொப்பிலார் நட்பு | |
| The blameless ones as friends embarace; | |
| Give something and give up the base | |
| -- | |
| பழைமை - Intimacy | |
| பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் | |
| கிழமையைக் கீழ்ந்திடா நட்பு | |
| That friendship is good amity | |
| Which restrains not one's liberty | |
| நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு | |
| உப்பாதல் சான்றோர் கடன் | |
| Friendship's heart is freedom close; | |
| Wise men's duty is such to please | |
| பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை | |
| செய்தாங்கு அமையாக் கடை | |
| Of long friendship what is the use | |
| Righteous freedom if men refuse? | |
| விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் | |
| கேளாது நட்டார் செயின் | |
| Things done unasked by loving friends | |
| Please the wise as familiar trends! | |
| பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க | |
| நோதக்க நட்டார் செயின் | |
| Offence of friends feel it easy | |
| As folloy or close intimacy | |
| எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் | |
| தொல்லைக்கண் நின்றார் தொடர்பு | |
| They forsake not but continue | |
| In friendship's bounds though loss ensue | |
| அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் | |
| வழிவந்த கேண்மை யவர் | |
| Comrades established in firm love | |
| Though ruin comes waive not their vow | |
| கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு | |
| நாளிழுக்கம் நட்டார் செயின் | |
| Fast friends who list not tales of ill | |
| Though wronged they say "that day is well" | |
| கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை | |
| விடாஅர் விழையும் உலகு | |
| To love such friends the world desires | |
| Whose friendship has unbroken ties | |
| விழையார் விழையப் படுப பழையார்கண் | |
| பண்பின் தலைப்பிரியா தார் | |
| Even foes love for better ends | |
| Those who leave not long-standing friends | |
| தீநட்பு - Bad friendship | |
| பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை | |
| பெருகலிற் குன்றல் இனிது | |
| Swallowing love of soulless men | |
| Had better wane than wax anon | |
| உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை | |
| பெறினும் இழப்பினும் என் | |
| Who fawn in wealth and fail in dearth | |
| Gain or lose; such friends have no worth | |
| உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது | |
| கொள்வாரும் கள்வரும் நேர் | |
| Cunning friends who calculate | |
| Are like thieves and whores wicked | |
| அமரகத்து ஆற் றறுக்கும் கல்லாமா அன்னார் | |
| தமரின் தனிமை தலை | |
| Better be alone than trust in those | |
| That throw in field like faithless horse | |
| செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை | |
| எய்தலின் எய்தாமை நன்று | |
| Friends low and mean that give no help- | |
| Leave them is better than to keep | |
| பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் | |
| ஏதின்மை கோடி உறும் | |
| Million times the wise man's hate | |
| Is better than a fool intimate | |
| நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் | |
| பத்தடுத்த கோடி உறும் | |
| Ten-fold crore you gain from foes | |
| Than from friends who are vain laughers | |
| ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை | |
| சொல்லாடார் சோர விடல் | |
| Without a word those friends eschew | |
| Who spoil deeds which they can do | |
| கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு | |
| சொல்வேறு பட்டார் தொடர்பு | |
| Even in dreams the tie is bad | |
| With those whose deed is far from word | |
| எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ | |
| மன்றில் பழிப்பார் தொடர்பு | |
| Keep aloof from those that smile | |
| At home and in public revile | |
| --- | |
| கூடாநட்பு - False friendship | |
| சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை | |
| நேரா நிரந்தவர் நட்பு | |
| The friendship by an enemy shown | |
| Is anvil in time, to strike you down | |
| இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் | |
| மனம்போல வேறு படும் | |
| Who pretend kinship but are not | |
| Their friendship's fickle like woman's heart | |
| பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் | |
| ஆகுதல் மாணார்க்கு அரிது | |
| They may be vast in good studies | |
| But heartfelt-love is hard for foes | |
| முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா | |
| வஞ்சரை அஞ்சப் படும் | |
| Fear foes whose face has winning smiles | |
| Whose heart is full of cunning guiles | |
| மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் | |
| சொல்லினால் தேறற்பாற்று அன்று | |
| Do not trust in what they tell | |
| Whose mind with your mind goes ill | |
| நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் | |
| ஒல்லை உணரப் படும் | |
| The words of foes is quickly seen | |
| Though they speak like friends in fine | |
| சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் | |
| தீங்கு குறித்தமை யான் | |
| Trust not the humble words of foes | |
| Danger darts from bending bows | |
| தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் | |
| அழுதகண் ணீரும் அனைத்து | |
| Adoring hands of foes hide arms | |
| Their sobbing tears have lurking harms | |
| மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து | |
| நட்பினுள் சாப்புல்லற் பாற்று | |
| In open who praise, at heart despise | |
| Cajole and crush them in friendly guise | |
| பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு | |
| அகநட்பு ஒரீஇ விடல் | |
| When foes, in time, play friendship's part | |
| Feign love on face but not in heart | |
| - | |
| பேதைமை - Folly | |
| பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு | |
| ஊதியம் போக விடல் | |
| This is folly's prominent vein | |
| To favour loss and forego gain | |
| பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை | |
| கையல்ல தன்கட் செயல் | |
| Folly of follies is to lead | |
| A lewd and lawless life so bad | |
| நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் | |
| பேணாமை பேதை தொழில் | |
| Shameless, aimless, callous, listless | |
| Such are the marks of foolishness | |
| ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் | |
| பேதையின் பேதையார் இல் | |
| No fool equals the fool who learns | |
| Knows, teaches, but self-control spurns | |
| ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் | |
| தான்புக் கழுந்தும் அளறு | |
| The fool suffers seven fold hells | |
| In single birth of hellish ills | |
| பொய்படும் ஒன்றொ புனைபூணும் கையறியாப் | |
| பேதை வினைமேற் கொளின் | |
| A know-nothing fool daring a deed | |
| Not only fails but feels fettered | |
| ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை | |
| பெருஞ்செல்வம் உற்றக் கடை | |
| Strangers feast and kinsmen fast | |
| When fools mishandle fortunes vast | |
| மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் | |
| கையொன்று உடைமை பெறின் | |
| Fools possessing something on hand | |
| Like dazed and drunken stupids stand | |
| பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் | |
| பீழை தருவதொன்று இல் | |
| Friendship with fools is highly sweet | |
| For without a groan we part | |
| கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் | |
| குழாஅத்துப் பேதை புகல் | |
| Entrance of fools where Savants meet | |
| Looks like couch trod by unclean feet | |
| புல்லறிவாண்மை - Petty conceit | |
| அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை | |
| இன்மையா வையாது உலகு | |
| Want of wisdom is want of wants | |
| Want of aught else the world nev'r counts | |
| அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் | |
| இல்லை பெறுவான் தவம் | |
| When fool bestows with glee a gift | |
| It comes but by getter's merit | |
| அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை | |
| செறுவார்க்கும் செய்தல் அரிது | |
| The self-torments of fools exceed | |
| Ev'n tortures of their foes indeed | |
| வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை | |
| உடையம்யாம் என்னுஞ் செருக்கு | |
| Stupidity is vanity | |
| That cries "We have sagacity" | |
| கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற | |
| வல்லதூஉம் ஐயம் தரும் | |
| Feigning knowledge that one has not | |
| Leads to doubt ev'n that he has got | |
| அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் | |
| குற்றம் மறையா வழி | |
| Fools their nakedness conceal | |
| And yet their glaring faults reveal | |
| அருமறை சோரும் அறிவிலான் செய்யும் | |
| பெருமிறை தானே தனக்கு | |
| The fool that slights sacred counsels | |
| Upon himself great harm entails | |
| ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் | |
| போஒம் அளவுமோர் நோய் | |
| He listens not nor himself knows | |
| Plague is his life until it goes | |
| காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் | |
| கண்டானாம் தான்கண்ட வாறு | |
| Sans Self-sight in vain one opens Sight | |
| To the blind who bet their sight as right | |
| உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து | |
| அலகையா வைக்கப் படும் | |
| To people's "Yes" who proffer "No" | |
| Deemed as ghouls on earth they go | |
| -- | |
| இகல் - Hatred | |
| இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் | |
| பண்பின்மை பாரிக்கும் நோய் | |
| Hatred is a plague that divides | |
| And rouses illwill on all sides | |
| பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி | |
| இன்னாசெய் யாமை தலை | |
| Rouse not hatred and confusion | |
| Though foes provoke disunion | |
| இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவவில்லாத் | |
| தாவில் விளக்கம் தரும் | |
| Shun the plague of enmity | |
| And win everlasting glory | |
| இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் | |
| துன்பத்துள் துன்பம் கெடின் | |
| Hate-the woe of woes destroy; | |
| Then joy of joys you can enjoy | |
| இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே | |
| மிகலூக்கும் தன்மை யவர் | |
| Who can overcome them in glory | |
| That are free from enmity? | |
| இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை | |
| தவலும் கெடலும் நணித்து | |
| His fall and ruin are quite near | |
| Who holds enmity sweet and dear | |
| மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் | |
| இன்னா அறிவி னவர் | |
| They cannot see the supreme Truth | |
| Who hate and injure without ruth | |
| இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை | |
| மிகலூக்கின் ஊக்குமாம் கேடு | |
| To turn from enmity is gain | |
| Fomenting it brings fast ruin | |
| இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை | |
| மிகல்காணும் கேடு தரற்கு | |
| Fortune favours when hate recedes | |
| Hatred exceeding ruin breeds | |
| இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் | |
| நன்னயம் என்னும் செருக்கு | |
| All evils come from enmity | |
| All goodness flow from amity | |
| ---- | |
| பகைமாட்சி - Noble hostility | |
| வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா | |
| மெலியார்மேல் மேக பகை | |
| Turn from strife with foes too strong | |
| With the feeble for battle long | |
| அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் | |
| என்பரியும் ஏதிலான் துப்பு | |
| Loveless, aidless, powerless king | |
| Can he withstand an enemy strong? | |
| அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் | |
| தஞ்சம் எளியன் பகைக்கு | |
| Unskilled, timid, miser, misfit | |
| He is easy for foes to hit | |
| நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் | |
| யாங்கணும் யார்க்கும் எளிது | |
| The wrathful restive man is prey | |
| To any, anywhere any day | |
| வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் | |
| பண்பிலன் பற்றார்க்கு இனிது | |
| Crooked, cruel, tactless and base | |
| Any foe can fell him with ease | |
| காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் | |
| பேணாமை பேணப் படும் | |
| Blind in rage and mad in lust | |
| To have his hatred is but just | |
| கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து | |
| மாணாத செய்வான் பகை | |
| Pay and buy his enmity | |
| Who muddles chance with oddity | |
| குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு | |
| இனனிலனாம் ஏமாப்பு உடைத்து | |
| With no virtue but full of vice | |
| He loses friends and delights foes | |
| செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா | |
| அஞ்சும் பகைவர்ப் பெறின் | |
| The joy of heroes knows no bounds | |
| When timid fools are opponents | |
| கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் | |
| ஒல்லானை ஒல்லாது ஒளி | |
| Glory's light he will not gain | |
| Who fails to fight a fool and win | |
| -- | |
| பகைத்திறந் தெரிதல் - Apparising enemies | |
| பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் | |
| நகையேயும் வேண்டற்பாற்று அன்று | |
| Let not one even as a sport | |
| The ill-natured enmity court | |
| வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க | |
| சொல்லே ருழவர் பகை | |
| Incur the hate of bow-ploughers | |
| But not the hate of word-ploughers | |
| ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் | |
| பல்லார் பகைகொள் பவன் | |
| Forlorn, who rouses many foes | |
| The worst insanity betrays | |
| பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் | |
| தகைமைக்கண் தங்கிற்று உலகு | |
| This world goes safely in his grace | |
| Whose heart makes friends even of foes | |
| தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் | |
| இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று | |
| Alone, if two foes you oppose | |
| Make one of them your ally close | |
| தேறினும் தேறா விடினும் அழிவின்கண் | |
| தேறான் பகாஅன் விடல் | |
| Trust or distrust; during distress | |
| Keep aloof; don't mix with foes | |
| நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க | |
| மென்மை பகைவ ரகத்து | |
| To those who know not, tell not your pain | |
| Nor your weakness to foes explain | |
| வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் | |
| பகைவர்கண் பட்ட செருக்கு | |
| Know how and act and defend well | |
| The pride of enemies shall fall | |
| இளைதாக முள்மரம் கொல்க களையுநர் | |
| கைகொல்லும் காழ்த்த விடத்து | |
| Cut off thorn-trees when young they are; | |
| Grown hard, they cut your hands beware | |
| உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் | |
| செம்மல் சிதைக்கலா தார் | |
| To breathe on earth they are not fit | |
| Defying foes who don't defeat | |
| - | |
| உட்பகை - Secret foe | |
| நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் | |
| இன்னாவாம் இன்னா செயின் | |
| Traitorous kinsmen will make you sad | |
| As water and shade do harm when bad | |
| வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக | |
| கேள்போல் பகைவர் தொடர்பு | |
| You need not sword-like kinsmen fear | |
| Fear foes who feign as kinsmen dear | |
| உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்து | |
| மட்பகையின் மாணத் தெறும் | |
| The secret foe in days evil | |
| Will cut you, beware, like potters' steel | |
| மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா | |
| ஏதம் பலவுந் தரும் | |
| The evil-minded foe within | |
| Foments trouble, spoils kinsmen! | |
| உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் | |
| ஏதம் பலவுந் தரும் | |
| A traitor among kinsmen will | |
| Bring life-endangering evil | |
| ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் | |
| பொன்றாமை ஒன்றல் அரிது | |
| Discord in kings' circle entails | |
| Life-destroying deadly evils | |
| செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே | |
| உட்பகை உற்ற குடி | |
| A house hiding hostiles in core | |
| Just seems on like the lid in jar | |
| அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது | |
| உட்பகை உற்ற குடி | |
| By secret spite the house wears out | |
| Like gold crumbling by file's contact | |
| எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் | |
| உட்பகை உள்ளதாம் கேடு | |
| Ruin lurks in enmity | |
| As slit in sesame though it be | |
| உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் | |
| பாம்போடு உடனுறைந் தற்று | |
| Dwell with traitors that hate in heart | |
| Is dwelling with snake in selfsame hut | |
| -- | |
| பெரியாரைப் பிழையாமை - Offend not the great | |
| ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் | |
| போற்றலு ளெல்லாம் தலை | |
| Not to spite the mighty ones | |
| Safest safeguard to living brings | |
| பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் | |
| பேரா இடும்பை தரும் | |
| To walk unmindful of the great | |
| Shall great troubles ceaseless create | |
| கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் | |
| ஆற்று பவர்கண் இழுக்கு | |
| Heed not and do, if ruin you want | |
| Offence against the mighty great | |
| கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு | |
| ஆற்றாதார் இன்னா செயல் | |
| The weak who insult men of might | |
| Death with their own hands invite | |
| யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் | |
| வேந்து செறப்பட் டவர் | |
| Where can they go and thrive where | |
| Pursued by powerful monarch's ire? | |
| எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் | |
| பெரியார்ப் பிழைத்தொழுகு வார் | |
| One can escape in fire caught | |
| The great who offends escapes not | |
| வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் | |
| தகைமாண்ட தக்கார் செறின் | |
| If holy mighty sages frown | |
| Stately gifts and stores who can own? | |
| குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு | |
| நின்றன்னார் மாய்வர் நிலத்து | |
| When hill-like sages are held small | |
| The firm on earth lose home and all | |
| ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து | |
| வேந்தனும் வேந்து கெடும் | |
| Before the holy sage's rage | |
| Ev'n Indra's empire meets damage | |
| இறந்தமைந்த சார்புடைய ரா யினும் உய்யார் | |
| சிறந்தமைந்த சீரார் செறின் | |
| Even mighty aided men shall quail | |
| If the enraged holy seers will | |
| - | |
| பெண்வழிச்சேறல் - Being led by women | |
| மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் | |
| வேண்டாப் பொருளும் அது | |
| Who dote on wives lose mighty gain | |
| That lust, dynamic men disdain | |
| பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் | |
| நாணாக நாணுத் தரும் | |
| Who dotes, unmanly, on his dame | |
| His wealth to him and all is shame | |
| இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் | |
| நல்லாருள் நாணுத் தரும் | |
| Who's servile to his wife always | |
| Shy he feels before the wise | |
| மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் | |
| வினையாண்மை வீறெய்தல் இன்று | |
| Fearing his wife salvationless | |
| The weaklings' action has no grace | |
| இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் | |
| நல்லார்க்கு நல்ல செயல் | |
| Who fears his wife fears always | |
| Good to do to the good and wise | |
| இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் | |
| அமையார்தோள் அஞ்சு பவர் | |
| Who fear douce arms of their wives | |
| Look petty even with god-like lives | |
| பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் | |
| பெண்ணே பெருமை உடைத்து | |
| Esteemed more is women bashful | |
| Than man servile unto her will | |
| நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் | |
| பெட்டாங்கு ஒழுகு பவர் | |
| By fair-browed wives who are governed | |
| Help no friends nor goodness tend | |
| அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் | |
| பெண்ஏவல் செய்வார்கண் இல் | |
| No virtue riches nor joy is seen | |
| In those who submit to women | |
| எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் | |
| பெண்சேர்ந்தாம் பேதைமை இல் | |
| Thinkers strong and broad of heart | |
| By folly on fair sex do not dote | |
| ------- | |
| வரைவின் மகளிர் - Wanton women | |
| அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் | |
| இன்சொல் இழுக்குத் தரும் | |
| For gold, not love their tongue cajoles | |
| Men are ruined by bangled belles | |
| பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் | |
| நயன்தூக்கி நள்ளா விடல் | |
| Avoid ill-natured whores who feign | |
| Love only for their selfish gain | |
| பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் | |
| ஏதில் பிணந்தழீஇ யற்று | |
| The false embrace of whores is like | |
| That of a damned corpse in the dark | |
| பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள் | |
| ஆயும் அறிவி னவர் | |
| The wise who seek the wealth of grace | |
| Look not for harlots' low embrace | |
| பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் | |
| மாண்ட அறிவி னவர் | |
| The lofty wise will never covet | |
| The open charms of a vile harlot | |
| தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் | |
| புன்னலம் பாரிப்பார் தோள் | |
| Those who guard their worthy fame | |
| Shun the wanton's vaunting charm | |
| நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் | |
| பேணிப் புணர்பவர் தோள் | |
| Hollow hearts alone desire | |
| The arms of whores with hearts elsewere | |
| ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப | |
| மாய மகளிர் முயக்கு | |
| Senseless fools are lured away | |
| By arms of sirens who lead astray | |
| வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் | |
| பூரியர்கள் ஆழும் அளறு | |
| The soft jewelled arms of whores are hell | |
| Into which the degraded fall | |
| இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் | |
| திருநீக்கப் பட்டார் தொடர்பு | |
| Double-minded whores, wine and dice | |
| Are lures of those whom fortune flies | |
| - | |
| கள்ளுண்ணாமை - Not drinking liquor | |
| உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் | |
| கட்காதல் கொண்டொழுகு வார் | |
| Foes fear not who for toddy craze | |
| The addicts daily their glory lose | |
| உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் | |
| எண்ணப் படவேண்டா தார் | |
| Drink not liquor; but let them drink | |
| Whom with esteem the wise won't think | |
| ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் | |
| சான்றோர் முகத்துக் களி | |
| The drunkard's joy pains ev'n mother's face | |
| How vile must it look for the wise? | |
| நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்ளென்னும் | |
| பேணாப் பெருங்குற்றத் தார்க்கு | |
| Good shame turns back from him ashamed | |
| Who is guilty of wine condemned | |
| கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து | |
| மெய்யறி யாமை கொளல் | |
| To pay and drink and lose the sense | |
| Is nothing but rank ignorance | |
| துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் | |
| நஞ்சுண்பார் கள்ளுண் பவர் | |
| They take poison who take toddy | |
| And doze ev'n like a dead body | |
| உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் | |
| கள்ளொற்றிக் கண்சாய் பவர் | |
| The secret drunkards' senses off | |
| Make the prying public laugh | |
| களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து | |
| ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் | |
| Don't say "I'm not a drunkard hard" | |
| The hidden fraud is known abroad | |
| களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் | |
| குளித்தானைத் தீத்துரீஇ யற்று | |
| Can torch search one in water sunk? | |
| Can reason reach the raving drunk? | |
| கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் | |
| உள்ளான்கொல் உண்டதன் சோர்வு | |
| The sober seeing the drunkard's plight | |
| On selves can't they feel same effect? | |
| சூது - Gambling | |
| வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் | |
| தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று | |
| Avoid gambling, albeit you win | |
| Gulping bait-hook what does fish gain? | |
| ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் | |
| நன்றெய்தி வாழ்வதோர் ஆறு | |
| Can gamblers in life good obtain | |
| Who lose a hundred one to gain? | |
| உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் | |
| போஒய்ப் புறமே படும் | |
| If kings indulge in casting dice | |
| All their fortune will flow to foes | |
| சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் | |
| வறுமை தருவதொன்று இல் | |
| Nothing will make you poor like game | |
| Which adds to woes and ruins fame | |
| கவறும் கழகமும் கையும் தருக்கி | |
| இவறியார் இல்லாகி யார் | |
| The game, game-hall and gambler's art | |
| Who sought with glee have come to nought | |
| அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் | |
| முகடியால் மூடப்பட்ட டார் | |
| Men swallowed by the ogress, dice | |
| Suffer grief and want by that vice | |
| பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் | |
| கழகத்துக் காலை புகின் | |
| If men their time in game-den spend | |
| Ancestral wealth and virtues end | |
| பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து | |
| அல்லல் உழப்பிக்கும் சூது | |
| Game ruins wealth and spoils grace | |
| Leads to lies and wretched woes | |
| உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் | |
| அடையாவாம் ஆயம் கொளின் | |
| Dress, wealth, food, fame, learning-these five | |
| In gambler's hand will never thrive | |
| இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் | |
| உழத்தொறூஉம் காதற்று உயிர் | |
| Love for game grows with every loss | |
| As love for life with sorrows grows | |
| - | |
| மருந்து - Medicine | |
| மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் | |
| வளிமுதலா எண்ணிய மூன்று | |
| Wind, bile and phlegm three cause disease | |
| So doctors deem it more or less | |
| மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது | |
| அற்றது போற்றி உணின் | |
| After digestion one who feeds | |
| His body no medicine needs | |
| அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு | |
| பெற்றான் நெடிதுஉய்க்கு மாறு | |
| Eat food to digestive measure | |
| Life in body lasts with pleasure | |
| அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல | |
| துய்க்க துவரப் பசித்து | |
| Know digestion; with keen appetite | |
| Eat what is suitable and right | |
| மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் | |
| ஊறுபாடு இல்லை உயிர்க்கு | |
| With fasting adjusted food right | |
| Cures ills of life and makes you bright | |
| இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் | |
| கழிபே ரிரையான்கண் நோய் | |
| Who eats with clean stomach gets health | |
| With greedy glutton abides ill-health | |
| தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் | |
| நோயள வின்றிப் படும் | |
| who glut beyond the hunger's fire | |
| Suffer from untold diseases here | |
| நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் | |
| வாய்நாடி வாய்ப்பச் செயல் | |
| Test disease, its cause and cure | |
| And apply remedy that is sure | |
| உற்றான் அளவும் பிணியளவும் காலமும் | |
| கற்றான் கருதிச் செயல் | |
| Let the skilful doctor note | |
| The sickmen, sickness, season and treat | |
| உற்றவன் தீர்ப்பான் மருந்து - Medicine உழைச் செல்வானென்று | |
| அப்பால்நாற் கூற்றே மருந்து | |
| Patient, doctor, medicine and nurse | |
| Are four-fold codes of treating course | |
| குடி - Nobility | |
| இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் | |
| செப்பமும் நாணும் ஒருங்கு | |
| Right-sense and bashfulness adorn | |
| By nature only the noble-born | |
| ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் | |
| இழுக்கார் குடிப்பிறந் தார் | |
| The noble-born lack not these three: | |
| Good conduct, truth and modesty | |
| நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் | |
| வகைஎன்ப வாய்மைக் குடிக்கு | |
| Smile, gift, sweet words and courtesy | |
| These four mark true nobility | |
| அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் | |
| குன்றுவ செய்தல் இலர் | |
| Even for crores, the noble mood | |
| Cannot bend to degrading deed | |
| வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி | |
| பண்பில் தலைப்பிரிதல் இன்று | |
| The means of gift may dwindle; yet | |
| Ancient homes guard their noble trait | |
| சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற | |
| குலம்பற்றி வாழ்தும்என் பார் | |
| Who guard their family prestige pure | |
| Stoop not to acts of cunning lure | |
| குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் | |
| மதிக்கண் மறுப்போல் உயர்ந்து | |
| The faults of nobly-born are seen | |
| Like on the sky the spots of moon | |
| நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் | |
| குலத்தின்கண் ஐயப் படும் | |
| If manners of the good are rude | |
| People deem their pedigree crude | |
| நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் | |
| குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் | |
| Soil's nature is seen in sprout | |
| The worth of birth from words flow out | |
| நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் | |
| வேண்டுக யார்க்கும் பணிவு | |
| All gain good name by modesty | |
| Nobility by humility | |
| - | |
| ஒழிபியல் – MISCELLANEOUS | |
| மானம் - Honour | |
| இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் | |
| குன்ற வருப விடல் | |
| Though needed for your life in main, | |
| From mean degrading acts refrain | |
| சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு | |
| பேராண்மை வேண்டு பவர் | |
| Who seek honour and manly fame | |
| Don't do mean deeds even for name | |
| பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய | |
| சுருக்கத்து வேண்டும் உயர்வு | |
| Be humble in prosperity | |
| In decline uphold dignity | |
| தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் | |
| நிலையின் இழிந்தக் கடை | |
| Like hair fallen from head are those | |
| Who fall down from their high status | |
| குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ | |
| குன்றி அனைய செயின் | |
| Even hill-like men will sink to nought | |
| With abrus-grain-like small default | |
| புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று | |
| இகழ்வார்பின் சென்று நிலை | |
| Why fawn on men that scorn you here | |
| It yields no fame, heaven's bliss neither | |
| ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே | |
| கெட்டான் எனப்படுதல் நன்று | |
| Better it is to die forlorn | |
| Than live as slaves of those who scorn | |
| மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை | |
| பீடழிய வந்த இடத்து | |
| Is nursing body nectar sweet | |
| Even when one's honour is lost? | |
| மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் | |
| உயிர்நீப்பர் மானம் வரின் | |
| Honour lost, the noble expire | |
| Like a yak that loses its hair | |
| இளிவரின் வாழாத மானம் உடையார் | |
| ஒளிதொழுது ஏத்தும் உலகு | |
| Their light the world adores and hails | |
| Who will not live when honour fails | |
| - | |
| பெருமை - Greatness | |
| ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு | |
| அஃதிறந்து வாழ்தும் எனல் | |
| A heart of courage lives in light | |
| Devoid of that one's life is night | |
| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா | |
| செய்தொழில் வேற்றுமை யான் | |
| All beings are the same in birth | |
| But work decides their varied worth | |
| மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் | |
| கீழல்லார் கீழல் லவர் | |
| Ignoble high not high they are | |
| The noble low not low they fare | |
| ஒருமை மகளிரே போலப் பெருமையும் | |
| தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு | |
| Greatness like woman's chastity | |
| Is guarded by self-varacity | |
| பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் | |
| அருமை உடைய செயல் | |
| Great souls when their will is active | |
| Do mighty deeds rare to achieve | |
| சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் | |
| பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு | |
| The petty-natured ones have not | |
| The mind to seek and befriend the great | |
| இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் | |
| சீரல் லவர்கட் படின் | |
| The base with power and opulence | |
| Wax with deeds of insolence | |
| பணியுமாம் என்றும் பெருமை சிறுமை | |
| அணியுமாம் தன்னை வியந்து | |
| Greatness bends with modesty | |
| Meanness vaunts with vanity | |
| பெருமை பெருமிதம் இன்மை சிறுமை | |
| பெருமிதம் ஊர்ந்து விடல் | |
| Greatness is free from insolence | |
| Littleness swells with that offence | |
| அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் | |
| குற்றமே கூறி விடும் | |
| Weakness of others greatness screens | |
| Smallness defects alone proclaims | |
| - | |
| சான்றாண்மை - Sublimity | |
| கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து | |
| சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
| All goodness is duty to them | |
| Who are dutiful and sublime | |
| குணநலம் சான்றோர் நலனே பிறநலம் | |
| எந்நலத்து உள்ளதூஉம் அன்று | |
| Good in the great is character | |
| Than that there is nothing better | |
| அன்புநாண் ஓப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு | |
| ஐந்துசால்பு ஊன்றிய தூண் | |
| Love, truth, regard, modesty, grace | |
| These five are virtue's resting place | |
| கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை | |
| சொல்லா நலத்தது சால்பு | |
| Not to kill is penance pure | |
| Not to slander virtue sure | |
| ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் | |
| மாற்றாரை மாற்றும் படை | |
| Humility is valour's strength | |
| A force that averts foes at length | |
| சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி | |
| துலையல்லார் கண்ணும் கொளல் | |
| To bear repulse e'en from the mean | |
| Is the touch-stone of worthy men | |
| இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் | |
| என்ன பயத்ததோ சால்பு | |
| Of perfection what is the gain | |
| If it returns not joy for pain? | |
| இன்மை ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும் | |
| திண்மைஉண் டாகப் பெறின் | |
| No shame there is in poverty | |
| To one strong in good quality | |
| ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு | |
| ஆழி எனப்படு வார் | |
| Aeons may change but not the seer | |
| Who is a sea of virtue pure | |
| சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் | |
| தாங்காது மன்னோ பொறை | |
| The world will not more bear its weight | |
| If from high virtue fall the great | |
| - | |
| பண்புடைமை - Courtesy | |
| எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் | |
| பண்புடைமை என்னும் வழக்கு | |
| To the polite free of access | |
| Easily comes courteousness | |
| அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் | |
| பண்புடைமை என்னும் வழக்கு | |
| Humanity and noble birth | |
| Develop courtesy and moral worth | |
| உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க | |
| பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு | |
| Likeness in limbs is not likeness | |
| It's likeness in kind courteousness | |
| நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் | |
| பண்புபா ராட்டும் உலகு | |
| The world applauds those helpful men | |
| Whose actions are just and benign | |
| நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் | |
| பண்புஉள பாடறிவார் மாட்டு | |
| The courteous don't even foes detest | |
| For contempt offends even in jest | |
| பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் | |
| மண்புக்கு மாய்வது மன் | |
| The world rests with the mannered best | |
| Or it crumbles and falls to dust | |
| அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் | |
| மக்கட்பண்பு இல்லா தவர் | |
| The mannerless though sharp like file | |
| Are like wooden blocks indocile | |
| நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் | |
| பண்பாற்றா ராதல் கடை | |
| Discourtesy is mean indeed | |
| E'en to a base unfriendly breed | |
| நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் | |
| பகலும்பாற் பட்டன்று இருள் | |
| To those bereft of smiling light | |
| Even in day the earth is night | |
| பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் நன்பால் | |
| கலந்தீமை யால்திரிந்த தற்று | |
| The wealth heaped by the churlish base | |
| Is pure milk soured by impure vase | |
| --- | |
| நன்றியில் செல்வம் - Futile wealth | |
| வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் | |
| செத்தான் செயக்கிடந்தது இல் | |
| Dead is he with wealth in pile | |
| Unenjoyed, it is futile | |
| பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் | |
| மருளானாம் மாணாப் பிறப்பு | |
| The niggard miser thinks wealth is all | |
| He hoards, gives not is born devil | |
| ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் | |
| தோற்றம் நிலக்குப் பொறை | |
| A burden he is to earth indeed | |
| Who hoards without a worthy deed | |
| எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் | |
| நச்சப் படாஅ தவன் | |
| What legacy can he leave behind | |
| Who is for approach too unkind | |
| கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய | |
| கோடிஉண் டாயினும் இல் | |
| What is the good of crores they hoard | |
| To give and enjoy whose heart is hard | |
| ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று | |
| ஈதல் இயல்பிலா தான் | |
| Great wealth unused for oneself nor | |
| To worthy men is but a slur | |
| அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் | |
| பெற்றாள் தமியள்மூத் தற்று | |
| Who loaths to help have-nots, his gold | |
| Is like a spinster-belle grown old | |
| நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் | |
| நச்சு மரம்பழுத் தற்று | |
| The idle wealth of unsought men | |
| Is poison-fruit-tree amidst a town | |
| அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய | |
| ஒண்பொருள் கொள்வார் பிறர் | |
| Others usurp the shining gold | |
| In loveless, stingy, vicious hold | |
| சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி | |
| வறங்கூர்ந் தனையது உடைத்து | |
| The brief want of the rich benign | |
| Is like rainclouds growing thin | |
| -- | |
| நாணுடைமை - Sensitiveness to shame | |
| கருமத்தால் நாணுதல் நாணுத்; திருநுதல் | |
| நல்லவர் நாணுப் பிற | |
| To shrink from evil deed is shame | |
| The rest is blush of fair-faced dame | |
| ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல | |
| நாணுடைமை மாந்தர் சிறப்பு | |
| Food, dress and such are one for all | |
| Modesty marks the higher soul | |
| ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் | |
| நன்மை குறித்தது சால்பு | |
| All lives have their lodge in flesh | |
| Perfection has its home in blush | |
| அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் | |
| பிணிஅன்றோ பீடு நடை | |
| Shame is the jewel of dignity | |
| Shameless swagger is vanity | |
| பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு | |
| உறைபதி என்னும் உலகு | |
| In them resides the sense of shame | |
| Who blush for their and other's blame | |
| நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் | |
| பேணலர் மேலா யவர் | |
| The great refuse the wonder-world | |
| Without modesty's hedge and shield | |
| நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் | |
| நாண்துறவார் நாண்ஆள் பவர் | |
| For shame their life the shame-sensed give | |
| Loss of shame they won't outlive | |
| பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் | |
| அறம்நாணத் தக்கது உடைத்து | |
| Virtue is much ashamed of him | |
| Who shameless does what others shame | |
| குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் | |
| நாணின்மை நின்றக் கடை | |
| Lapse in manners injures the race | |
| Want of shame harms every good grace | |
| நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை | |
| நாணால் உயிர்மருட்டி யற்று | |
| Movements of the shameless in heart | |
| Are string-led puppet show in fact | |
| --- | |
| குடிசெயல்வகை - Promoting family welfare | |
| கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் | |
| பெருமையின் பீடுடையது இல் | |
| No greatness is grander like | |
| Saying "I shall work without slack" | |
| ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் | |
| நீள்வினையால் நீளும் குடி | |
| These two exalt a noble home | |
| Ardent effort and ripe wisdom | |
| குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் | |
| மடிதற்றுத் தான்முந் துறும் | |
| When one resolves to raise his race | |
| Loin girt up God leads his ways | |
| சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் | |
| தாழாது உஞற்று பவர்க்கு | |
| Who raise their races with ceaseless pain | |
| No need for plan; their ends will gain | |
| குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் | |
| சுற்றமாச் சுற்றும் உலகு | |
| Who keeps his house without a blame | |
| People around, his kinship claim | |
| நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த | |
| இல்லாண்மை ஆக்கிக் கொளல் | |
| Who raise their race which gave them birth | |
| Are deemed as men of manly worth | |
| அமரகத்து வன்கண்ணார் போலத் தமரகத்தும் | |
| ஆற்றுவார் மேற்றே பொறை | |
| Like dauntless heroes in battle field | |
| The home-burden rests on the bold | |
| குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து | |
| மானம் கருதக் கெடும் | |
| No season have they who raise their race | |
| Sloth and pride will honour efface | |
| இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் | |
| குற்றம் மறைப்பான் உடம்பு | |
| Is not his frame a vase for woes | |
| Who from mishaps shields his house? | |
| இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் | |
| நல்லாள் இலாத குடி | |
| A house will fall by a mishap | |
| With no good man to prop it up | |
| --- | |
| உழவு - Farming | |
| சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் | |
| உழந்தும் உழவே தலை | |
| Farming though hard is foremost trade | |
| Men ply at will but ploughmen lead | |
| உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது | |
| எழுவாரை எல்லாம் பொறுத்து | |
| Tillers are linch-pin of mankind | |
| Bearing the rest who cannot tend | |
| உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் | |
| தொழுதுண்டு பின்செல் பவர் | |
| They live who live to plough and eat | |
| The rest behind them bow and eat | |
| பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் | |
| அலகுடை நீழ லவர் | |
| Who have the shade of cornful crest | |
| Under their umbra umbrellas rest | |
| இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது | |
| கைசெய்தூண் மாலை யவர் | |
| Who till and eat, beg not; nought hide | |
| But give to those who are in need | |
| உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் | |
| விட்டேம்என் பார்க்கும் நிலை | |
| Should ploughmen sit folding their hands | |
| Desire-free monks too suffer wants | |
| தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் | |
| வேண்டாது சாலப் படும் | |
| Moulds dried to quarter-dust ensure | |
| Rich crops without handful manure | |
| ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் | |
| நீரினும் நன்றதன் காப்பு | |
| Better manure than plough; then weed; | |
| Than irrigating, better guard | |
| செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து | |
| இல்லாளின் ஊடி விடும் | |
| If landsmen sit sans moving about | |
| The field like wife will sulk and pout | |
| இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் | |
| நிலமென்னும் நல்லாள் நகும் | |
| Fair good earth will laugh to see | |
| Idlers pleading poverty | |
| - | |
| நல்குரவு - Poverty | |
| இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் | |
| இன்மையே இன்னா தது | |
| What gives more pain than scarcity? | |
| No pain pinches like poverty | |
| இன்மை எனஒரு பாவி மறுமையும் | |
| இம்மையும் இன்றி வரும் | |
| The sinner Want is enemy dire | |
| Of joys of earth and heaven there | |
| தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக | |
| நல்குரவு என்னும் நசை | |
| The craving itch of poverty | |
| Kills graceful words and ancestry | |
| இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த | |
| சொற்பிறக்கும் சோர்வு தரும் | |
| Want makes even good familymen | |
| Utter words that are low and mean | |
| நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் | |
| துன்பங்கள் சென்று படும் | |
| The pest of wanton poverty | |
| Brings a train of misery | |
| நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் | |
| சொற்பொருள் சோர்வு படும் | |
| The poor men's words are thrown away | |
| Though from heart good things they say | |
| அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் | |
| பிறன்போல நோக்கப் படும் | |
| Even the mother looks as stranger | |
| The poor devoid of character | |
| இன்றும் வருவது கொல்லோ நெருநலும் | |
| கொன்றது போலும் நிரப்பு | |
| The killing Want of yesterday | |
| Will it pester me even to-day? | |
| நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் | |
| யாதொன்றும் கண்பாடு அரிது | |
| One may sleep in the midst of fire | |
| In want a wink of sleep is rare | |
| துப்புரவு இல்லார் துவரத் துறவாமை | |
| உப்பிற்கும் காடிக்கும் கூற்று | |
| Renounce their lives the poor must | |
| Or salt and gruel go to waste | |
| --- | |
| இரவு - Asking | |
| இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் | |
| அவர்பழி தம்பழி யன்று | |
| Demand from those who can supply | |
| Default is theirs when they deny | |
| இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை | |
| துன்பம் உறாஅ வரின் | |
| Even demand becomes a joy | |
| When the things comes without annoy | |
| கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று | |
| இரப்புமோ ரேஎர் உடைத்து | |
| Request has charm form open hearts | |
| Who know the duty on their part | |
| இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் | |
| கனவிலும் தேற்றாதார் மாட்டு | |
| Like giving even asking seems | |
| From those who hide not even in dreams | |
| கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று | |
| இரப்பவர் மேற்கொள் வது | |
| The needy demand for help because | |
| The world has men who don't refuse | |
| கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை | |
| எல்லாம் ஒருங்கு கெடும் | |
| The pain of poverty shall die | |
| Before the free who don't deny | |
| இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் | |
| உள்ளுள் உடைப்பது உடைத்து | |
| When givers without scorn impart | |
| A thrill of delight fills the heart | |
| இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் | |
| மரப்பாவை சென்றுவந் தற்று | |
| This grand cool world shall move to and fro | |
| Sans Askers like a puppet show | |
| ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் | |
| மேவார் இலாஅக் கடை | |
| Where stands the glory of givers | |
| Without obligation seekers? | |
| இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை | |
| தானேயும் சாலும் கரி | |
| The needy should not scowl at "No" | |
| His need anothers' need must show | |
| * Saint valluvar talks of two kinds of Asking:- | |
| () Asking help for public causes or enterprises | |
| () Begging when one is able to work and this is condemned | |
| -------- | |
| இரவச்சம் - Dread of beggary | |
| கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் | |
| இரவாமை கோடி யுறும் | |
| Not to beg is billions worth | |
| E'en from eye-like friends who give with mirth | |
| இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து | |
| கெடுக உலகியற்றி யான் | |
| Let World-Maker loiter and rot | |
| If "beg and live" be human fate | |
| இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் | |
| வன்மையின் வன்பாட்டது இல் | |
| Nothing is hard like hard saying | |
| "We end poverty by begging" | |
| இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் | |
| காலும் இரவொல்லாச் சால்பு | |
| All space is small before the great | |
| Who beg not e'en in want acute | |
| தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது | |
| உண்ணலி னூங்கினியது இல் | |
| Though gruel thin, nothing is sweet | |
| Like the food earned by labour's sweat | |
| ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு | |
| இரவின் இளிவந்தது இல் | |
| It may be water for the cow | |
| Begging tongue is mean anyhow | |
| இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் | |
| கரப்பார் இரவன்மின் என்று | |
| If beg they must I beg beggers | |
| Not to beg from shrinking misers | |
| இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் | |
| பார்தாக்கப் பக்கு விடும் | |
| The hapless bark of beggary splits | |
| On the rock of refusing hits | |
| இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள | |
| உள்ளதூஉம் இன்றிக் கெடும் | |
| The heart at thought of beggars melts; | |
| It dies at repulsing insults | |
| கரப்பவர்க்கு யாஙகொளிக்குங் கொல்லோ இரப்பவர் | |
| சொல்லாடப் போஒம் உயிர் | |
| The word "No" kills the begger's life | |
| Where can the niggard's life be safe? | |
| - | |
| கயமை - Meanness | |
| மக்களே போல்வர் கயவர் அவரன்ன | |
| ஒப்பாரி யாங்கண்டது இல் | |
| The mean seem men only in form | |
| We have never seen such a sham | |
| நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் | |
| நெஞ்சத்து அவலம் இலர் | |
| The base seem richer than the good | |
| For no care enters their heart or head | |
| தேவர் அனையர் கயவர் அவருந்தாம் | |
| மேவன செய்தொழுக லான் | |
| The base are like gods; for they too | |
| As prompted by their desire do | |
| அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் | |
| மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ் | |
| When the base meets a rake so vile | |
| Him he will exceed, exult and smile | |
| அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் | |
| அவாஉண்டேல் உண்டாம் சிறிது | |
| Fear forms the conduct of the low | |
| Craving avails a bit below | |
| அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட | |
| மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் | |
| The base are like the beaten drum | |
| Since other's secrets they proclaim | |
| ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் | |
| கூன்கைய ரல்லா தவர்க்கு | |
| The base their damp hand will not shake | |
| But for fists clenched their jaws to break | |
| சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் | |
| கொல்லப் பயன்படும் கீழ் | |
| The good by soft words profits yield | |
| The cane-like base when crushed and killed | |
| உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் | |
| வடுக்காண வற்றாகும் கீழ் | |
| Faults in others the mean will guess | |
| On seeing how they eat and dress | |
| எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் | |
| விற்றற்கு உரியர் விரைந்து | |
| The base hasten to sell themselves | |
| From doom to flit and nothing else | |
| -- | |
| இன்பத்துப்பால்- Part III - NATURE OF LOVE | |
| களவியல் - ON SECRET OF MARRIAGE | |
| தகையணங்குறுத்தல் Beauty's dart | |
| குறிப்பறிதல் Signs speak the heart | |
| புணர்ச்சி மகிழ்தல் Embrace bliss | |
| நலம் புனைந்துரைத்தல் Beauty extolled | |
| காதற் சிறப்புரைத்தல் Love's excellence | |
| நாணுத் துறவுரைத்தல் Decorum defied | |
| அலர் அறிவுறுத்தல் Public clamour | |
| கற்பியல் - CHASTE WEDDED LOVE | |
| பிரிவாற்றாமை Pangs of separation | |
| படர்மெலிந்திரங்கல் Wailing of pining love | |
| கண்விதுப்பழிதல் Wasteful look for wistful love | |
| பசப்புறு பருவரல் Wailing over pallor | |
| தனிப்படர் மிகுதி Pining alone | |
| நினைந்தவர் புலம்பல் Sad memories | |
| கனவுநிலை உரைத்தல் Dream visions | |
| பொழுதுகண்டிரங்கல் Eventide sigh | |
| உறுப்புநலன் அழிதல் Limbs languish | |
| நெஞ்சொடு கிளத்தல் Soliloquy | |
| நிறையழிதல் Reserve lost | |
| அவர்வயின் விதும்பல் Mutual yearning | |
| குறிப்பறிவுறுத்தல் Feeling surmised | |
| புணர்ச்சி விதும்பல் Longing for reunion | |
| நெஞ்சொடு புலத்தல் Chiding the heart | |
| புலவி Bouderic | |
| புலவி நுணுக்கம் Feigned anger | |
| ஊடலுவகை Sulking charm | |
| ---- | |
| தகையணங்குறுத்தல் - Beauty's dart | |
| அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை | |
| மாதர்கொல் மாலும்என் நெஞ்சு | |
| Is it an angel? A fair peacock | |
| Or jewelled belle? To my mind a shock! | |
| நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு | |
| தானைக்கொண் டன்னது உடைத்து | |
| The counter glances of this belle | |
| Are armied dart of the Love-Angel | |
| பண்டறியேன் கூறறென் பதனை இனியறிந்தேன் | |
| பெண்டகையால் பேரமர்க் கட்டு | |
| Not known before - I spy Demise | |
| In woman's guise with battling eyes | |
| கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் | |
| பேதைக்கு அமர்த்தன கண் | |
| This artless dame has darting eyes | |
| That drink the life of men who gaze | |
| கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் | |
| நோக்கம்இம் மூன்றும் உடைத்து | |
| Is it death, eye or doe? All three | |
| In winsome woman's look I see | |
| கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் | |
| செய்யல மன்இவள் கண் | |
| If cruel brows unbent, would screen | |
| Her eyes won't cause me trembling pain | |
| கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் | |
| படாஅ முலைமேல் துகில் | |
| Vest on the buxom breast of her | |
| Looks like rutting tusker's eye-cover | |
| ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் | |
| நண்ணாரும் உட்கும்என் பீடு | |
| Ah these fair brows shatter my might | |
| Feared by foemen yet to meet | |
| பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு | |
| அணிஎவனோ ஏதில தந்து | |
| Which jewel can add to her beauty | |
| With fawn-like looks and modesty? | |
| உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் | |
| கண்டார் மகிழ்செய்தல் இன்று | |
| To the drunk alone is wine delight | |
| Nothing delights like love at sight | |
| -- | |
| குறிப்பறிதல் - Signs speak the heart | |
| இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு | |
| நோய்நோககொன் றந்நோய் மருந்து | |
| Her painted eyes, two glances dart | |
| One hurts; the other heals my heart | |
| கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் | |
| செம்பாகம் அன்று பெரிது | |
| Her furtive lightning glance is more | |
| Than enjoyment of sexual lore | |
| நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் | |
| யாப்பினுள் அட்டிய நீர் | |
| She looked; looking bowed her head | |
| And love-plant was with water fed | |
| யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் | |
| தான்நோக்கி மெல்ல நகும் | |
| I look; she droops to earth awhile | |
| I turn; she looks with gentle smile | |
| குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் | |
| சிறக்கணித்தாள் போல நகும் | |
| No direct gaze; a side-long glance | |
| She darts at me and smiles askance | |
| உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் | |
| ஒல்லை உணரப் படும் | |
| Their words at first seem an offence | |
| But quick we feel them friendly ones | |
| செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் | |
| உறாஅர்போன்று உற்றார் குறிப்பு | |
| Harsh little words; offended looks, | |
| Are feigned consenting love-lorn tricks | |
| அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் | |
| பசையினள் பைய நகும் | |
| What a grace the slim maid has! | |
| As I look she slightly smiles | |
| ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் | |
| காதலார் கண்ணே யுள | |
| Between lovers we do discern | |
| A stranger's look of unconcern | |
| கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் | |
| என்ன பயனும் இல | |
| The words of mouth are of no use | |
| When eye to eye agrees the gaze | |
| -- | |
| புணர்ச்சி மகிழ்தல் - Embrace bliss | |
| கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் | |
| ஓண்டொடி கண்ணே உள | |
| In this bangled beauty dwell | |
| The joys of sight sound touch taste smell | |
| பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை | |
| தன்நோய்க்குத் தானே மருந்து | |
| The cure for ailment is somewhere | |
| For fair maid's ill she is the cure | |
| தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் | |
| தாமரைக் கண்ணான் உலகு | |
| Is lotus-eyed lord's heaven so sweet | |
| As sleep in lover's arms so soft? | |
| நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் | |
| தீயாண்டுப் பெற்றாள் இவள் | |
| Away it burns and cools anear | |
| Wherefrom did she get this fire? | |
| வேட்ட பொழுதின் அவையவை போலுமே | |
| தோட்டார் கதுப்பினாள் தோள் | |
| The arms of my flower-tressed maid | |
| Whatever I wish that that accord | |
| உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு | |
| அமிழ்தின் இயன்றன தோள் | |
| My simple maid has nectar arms | |
| Each embrace brings life-thrilling charms | |
| தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் | |
| அம்மா அரிவை முயக்கு | |
| Ah the embrace of this fair dame | |
| Is like sharing one's food at home | |
| வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை | |
| போழப் படாஅ முயக்கு | |
| Joy is the fast embrace that doth | |
| Not admit e'en air between both | |
| ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் | |
| கூடியார் பெற்ற பயன் | |
| Sulking, feeling and clasping fast | |
| These three are sweets of lover's tryst | |
| அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் | |
| செறிதோறும் சேயிழை மாட்டு | |
| As knowledge reveals past ignorance | |
| So is the belle as love gets close | |
| நலம் புனைந்துரைத்தல் - Beauty extolled | |
| நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் | |
| மென்னீரள் யாம்வீழ் பவள் | |
| Soft blessed anicha flower, hail | |
| On whom I dote is softer still | |
| மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் | |
| பலர்காணும் பூவொக்கும் என்று | |
| You can't liken flowers by many eyed, | |
| To her bright eyes, O mind dismayed | |
| முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் | |
| வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு | |
| The bamboo-shouldered has pearl-like smiles | |
| Fragrant breath and lance-like eyes | |
| காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் | |
| மாணிழை கண்ணொவ்வேம் என்று | |
| Lily droops down to ground and says | |
| I can't equal the jewelled-one's eyes | |
| அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு | |
| நல்ல படாஅ பறை | |
| Anicha flower with stem she wears | |
| To her breaking waist sad-drum-blares! | |
| மதியும் மடந்தை முகனும் அறியா | |
| பதியின் கலங்கிய மீன் | |
| Stars are confused to know which is | |
| The moon and which is woman's face | |
| அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல | |
| மறுவுண்டோ மாதர் முகத்து | |
| Are there spots on the lady's face | |
| Just as in moon that changes phase? | |
| மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் | |
| காதலை வாழி மதி | |
| Like my lady's face if you shine | |
| All my love to you; hail O moon! | |
| மலர்ன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் | |
| பலர்காணத் தோன்றல் மதி | |
| Like the face of my flower-eyed one | |
| If you look, then shine alone O moon! | |
| அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் | |
| அடிக்கு நெருஞ்சிப் பழம் | |
| The soft flower and the swan's down are | |
| Like nettles to the feet of the fair | |
| - | |
| காதற் சிறப்புரைத்தல் - Love's excellence | |
| பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி | |
| வாலெயிறு ஊறிய நீர் | |
| Like milk and honey the dew is sweet | |
| From her white teeth whose word is soft | |
| உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன | |
| மடந்தையொடு எம்மிடை நட்பு | |
| Love between me and this lady | |
| Is like bond between soul and body | |
| கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் | |
| திருநுதற்கு இல்லை இடம் | |
| Depart image in my pupil | |
| Giving room to my fair-browed belle! | |
| வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் | |
| அதற்கன்னள் நீங்கு மிடத்து | |
| Life with my jewel is existence | |
| Death it is her severance | |
| உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் | |
| ஒள்ளமர்க் கண்ணாள் குணம் | |
| Can I forget? I recall always | |
| The charms of her bright battling eyes | |
| கண்ணுன்ளின் போகார் இமைப்பின் பருவரார் | |
| நுண்ணியர்எங் காத லவர் | |
| So subtle is my lover's form | |
| Ever in my eyes winking, no harm | |
| கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் | |
| எழுதேம் கரப்பாக்கு அறிந்து | |
| My lover in my eyes abides | |
| I paint them not lest he hides | |
| நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல் | |
| அஞ்சுதும் வேபாக்கு அறிந்து | |
| My lover abides in my heart | |
| I fear hot food lest he feels hot | |
| இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே | |
| எதிலர் என்னும்இவ் வூர் | |
| My eyes wink not lest he should hide | |
| And him as cruel the townsmen chide | |
| உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் | |
| ஏதிலர் என்னும்இவ் வூர் | |
| He abides happy in my heart | |
| But people mistake he is apart | |
| --- | |
| நாணுத் துறவுரைத்தல் - Decorum defied | |
| காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் | |
| மடலல்லது இல்லை வலி | |
| Pangs of passion find no recourse | |
| Except riding *'palmyra horse' | |
| நோனா உடம்பும் உயிரும் மடலேறும் | |
| நாணினை நீக்கி நிறுத்து | |
| Pining body and mind lose shame | |
| And take to riding of the palm | |
| நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் | |
| காமுற்றோர் ஏறும் மடல் | |
| Once I was modest and manly | |
| My love has now Madal only | |
| காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு | |
| நல்லாண்மை என்னும் புணை | |
| Rushing flood of love sweeps away | |
| The raft of shame and firmness, aye! | |
| தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு | |
| மாலை உழக்கும் துயர் | |
| Palm-ride and pangs of eventide | |
| Are gifts of wreath-like bracelet maid | |
| மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற | |
| படல்ஒல்லா பேதைக்கென் கண் | |
| Madal I ride at midnight for | |
| My eyes sleep not seeing this fair | |
| கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் | |
| பெண்ணின் பெருந்தக்கது இல் | |
| Her sea-like lust seeks not Madal! | |
| Serene is woman's self control | |
| நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் | |
| மறையிறந்து மன்று படும் | |
| Lust betrays itself in haste | |
| Though women are highly soft and chaste | |
| அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் | |
| மறுகின் மறுகும் மருண்டு | |
| My perplexed love roves public street | |
| Believing that none knows its secret | |
| யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் | |
| யாம்பட்ட தாம்படா வாறு | |
| Fools laugh at me before my eyes | |
| For they feel not my pangs and sighs | |
| * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage | |
| ------- | |
| அலரறிவுறுத்தல் - Public clamour | |
| அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் | |
| பலரறியார் பாக்கியத் தால் | |
| Rumour sustains my existence | |
| Good luck! many know not its sense | |
| மலரன்ன கண்ணாள் அருமை அறியாது | |
| அலரெமக்கு ஈந்ததிவ் வூர் | |
| Rumour gives me the flower-like belle | |
| People know not what rare angel | |
| உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் | |
| பெறாஅது பெற்றன்ன நீர்த்து | |
| I profit by this public rumour | |
| Having not, I feel, I have her | |
| கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் | |
| தவ்வென்னும் தன்மை இழந்து | |
| Rumour inflames the love I seek | |
| Or else it becomes bleak and weak | |
| களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் | |
| வெளிப்படுந் தோறும் இனிது | |
| Drink delights as liquor flows | |
| Love delights as rumour grows | |
| கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் | |
| திங்களைப் பாம்புகொண் டற்று | |
| One lasting day we met alone | |
| Lasting rumours eclipse our moon | |
| ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் | |
| நீராக நீளும்இந் நோய் | |
| Scandal manures; mother's refrain | |
| Waters the growth of this love-pain | |
| நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் | |
| காமம் நுதுப்பேம் எனல் | |
| To quench the lust by rumour free | |
| Is to quench fire by pouring ghee | |
| அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் | |
| பலர்நாண நீத்தக் கடை | |
| Who said "fear not" flared up rumour | |
| Why then should I blush this clamour? | |
| தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் | |
| கௌவை எடுக்கும்இவ் வூர் | |
| Town raising this cry, I desire | |
| Consent is easy from my sire | |
| ---- | |
| பிரிவாற்றாமை - Pangs of separation | |
| செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் | |
| வல்வரவு வாழ்வார்க்கு உரை | |
| Tell me if you but do not leave, | |
| Your quick return to those who live | |
| இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் | |
| புன்கண் உடைத்தால் புணர்வு | |
| His sight itself was pleasing, near | |
| Embrace pains now by partings fear | |
| அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் | |
| பிரிவோ ரிடத்துண்மை யான் | |
| On whom shall I lay my trust hence | |
| While parting lurks in knowing ones? | |
| அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் | |
| தேறியார்க்கு உண்டோ தவறு | |
| He parts whose love told me - fear not | |
| Is my trust in him at default? | |
| ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் | |
| நீங்கின் அரிதால் புணர்வு | |
| Stop his parting - my life to save | |
| Meeting is rare if he would leave | |
| பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர் | |
| நல்குவர் என்னும் நசை | |
| His hardness says, "I leave you now" | |
| Is there hope of his renewed love? | |
| துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை | |
| இறைஇறவா நின்ற வளை | |
| Will not my gliding bangles' cry | |
| The parting of my lord betray? | |
| இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் | |
| இன்னாது இனியார்ப் பிரிவு | |
| Bitter is life in friendless place; | |
| Worse is parting love's embrace! | |
| தொடின்கடின் அல்லது காமநோய் போல | |
| விடிற்சுடல் ஆற்றுமோ தீ | |
| Can fire that burns by touch burn like | |
| Parting of the hearts love-sick? | |
| அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் | |
| பின்இருந்து வாழ்வார் பலர் | |
| Many survive pangs of parting | |
| Not I this sore so distressing | |
| ---- | |
| படர்மெலிந்திரங்கல் - Wailing of pining love | |
| மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு | |
| ஊற்றுநீர் போல மிகும் | |
| It swells out like baled out spring | |
| How to bear this pain so writhing? | |
| கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு | |
| உரைத்தலும் நாணுத் தரும் | |
| I can't conceal this nor complain | |
| For shame to him who caused this pain | |
| காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் | |
| நோனா உடம்பி னகத்து | |
| In life - poles of this wearied frame | |
| Are poised the weights of lust and shame | |
| காமக் கடல்மன்னும் உண்டோ அதுநீந்தும் | |
| ஏமப் புணைமன்னும் இல் | |
| My lust is a sea, I do not see | |
| A raft to go across safely | |
| துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு | |
| நட்பினுள் ஆற்று பவர் | |
| What wilt they prove when they are foes | |
| Who in friendship bring me woes! | |
| இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் | |
| துன்பம் அதனிற் பெரிது | |
| The pleasure in love is oceanful | |
| But its pangs are more painful | |
| காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் | |
| யாமத்தும் யானே உளேன் | |
| Wild waves of love I swim shoreless | |
| Pining alone in midnight hush | |
| மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா | |
| என்னல்லது இல்லை துணை | |
| Night's mercy lulls all souls to sleep | |
| Keeping but me for companionship | |
| கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் | |
| நெடிய கழியும் இரா | |
| Crueller than that cruel he | |
| Are midnight hours gliding slowly | |
| உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் | |
| நீந்தல மன்னோஎன் கண் | |
| Like heart, if my sight reaches him | |
| It won't in floods of tears swim! | |
| - | |
| கண்விதுப்பழிதல் - Wasteful look for wistful love | |
| கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் | |
| தாம்காட்ட யாம் கண்டது | |
| The eye pointed him to me; why then | |
| They weep with malady and pine? | |
| தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் | |
| பைதல் உழப்பது எவன் | |
| Why should these dyed eyes grieve now sans | |
| Regrets for their thoughtless glance? | |
| கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் | |
| இதுநகத் தக்கது உடைத்து | |
| Eyes darted eager glance that day | |
| It's funny that they weep today | |
| பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா | |
| உய்வில்நோய் என்கண் நிறுத்து | |
| These eyes left me to endless grief | |
| Crying adry without relief | |
| படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் | |
| காமநோய் செய்தஎன் கண் | |
| My eyes causing lust more than sea | |
| Suffer that torture sleeplessly | |
| ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் | |
| தாஅம் இதற்பட் டது | |
| Lo! eyes that wrought this love-sickness | |
| Are victims of the same themselves | |
| உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து | |
| வேண்டி யவர்க்கண்ட கண் | |
| Let tears dry up pining pining | |
| In eyes that eyed him longing longing | |
| பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் | |
| காணாது அமைவில கண் | |
| Ther's he whose lips loved, not his heart | |
| Yet my eyes pine seeing him not | |
| வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை | |
| ஆரஞர் உற்றன கண் | |
| He comes; no sleep; he goes; no sleep | |
| This is the fate of eyes that weep | |
| மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் | |
| அறைபறை கண்ணா ரகத்து | |
| Like drum beats eyes declare my heart; | |
| From people who could hide his secret? | |
| -- | |
| பசப்புறு பருவரல் - Wailing over pallor | |
| நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் | |
| பண்பியார்க்கு உரைக்கோ பிற | |
| My lover's parting, I allowed | |
| Whom to complain my hue pallid? | |
| அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் | |
| மேனிமேல் ஊரும் பசப்பு | |
| Claiming it is begot through him | |
| Pallor creeps and rides over my frame | |
| சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா | |
| நோயும் பசலையும் தந்து | |
| He seized my beauty and modesty | |
| Leaving pangs and Pallor to me | |
| உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் | |
| கள்ளம் பிறவோ பசப்பு | |
| He is my thought, his praise my theme | |
| Yet this pallor steals over my frame | |
| உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் | |
| மேனி பசப்பூர் வது | |
| My lover departed me there | |
| And pallor usurped my body here | |
| விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் | |
| முயக்கற்றம் பார்க்கும் பசப்பு | |
| Just as darkness waits for light-off | |
| Pallor looks for lover's arms-off | |
| புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் | |
| அள்ளிக்கொள் வற்றே பசப்பு | |
| From his embrace I turned a nonce | |
| This pallor swallowed me at once | |
| பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் | |
| துறந்தார் அவர்என்பார் இல் | |
| On my pallor they cast a slur | |
| But none says "lo he parted her" | |
| பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் | |
| நல்நிலையார் ஆவர் எனின் | |
| Let all my body become pale | |
| If he who took my leave fares well | |
| பசப்பெஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் | |
| நல்காமை தூற்றார் எனின் | |
| Let people call me all pallid | |
| But my lover let them not deride | |
| --- | |
| தனிப்படர்மிகுதி - Pining alone | |
| தாம்விழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே | |
| காமத்துக் காழில் கனி | |
| Stoneless fruit of love they have | |
| Who are beloved by those they love | |
| வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு | |
| வீழ்வார் அளிக்கும் அளி | |
| The lover - and -beloved's self-givings | |
| Are like rains to living beings | |
| வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே | |
| வாழுநம் என்னும் செருக்கு | |
| The pride of living is for those | |
| Whose love is returned by love so close | |
| வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் | |
| வீழப் படாஅர் எனின் | |
| Whose love is void of love in turn | |
| Are luckless with all esteems they earn | |
| நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ | |
| தாம்காதல் கொள்ளாக் கடை | |
| What can our lover do us now | |
| If he does not requite our love? | |
| ஒருதலையான் இன்னாது காமம்காப் போல | |
| இருதலை யானும் இனிது | |
| One sided pains; love in both souls | |
| Poises well like shoulder poles | |
| பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் | |
| ஒருவர்கண் நின்றொழுகு வான் | |
| This cupid aims at me alone; | |
| Knows he not my pallor and pain? | |
| வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து | |
| வாழ்வாரின் வன்கணார் இல் | |
| None is so firm as she who loves | |
| Without kind words from whom she dotes | |
| நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு | |
| இசையும் இனிய செவிக்கு | |
| The lover accords not my desires | |
| And yet his words sweeten my ears | |
| உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் | |
| செறாஅஅய் வாழிய நெஞ்சு | |
| You tell your grief to listless he | |
| Bless my heart! rather fill up sea! | |
| ---- | |
| நினைந்தவர் புலம்பல் - Sad memories | |
| உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் | |
| கள்ளினும் காமம் இனிது | |
| Love is sweeter than wine; for vast | |
| Is its delight at very thought | |
| எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் | |
| நினைப்ப வருவதொன்று இல் | |
| Pains are off at the lover's thought | |
| In all aspects this love is sweet | |
| நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் | |
| சினைப்பது போன்று கெடும் | |
| To sneeze I tried hence but could not | |
| Me he tried to think but did not | |
| யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து | |
| ஓஒ உளரே அவர் | |
| Have I a place within his heart? | |
| Ah from mine he will never depart | |
| தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் | |
| எம்நெஞ்சத்து ஓவா வரல் | |
| Shame! My heart often he enters | |
| Banning me entry into his | |
| மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் | |
| உற்றநாள் உள்ள உளேன் | |
| Beyond the thought of life with him | |
| What else of life can I presume? | |
| மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் | |
| உள்ளினும் உள்ளம் சுடும் | |
| What will happen if I forget | |
| When his memory burns my heart? | |
| எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ | |
| காதலர் செய்யும் சிறப்பு | |
| I bring him to ceaseless memory | |
| He chides not; and thus honours me | |
| விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் | |
| அளியின்மை ஆற்ற நினைத்து | |
| Dear life ebbs away by thought | |
| Of him who said we are one heart | |
| விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் | |
| படாஅதி வாழி மதி | |
| Hail moon! Set not so that I find | |
| Him who left me but not my mind | |
| -- | |
| கனவுநிலை யுரைத்தல் - Dream visions | |
| காதலர் தூதொடு வந்த கனவினுக்கு | |
| யாதுசெய் வேன்கொல் விருந்து | |
| How shall I feast this dream-vision | |
| That brings the beloved's love-mission? | |
| கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு | |
| உயலுண்மை சாற்றுவேன் மன் | |
| I beg these fish-like dark eyes sleep | |
| To tell my lover how life I keep | |
| நனவினால் நல்கா தவரைக் கனவினால் | |
| காண்டலின் உண்டென் உயிர் | |
| In wakeful hours who sees me not | |
| I meet in dreams and linger yet | |
| கனவினான் உண்டாகும் காமம் நனவினான் | |
| நல்காரை நாடித் தரற்கு | |
| In dreams I enjoy his love-bliss | |
| Who in wakeful hours I miss | |
| நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் | |
| கண்ட பொழுதெ இனிது | |
| Dream-sight of him delights at once | |
| Awake- What of seeing him -hence | |
| நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் | |
| காதலர் நீங்கலர் மன் | |
| If wakeful hours cometo nought | |
| My lov'r in dreams would nev'r depart | |
| நனவினால் நல்காக் கொடியார் கனவினால் | |
| என்எம்மைப் பீழிப் பது | |
| Awake he throws my overtures | |
| Adream, ah cruel! he tortures! | |
| துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் | |
| நெஞ்சத்தர் ஆவர் விரைந்து | |
| Asleep he embraces me fast; | |
| Awake he enters quick my heart | |
| நனவினால் நல்காரை நோவர் கனவினால் | |
| காதலர்க் காணா தவர் | |
| In dreams who don't discern lovers | |
| Rue their missing in wakeful hours | |
| நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் | |
| காணார்கொல் இவ்வூ ரவர் | |
| The townsmen say he left me thus | |
| In dreams failing to see him close | |
| --- | |
| பொழுதுகண்டிரங்கல் - Eventide sigh | |
| மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் | |
| வேலைநீ வாழி பொழுது | |
| Bless you! you are not eventide | |
| But killing dart to wedded bride! | |
| புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் | |
| வன்கண்ண தோநின் துணை | |
| Hail sad eventide dim and grim | |
| Has your mate like mine, cruel whim! | |
| பனிஅரும்பிப் பைதல்கொள் மாலைதுனி அரும்பித் | |
| துன்பம் வளர வரும் | |
| Wet eve came pale and trembling then | |
| Now it makes bold with growing pain | |
| காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து | |
| ஏதிலர் போல வரும் | |
| Lover away, comes eventide | |
| Like slayer to field of homicide | |
| காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான் | |
| மாலைக்குச் செய்த பகை | |
| What good have I done to morning | |
| And what evil to this evening? | |
| மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத | |
| காலை அறிந்தது இலேன் | |
| Evening pangs I have not known | |
| When my lord nev'r left me alone | |
| காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி | |
| மாலை மலரும்இந் நோய் | |
| Budding at dawn burgeoning all day | |
| This disease blooms in evening gay | |
| அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் | |
| குழல்போலும் கொல்லும் படை | |
| A deadly arm, this shepherd's flute | |
| Hails flaming eve and slays my heart | |
| பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு | |
| மாலை படர்தரும் போழ்து | |
| Deluding eve if it prolongs | |
| The whole town will suffer love-pangs | |
| பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை | |
| மாயும்என் மாயா உயிர் | |
| Thinking of him whose quest is wealth | |
| My life outlives the twilight stealth | |
| -- | |
| உறுப்பு நலனழிதல் - Limbs languish | |
| சிறுமை நமக்குஒழியச் சேட்சென்றார் உள்ளி | |
| நறுமலர் நாணின கண் | |
| To lift from want he left me afar | |
| His thought makes my eyes blush the flower | |
| நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் | |
| பசந்து பனிவாரும் கண் | |
| My pale tearful eyes betray | |
| The hardness of my husband, away | |
| தணந்தமை சால அறிவிப்ப போலும் | |
| மணந்தநாள் வீங்கிய தோள் | |
| These arms that swelled on nuptial day | |
| Now shrunk proclaim "He is away" | |
| பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் | |
| தொல்கவின் வாடிய தோள் | |
| Bracelets slip off the arms that have | |
| Lost old beauty for He took leave | |
| கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு | |
| தொல்கவின் வாடிய தோள் | |
| Bereft of bracelets and old beauty | |
| Arms tell the cruel's cruelty | |
| தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் | |
| கொடியர் எனக்கூறல் நொந்து | |
| Arms thin, armlets loose make you call | |
| My sire cruel; that pains my soul | |
| பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் | |
| வாடுதோள் பூசல் உரைத்து | |
| Go and tell the cruel, O mind | |
| Bruit ov'r my arms and glory find | |
| முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது | |
| பைந்தொடிப் பேதை நுதல் | |
| The front of this fair one O paled | |
| As my clasping arms loosed their hold | |
| முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற | |
| பேதை பெருமழைக் கண் | |
| Cool breeze crept between our embrace | |
| Her large rain-cloud-eyes paled at once | |
| கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே | |
| ஒண்ணுதல் செய்தது கண்டு | |
| Pale eyes pained seeing the pallor | |
| Of the bright forehead of this fair | |
| -------- | |
| நெஞ்சொடு கிளத்தல் - Soliloquy | |
| நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் | |
| எவ்வநோய் தீர்க்கும் மருந்து | |
| Think of, O heart, some remedy | |
| To cure this chronic malady | |
| காதல் அவரில ராகநீ நோவது | |
| பேதைமை வாழிஎன் நெஞ்சு | |
| Bless O mind! you pine in vain | |
| For me he has no love serene | |
| இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் | |
| பைதல்நோய் செய்தார்கண் இல் | |
| O mind, why pine and sit moody? | |
| Who made you so pale lacks pity | |
| கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் | |
| தின்னும் அவர்காண லுற்று | |
| Take these eyes and meet him, O heart | |
| Or their hunger will eat me out | |
| செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் | |
| உற்றால் உறாஅ தவர் | |
| He spurns our love and yet, O mind, | |
| Can we desert him as unkind? | |
| கலந்துணர்ந்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் | |
| பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு | |
| Wrath is false, O heart, face-to face | |
| Sans huff, you rush to his sweet embrace | |
| காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே | |
| யானோ பொறேன்இவ் விரண்டு | |
| Off with love O mind, or shame | |
| I cannot endure both of them | |
| பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் | |
| பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு | |
| Without pity he would depart! | |
| You sigh and seek his favour, poor heart! | |
| உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ | |
| யாருழைச் சேறிஎன் நெஞ்சு | |
| The lover lives in Self you know; | |
| Whom you think, mind to whom you go? | |
| துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா | |
| இன்னும் இழத்தும் கவின் | |
| Without a thought he deserted us | |
| To think of him will make us worse | |
| -- | |
| நிறையழிதல் - Reserve lost | |
| காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் | |
| நாணுத்தாழ் வீழ்த்த கதவு | |
| Passion's axe shall break the door | |
| Of reserve bolted with my honour | |
| காம மெனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை | |
| யாமத்தும் ஆளும் தொழில் | |
| The thing called lust is a heartless power | |
| It sways my mind at midnight hour | |
| மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் | |
| தும்மல்போல் தோன்றி விடும் | |
| How to hide this lust which shows | |
| Itself while I sneeze unawares! | |
| நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் | |
| மறையிறந்து மன்று படும் | |
| I was proud of my sex-reserve | |
| Lo lust betrays what I preserve | |
| செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் | |
| உற்றார் அறிவதொன்று அன்று | |
| Dignity seeks not a deserter | |
| But Love-sick is its innovator | |
| செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ | |
| எற்றென்னை உற்ற துயர் | |
| O Grief, my deserter you seek | |
| Of your caprice what shall I speak! | |
| நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் | |
| பேணியார் பெட்ப செயின் | |
| When lover's love does what it desires | |
| We forget all shame unawares | |
| பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் | |
| பெண்மை உடைக்கும் படை | |
| The cheater of many wily arts | |
| His tempting words break through women's hearts | |
| புலப்ப லெனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம் | |
| கலத்த லுறுவது கண்டு | |
| In huff I went and felt at ease | |
| Heat to heart in sweet embrace | |
| நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ | |
| புணர்ந்தூடி நிற்பேம் எனல் | |
| To feign dislike is it not rare | |
| For mates who melt like fat in fire? | |
| அவர்வயின் விதும்பல் - Mutual yearning | |
| வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற | |
| நாளொற்றித் தேய்ந்த விரல் | |
| My eyes are dim lustre-bereft | |
| Worn fingers count days since he left | |
| இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் | |
| கலங்கழியும் காரிகை நீத்து | |
| Beauty pales and my bracelets slide; | |
| Why not forget him now, bright maid? | |
| உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் | |
| வரல்நசைஇ இன்னும் உளேன் | |
| Will as guide he went to win | |
| Yet I live-to see him again | |
| கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் | |
| கோடுகொ டேறும்என் நெஞ்சு | |
| My heart in rapture heaves to see | |
| His retun with love to embrace me | |
| காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் | |
| நீங்கும்என் மென்றோள் பசப்பு | |
| Let me but gaze and gaze my spouse | |
| sallow on my soft shoulders flies | |
| வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் | |
| பைதல்நோய் எல்லாம் கெட | |
| Let my spouse return just a day | |
| Joy-drink shall drive my pain away | |
| புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் | |
| கண்அன்ன கேளிர் வரின் | |
| If my eye-like lord returneth | |
| Shall I sulk or clasp or do both? | |
| வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து | |
| மாலை அயர்கம் விருந்து | |
| May the king fight and win and give | |
| And with my wife I will feast this eve! | |
| ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார் | |
| வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு | |
| One day seems as seven to those | |
| Who yearn return of distant spouse | |
| பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் | |
| உள்ளம் உடைந்துக்கக் கால் | |
| When her heart is broken, what is | |
| The good of meeting and love-embrace? | |
| - | |
| குறிப்பறிவுறுத்தல் - Feeling surmised | |
| கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் | |
| உரைக்க லுறுவதொன்று உண்டு | |
| You hide; but your painted eyes | |
| Restraint off, report your surmise | |
| கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் | |
| பெண்நிறைந்த நீர்மை பெரிது | |
| With seemly grace and stem-like arms | |
| The simple she has ample charms | |
| மணியில் திகழ்தரு நூல்போல் மடந்நை | |
| அணியில் திகழ்வதுஒன்று உண்டு | |
| Something shines through her jewelled charm | |
| Like thread shining through wreathed gem | |
| முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை | |
| நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு | |
| Like scent in bud secrets conceal | |
| In the bosom of her half smile | |
| செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் | |
| தீர்க்கும் மருந்தொன்று உடைத்து | |
| The close-bangled belle's hidden thought | |
| Has a cure for my troubled heart | |
| பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி | |
| அன்பின்மை சூழ்வது உடைத்து | |
| His over-kind close embrace sooths; | |
| But makes me feel, loveless, he parts | |
| தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் | |
| முன்னம் உணர்ந்த வளை | |
| Quick, my bracelets read before | |
| The mind of my lord of cool shore | |
| நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் | |
| எழுநாளேம் மேனி பசந்து | |
| My lover parted but yesterday; | |
| With sallowness it is seventh day | |
| தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி | |
| அஃதாண்டு அவள்செய் தது | |
| She views her armlets, her tender arms | |
| And then her feet; these are her norms | |
| பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் | |
| காமநோய் சொல்லி இரவு | |
| To express love-pangs by eyes and pray | |
| Is womanhood's womanly way | |
| புணர்ச்சிவிதும்பல் - Longing for reunion | |
| உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் | |
| கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு | |
| Rapture at thought and joy when seen | |
| Belong to love and not to wine | |
| தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் | |
| காமம் நிறைய வரின் | |
| When passion grows palmyra-tall | |
| Sulking is wrong though millet-small | |
| பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் | |
| காணாது அமையல கண் | |
| Though slighting me he acts his will | |
| My restless eyes would see him still | |
| ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து | |
| கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு | |
| Huff I would, maid, but I forget; | |
| And leap to embrace him direct | |
| எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் | |
| பழிகாணேன் கண்ட விடத்து | |
| When close I see not lord's blemish | |
| Like eyes that see not painter's brush | |
| காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் | |
| காணேன் தவறல் லவை | |
| When he's with me I see not fault | |
| And nought but fault when he is not | |
| உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் | |
| பொய்த்தல் அறிந்தென் புலந்து | |
| To leap in stream which carries off | |
| When lord is close to feign a huff | |
| இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் | |
| கள்ளற்றே கள்வநின் மார்பு | |
| Like wine to addicts that does disgrace | |
| Your breast, O thief, is for my embrace! | |
| மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் | |
| செவ்வி தலைப்படு வார் | |
| Flower-soft is love; a few alone | |
| Know its delicacy so fine | |
| கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் | |
| என்னினும் தான்விதுப் புற்று | |
| She feigned dislike awhile but flew | |
| Faster for embrace than I do | |
| நெஞ்சொடுபுலத்தல் - Chiding the heart | |
| அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே | |
| நீஎமக்கு ஆகா தது | |
| You see, his heart is his alone; | |
| Why not my heart be all my own? | |
| உறாஅ தவர்கண்ட கண்ணும் அவரைச் | |
| செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு | |
| O heart, you see how he slights me | |
| Yet you clasp him as if friendly | |
| கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ | |
| பெட்டாங்கு அவர்பின் செலல் | |
| You follow him at will Is it | |
| "The fallen have no friends" my heart? | |
| இனிஅன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே | |
| துனிசெய்து துவ்வாய்காண் மற்று | |
| You won't sulk first and then submit | |
| Who will then consult you, my heart? | |
| பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் | |
| அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு | |
| Frets to gain and fears loss in gain | |
| O my heart suffers ceaseless pain | |
| தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் | |
| தினிய இருந்ததுஎன் நெஞ்சு | |
| My itching mind eats me anon | |
| As I muse on him all alone | |
| நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் | |
| மாணா மடநெஞ்சிற் பட்டு | |
| forget shame but not his thought | |
| In mean foolish mind I'm caught | |
| எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் | |
| உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு | |
| My heart living in love of him | |
| Hails his glory ignoring blame | |
| துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய | |
| நெஞ்சம் துணையல் வழி | |
| Who support a man in grief | |
| If lover's heart denies relief? | |
| தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய | |
| நெஞ்சம் தமரல் வழி | |
| Why wonder if strangers disown | |
| When one's own heart is not his own? | |
| -- | |
| புலவி - Bouderic | |
| புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் | |
| அல்லல்நோய் காண்கம் சிறிது | |
| Feign sulk; embrace him not so that | |
| We can see his distress a bit | |
| உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது | |
| மிக்கற்றால் நீள விடல் | |
| Sulking is the salt of love; but | |
| Too much of it spoils the taste | |
| அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் | |
| புலந்தாரைப் புல்லா விடல் | |
| To leave the sulker unembraced | |
| Is to grieve the one sorely grieved | |
| ஊடி யவரை உணராமை வாடிய | |
| வள்ளி முதலரிந் தற்று | |
| To comfort not lady in pout | |
| Is to cut the fading plant at root | |
| நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை | |
| பூஅன்ன கண்ணா ரகத்து | |
| Pouting of flower-eyed has | |
| To pure good mates a lovely grace | |
| துனியும் புலவியும் இல்லாயின் காமம் | |
| கனியும் கருக்காயும் அற்று | |
| Love devoid of frowns and pets | |
| Misses its ripe and unripe fruits | |
| ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது | |
| நீடுவது தன்றுகொல் என்று | |
| "Will union take place soon or late?" | |
| In lover's pout this leaves a doubt | |
| நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் | |
| காதலர் இல்லா வழி | |
| What's the good of grieving lament | |
| When concious lover is not present? | |
| நீரும் நிழலது இனிதே புலவியும் | |
| வீழுநர் கண்ணே இனிது | |
| Water delights in a shady grove | |
| And sulking in souls of psychic love | |
| ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் | |
| கூடுவேம் என்பது அவா | |
| My heart athirst would still unite | |
| With her who me in sulking left! | |
| -------- | |
| புலவிநுணுக்கம் - Feigned anger | |
| பெண்ணியலார் எல்லோரும் கண்ணின் பொதுஉண்பர் | |
| நண்ணேன் பரந்தநின் மார்பு | |
| I shrink to clasp you bosom lewd | |
| To the gaze of all ladies exposed | |
| ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை | |
| நீடுவாழ் கென்பாக்கு அறிந்து | |
| He sneezed while we went on sulking | |
| Expecting me to say "live long" | |
| கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் | |
| காட்டிய சூடினீர் என்று | |
| "For which lady?" she widely cries | |
| While I adorn myself with flowers | |
| யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் | |
| யாரினும் யாரினும் என்று | |
| "I love you more than all" I said | |
| "Than whom, than whom?" she sulked and chid | |
| இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் | |
| கண்ணிறை நீர்கொண் டனள் | |
| "In this life we won't part" I told | |
| Her eyes at once with tears were filled | |
| உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் | |
| புல்லாள் புலத்தக் கனள் | |
| I said "I thought of you" She left | |
| Her embrace crying "Oft you forget" | |
| வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் | |
| யாருள்ளித் தும்மினீர் என்று | |
| I sneezed; she blessed; then changed and wept | |
| "You sneezed now at which lady's thought?" | |
| தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் | |
| எம்மை மறைத்திரோ என்று | |
| I repressed sneeze; she wept crying | |
| "Your thoughts from me you are hiding" | |
| தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் | |
| இந்நீரர் ஆகுதிர் என்று | |
| I try to coax her and she remarks | |
| "Your coaxing others thus this marks" | |
| நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் | |
| யாருள்ளி நோக்கினீர் என்று | |
| I think and gaze at her; she chides: | |
| "On whom your thought just now abides?" | |
| -- | |
| ஊடலுவகை - Sulking charm | |
| இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் | |
| வல்லது அவர்அளிக்கு மாறு | |
| He is flawless; but I do pout | |
| So that his loving ways show out | |
| ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி | |
| வாடினும் பாடு பெறும் | |
| Fading first, love blooms and outlives | |
| The petty pricks that pouting gives | |
| புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு | |
| நீரியைந் தன்னா ரகத்து | |
| Is there a heaven like sulk beneath | |
| Of hearts that join like water and earth? | |
| புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் | |
| உள்ளம் உடைக்கும் படை | |
| In long pout after embrace sweet | |
| A weapon is up to break my heart | |
| தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் | |
| அகறலி னாங்கொன்று உடைத்து | |
| Though free form faults, one feels the charms | |
| Of feigned release from lover's arms | |
| உணலினும் உண்டது அறல்இனிது காமம் | |
| புணர்தலின் ஊடல் இனிது | |
| Sweeter than meal is digestion | |
| And sulk in love than union | |
| ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் | |
| கூடலில் காணப் படும் | |
| The yielder wins in lover's pout | |
| Reunited joy brings it out | |
| ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் | |
| கூடலில் தோன்றிய உப்பு | |
| Shall not our pouting again give | |
| The dew-browed joy of joint love? | |
| ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப | |
| நீடுக மன்னோ இரா | |
| Sulk on O belle of shining jewels! | |
| Prolong O night! our delight swells! | |
| ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் | |
| கூடி முயங்கப் பெறின் | |
| Bouderie is lovers' delight | |
| Its delight grows when they unite |