கடவுள் வாழ்த்து - The Praise of God அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் That lore is vain which does not fall At His good feet who knoweth all மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் Long they live on earth who gain The feet of God in florid brain வேண்டுதல் வேண்டாமை இலர்ன்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல Who hold His feet who likes nor loathes Are free from woes of human births இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் They prosper long who walk His way Who has the senses signed away தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் The sea of births they alone swim Who clench His feet and cleave to Him வான் சிறப்பு - The blessing of Rain வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை The rain begets the food we eat And forms a food and drink concrete விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை Destruction it may sometimes pour, But only rain can life restore விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது No grassy blade its head will rear, If from the cloud no drop appear நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் The ocean's wealth will waste away, Except the cloud its stores repay சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு The earth, beneath a barren sky, Would offerings for the gods deny தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் Were heaven above to fail below Nor alms nor penance earth would show நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு Water is life that comes from rain Sans rain our duties go in vain -------- நீத்தார் பெருமை - The merit of Ascetics ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு No merit can be held so high As theirs who sense and self deny துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று To con ascetic glory here Is to count the dead upon the sphere இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு No lustre can with theirs compare Who know the right and virtue wear உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து With hook of firmness to restrain The senses five, is heaven to gain ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி Indra himself has cause to say How great the power ascetics' sway செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் The small the paths of ease pursue The great achieve things rare to do சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் Full-worded men by what they say, Their greatness to the world display குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் With gentle mercy towards all, The sage fulfils the vitue's call --- அறன்வலியுறுத்தல் - The power of virtue சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தினுஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு From virtue weal and wealth outflow; What greater good can mankind know? அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் Perform good deeds as much you can Always and everywhere, o man! மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்; ஆகுல நீர பிற In spotless mind virtue is found And not in show and swelling sound அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை Do good enow; defer it not A deathless aid in death if sought அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை Litter-bearer and rider say Without a word, the fortune's way வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் Like stones that block rebirth and pain Are doing good and good again அறத்தான் வருவதே இன்பம்:மற் றெல்லாம் புறத்த புகழும் இல Weal flows only from virtue done The rest is rue and renown gone செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி Worthy act is virtue done Vice is what we ought to shun ---- இல்லறவியல் - DOMESTIC VIRTUE இல்வாழ்க்கை - Married Life இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை The ideal householder is he Who aids the natural orders there துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை His help the monk and retired share, And celebrate students are his care தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை By dutiful householder's aid God, manes, kin, self and guests are served பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் Sin he shuns and food he shares His home is bright and brighter fares அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன் Who turns from righteous family To be a monk, what profits he? இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை Of all who strive for bliss, the great Is he who leads the married state ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து Straight in virtue, right in living Make men brighter than monks praying அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் He is a man of divine worth Who lives in ideal home on earth வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை A good housewife befits the house, Spending with thrift the mate's resource மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் Bright is home when wife is chaste If not all greatness is but waste இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை What is rare when wife is good What can be there when she is bad? பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் What greater fortune is for men Than a constant chaste woman? தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை Her spouse before God who adores, Is like rain that at request pours தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தசைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் The good wife guards herself from blame, She tends her spouse and brings him fame சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை Of what avail are watch and ward? Their purity is women's guard பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு Women who win their husbands' heart Shall flourish where the gods resort புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வவார்முன் ஏறுபோல் பீடு நடை A cuckold has not the lion-like gait Before his detractors aright மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு An honest wife is home's delight And children good are jewels abright -- மக்கட்பேறு - The wealth of children பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் No evil comes and no blemish; Noble sons bring all we wish தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் Children are one's wealth indeed Their wealth is measured by their deed அமிர்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் The food is more than nectar sweet In which one's children hands insert மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு Children's touch delights the body Sweet to ears are their words lovely குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay! தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் A father's duty to his son is To seat him in front of the wise தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல் The son to sire this word is debt "What penance such a son begot!" ---- அன்புடைமை - Loving-kindness அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும் What bolt can bar true love in fact The trickling tears reveal the heart அன்பிலார் எல்லாந் தமக்குரியர்: அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு Soul is encased in frame of bone To taste the life of love alone அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு Love yields aspiration and thence Friendship springs up in excellence அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்துஞ் சிறப்பு The crowning joy of home life flows From peaceful psychic love always அறத்திற்கே அன்புசார்பு யென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை "Love is virtue's friend" say know-nots It helps us against evil plots என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம் Justice burns the loveless form Like solar blaze the boneless worm அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று Life bereft of love is gloom Can sapless tree in desert bloom? புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு The seat of life is love alone; Or beings are but skin and bone! --- விருந்தோம்பல் - Hospitality இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு Men set up home, toil and earn To tend the guests and do good turn விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று To keep out guests cannot be good Albeit you eat nectar-like food வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று Who tends his guests day in and out His life in want never wears out அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் Should his field be sown who first Feeds the guests and eats the rest? செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் Worth of the guest of quality Is worth of hospitality பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் Who loathe guest-service one day cry: "We toil and store; but life is dry" உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து Anicham smelt withers: like that A wry-faced look withers the guest -- இனியவை கூறல் - Sweet words இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் The words of Seers are lovely sweet Merciful and free from deceit அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல் னாகப் பெறின் Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு Whose loving words delight each one The woe of want from them is gone பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற To be humble and sweet words speak No other jewel do wise men seek அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும் Kind words free from meanness delight This life on earth and life the next இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare? இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits -------- செய்ந்நன்றி அறிதல் - Gratitude செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது A help rendered in hour of need Though small is greater than the world பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் Help given though millet- small Knowers count its good palm- tree tall உதவி வரைத்தன்று உதவி: உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து A help is not the help's measure It is gainer's worth and pleasure மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு Forget not friendship of the pure Forsake not timely helpers sure எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு Through sevenfold births, in memory fares The willing friend who wiped one's tears நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது அன்றே மறப்பது நன்று To forget good turns is not good Good it is over wrong not to brood கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் Let deadly harms be forgotten While remembering one good-turn எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு The virtue-killer may be saved Not benefit-killer who is damned -------- நடுவுநிலைமை - Equity தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் Equity is supreme virtue It is to give each man his due செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து Wealth of the man of equity Grows and lasts to posterity நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் Though profitable, turn away From unjust gains without delay தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் The worthy and the unworthy Are seen in their posterity கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி Loss and gain by cause arise; Equal mind adorns the wise கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் Of perdition let him be sure Who leaves justice to sinful lure கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு The just reduced to poverty Is not held down by equity சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி Like balance holding equal scales A well poised mind is jewel of the wise சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் Justice is upright, unbending And free from crooked word-twisting வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் A trader's trade prospers fairly When his dealings are neighbourly ---- அடக்கமுடைமை - Self-control அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு No gains with self-control measure Guard with care this great treasure செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் Knowing wisdom who lives controlled Name and fame seek him untold நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது Firmly fixed in self serene The sage looks grander than mountain எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து Humility is good for all To the rich it adds a wealth special ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் Even a single evil word Will turn all good results to bad தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து Virtue seeks and peeps to see Self-controlled savant anger free -- ஒழுக்கமுடைமை - Good decorum ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் Decorum does one dignity More than life guard its purity பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை Virtues of conduct all excel; The soul aid should be guarded well ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் Good conduct shows good family Low manners mark anomaly மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் Readers recall forgotten lore, But conduct lost returns no more அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு The envious prosper but ill The ill-behaved sinks lower still ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து The firm from virtue falter not They know the ills of evil thought ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் Good conduct sows seeds of blessings Bad conduct endless evil brings ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் Foul words will never fall from lips Of righteous men even by slips உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் Though read much they are ignorant Whose life is not world-accordant - பிறனில் விழையாமை - Against coveting another's wife பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் Who know the wealth and virtue's way After other's wife do not stray அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் He is the worst law breaking boor Who haunts around his neighbour's door விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார் The vile are dead who evil aim And put faithful friends' wives to shame எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் Their boasted greatness means nothing When to another's wife they cling எளிதுஎன இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி Who trifles with another's wife His guilty stain will last for life பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன் He is the righteous householder His neighbour's wife who covets never பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு They lead a high-souled manly life The pure who eye not another's wife நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குஉரியாள் தோள்தோயா தார் Good in storm bound earth is with those Who clasp not arms of another's spouse அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று Sinners breaking virtue's behest Lust not for another's wife at least பொறையுடைமை - Forgiveness அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை As earth bears up with diggers too To bear revilers is prime virtue பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று Forgive insults is a good habit Better it is to forget it இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும் Practice of patient quality Retains intact integrity ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து Vengeance is not in esteem held Patience is praised as hidden gold ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் Revenge accords but one day's joy Patience carries its praise for aye திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல் By noble forbearance vanquish The proud that have caused you anguish துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் More than ascetics they are pure Who bitter tongues meekly endure உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் Who fast are great to do penance Greater are they who bear offence - அழுக்காறாமை - Avoid envy ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இல்லாத இயல்பு Deem your heart as virtuous When your nature is not jealous விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் No excellence excels the one That by nature envies none அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான் Who envies others' good fortune Can't prosper in virtue of his own அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து The wise through envy don't others wrong Knowing that woes from evils throng அழுக்காற உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது Man shall be wrecked by envy's whim Even if enemies spare him கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் Fortune deserts the envious Leaving misfortune omnious அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் Caitiff envy despoils wealth And drags one into evil path அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் Why is envy rich, goodmen poor People with surprise think over அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் The envious prosper never The envyless prosper ever -------- வெஃகாமை - Against covetousness நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் Who covets others' honest wealth That greed ruins his house forthwith படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணுவர் பவர் Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் For spiritual bliss who long For fleeting joy commit no wrong இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் The truth-knowers of sense-control Though in want covet not at all அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் What is one's subtle wisdom worth If it deals ill with all on earth அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் Who seeks for grace on righteous path Suffers by evil covetous wealth வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன் Shun the fruit of covetousness All its yield is inglorious அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் Against covetousness - The mark of lasting wealth is shown By not coveting others' own அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு Fortune seeks the just and wise Who are free from coveting vice இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு Desireless, greatness conquers all; Coveting misers ruined fall புறங்கூறாமை - Against slander அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது Though a man from virtue strays, To keep from slander brings him praise அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை Who bite behind, and before smile Are worse than open traitors vile புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் Virtue thinks it better to die, Than live to backbite and to lie கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல் Though harsh you speak in one's presence Abuse is worse in his absence அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் Who turns to slander makes it plain His praise of virtue is in vain பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும் His failings will be found and shown, Who makes another's failings known பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் By pleasing words who make not friends Sever their hearts by hostile trends துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு What will they not to strangers do Who bring their friends' defects to view? அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை The world in mercy bears his load Who rants behind words untoward ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு No harm would fall to any man If each his own defect could scan பயனில சொல்லாமை - Against vain speaking பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் With silly words who insults all Is held in contempt as banal பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது Vain talk before many is worse Than doing to friends deeds adverse நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை The babbler's hasty lips proclaim That "good-for-nothing" is his name நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து Vain words before an assembly Will make all gains and goodness flee சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் Glory and grace will go away When savants silly nonsense say பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல் Call him a human chaff who prides Himself in weightless idle words நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று Let not men of worth vainly quack Even if they would roughly speak அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் The wise who weigh the worth refrain From words that have no grain and brain பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் The wise of spotless self-vision Slip not to silly words-mention சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் To purpose speak the fruitful word And never indulge in useless load -------- தீவினையச்சம் - Fear of sin தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு Sinners fear not the pride of sin The worthy dread the ill within தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் Since evil begets evil dire Fear ye evil more than fire அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் The wisest of the wise are those Who injure not even their foes மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு His ruin virtue plots who plans The ruin of another man's இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து Who makes poverty plea for ill Shall reduce himself poorer still தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் From wounding others let him refrain Who would from harm himself remain எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும் Men may escape other foes and live But sin its deadly blow will give தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉரைந் தற்று Ruin follows who evil do As shadow follows as they go தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் Let none who loves himself at all Think of evil however small அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் He is secure, know ye, from ills Who slips not right path to do evils ஒப்புரவறிதல் - Duty to society கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு Duty demands nothing in turn; How can the world recompense rain? தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு All the wealth that toils give Is meant to serve those who deserve புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற In heav'n and earth 'tis hard to find A greater good than being kind ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் He lives who knows befitting act Others are deemed as dead in fact ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு The wealth that wise and kind do make Is like water that fills a lake பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் Though seers may fall on evil days Their sense of duty never strays நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு The good man's poverty and grief Is want of means to give relief ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து By good if ruin comes across Sell yourself to save that loss - ஈகை - Charity வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து To give the poor is charity The rest is loan and vanity நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று To beg is bad e'en from the good To give is good, were heaven forbid இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள No pleading, "I am nothing worth," But giving marks a noble birth இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு The cry for alms is painful sight Until the giver sees him bright ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் Higher's power which hunger cures Than that of penance which endures அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி Drive from the poor their gnawing pains If room you seek to store your gains பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது Who shares his food with those who need Hunger shall not harm his creed ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல் Worse than begging is that boarding Alone what one's greed is hoarding சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை Nothing is more painful than death Yet more is pain of giftless dearth -- புகழ் - Renown ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு They gather fame who freely give The greatest gain for all that live உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் The glory of the alms-giver Is praised aloud as popular ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver! நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு From hailing gods heavens will cease To hail the men of lasting praise நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது Fame in fall and life in death Are rare but for the soulful worth தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று Be born with fame if birth you want If not of birth you must not vaunt புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன் Why grieve at those who blame the shame Of those who cannot live in fame? வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறா விடின் To men on earth it is a shame Not to beget the child of fame வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் The land will shrink in yield if men O'erburden it without renown வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் They live who live without blemish The blameful ones do not flourish - துறவறவியல் - ASCETIC VIRTUE அருளுடைமை - Compassion அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை His soul is free from dread of sins Whose mercy serveth all beings அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார் Who grace forsake and graceless act The former loss and woes forget அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு This world is not for weathless ones That world is not for graceless swines பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது The wealthless may prosper one day; The graceless never bloom agay தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து Think how you feel before the strong When to the feeble you do wrong ---- புலால் மறுத்தல் - Abstinence from flesh தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் What graciousness can one command who feeds his flesh by flesh gourmand பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு The thriftless have no property And flesh-eaters have no pity படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் Who wields a steel is steel-hearted Who tastes body is hard-hearted அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல் If merciless it is to kill, To kill and eat is disgraceful உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு Off with flesh; a life you save The eater hell's mouth shall not waive! தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் None would kill and sell the flesh For eating it if they don't wish உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின் From eating flesh men must abstain If they but feel the being's pain செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் Whose mind from illusion is freed Refuse on lifeless flesh to feed அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று Not to-kill-and-eat, truly Excels thousand pourings of ghee! கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் All lives shall lift their palms to him Who eats not flesh nor kills with whim ------- தவம் - Penance உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு Pains endure; pain not beings This is the type of true penance தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள் வது Penance is fit for penitents Not for him who in vain pretends துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம Is it to true penitent's aid, That others austere path avoid? ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் In penance lies the power to save The friends and foil the foe and knave வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் What they wish as they wish is won Here hence by men penance is done தவஞ்செய்வார் தங்கமருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு Who do penance achieve their aim Others desire-rid themselves harm சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு Pure and bright gets the gold in fire; and so the life by pain austere தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும் He worship wins from every soul Who Master is by soul control கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு They can even defy death Who get by penance godly strength இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் Many are poor and few are rich For they care not for penance much கூடாவொழுக்கம் - Imposture வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் Elements five of feigned life Of a sly hypocrite within laugh வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின் Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று Vaunting sainthood while weak within Seems a grazer with tiger skin தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும் Who false within but freedom feign Shall moan "What have we done" with pain நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் Vilest is he who seems a saint Cheating the world without restraint புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து Berry-red is his outward view, Black like its nose his inward hue மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர் Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல் Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் No balding nor tangling the hair! Abstain from condemned acts with care கள்ளாமை - The absence of fraud எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு Let him who would reproachless be From all frauds guard his conscience free உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் "We will by fraud win other's wealth" Even this thought is sin and stealth களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் The gain by fraud may overflow But swift to ruin it shall go களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும் The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர் They cannot walk in measured bounds who crave and have covetous ends களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் Men of measured wisdom shun Black art of fraud and what it won அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் They perish in their perfidy Who know nothing but pilfery கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு Even the body rejects thieves; The honest men, heaven receives ------ வாய்மை - Veracity வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் If "What is truth"? the question be, It is to speak out evil-free பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் E'en falsehood may for truth suffice, When good it brings removing vice தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் He lives in loving hearts of all Who serves the Truth serene in soul மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை To speak the truth from heart sincere Is more than giving and living austere பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும் Not to lie brings all the praise All virtues from Truth arise பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று Lie not lie not Naught else you need All virtues are in Truth indeed புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் Water makes you pure outward Truth renders you pure inward எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு All lights are not lights for the wise; Truth light is light bright like sun-light யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற Of all the things we here have seen Nothing surpasses Truth serene ! -------- வெகுளாமை - Restraining anger செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் Anger against the weak is wrong It is futile against the strong செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற Vain is wrath against men of force Against the meek it is still worse மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும் Off with wrath with any one It is the source of sin and pain நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer? தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று Save thy soul from burning ire Though tortured like the touch of fire உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் Wishes he gains as he wishes If man refrains from rage vicious! இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled -------- இன்னா செய்யாமை - non-violence சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் The pure by faith mean pain to none Though princely wealth by that is won கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும் Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை What does a man from wisdom gain If he pines not at other's pain? இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் What you feel as 'pain' to yourself Do it not to the other-self எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை Any, anywhere injure not At any time even in thought தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் How can he injure other souls Who in his life injury feels பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் Harm others in the forenoon Harm seeks thee in afternoon நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் No harm is done by peace-lovers For pains rebound on pain-givers -- கொல்லாமை - Non-killing அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும் What is Virtue? 'Tis not to kill For killing causes every ill பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை Share the food and serve all lives This is the law of all the laws ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று Not to kill is unique good The next, not to utter falsehood நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி What way is good? That we can say The way away from heat to slay நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை Of saints who renounce birth-fearing The head is he who dreads killing கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை Kill not life that others cherish Even when your life must perish நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை The gain of slaughter is a vice Though deemed good in sacrifice கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து Those who live by slaying are Eaters of carrion bizarre! உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் The loathsome poor sickly and sore Are killers stained by blood before ------- நிலையாமை - Instability நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை The worst of follies it is told The fleeting as lasting to hold கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் Wealth wanes away; but when it comes Take care to do enduring things நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் The showy day is but a saw Your life, know that, to file and gnaw நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு One was yesterday; not today! The wonder of the world's way! ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல Man knows not his next moment On crores of things he is intent குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு The soul from body any day Like bird from egg-shell flies away உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு Death is like a slumber deep And birth like waking from that sleep புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு The life berthed in this body shows A fixed home it never knows -------- துறவு - Renunciation யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் From what from what a man is free From that, from that his torments flee வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல Give up all to gain the True And endless joys shall hence seek you அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு Curb the senses five and renounce The craving desires all at once இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து To have nothing is law of vows Having the least deludes and snares மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை Why add to bonds while this body Is too much for saints to be birth-free யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு Grief clings on and on to those Who cling to bonds without release தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் Who renounce all are free from care Others suffer delusive snare பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் Bondage cut off, rebirth is off The world then seems instable stuff பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon ------- மெய்யுணர்தல் - Truth consciousness பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு That error entails ignoble birth Which deems vain things as things of worth இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு Men of spotless pure insight Enjoy delight devoid of night ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து To doubtless minds whose heart is clear More than earth heaven is near ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு Knowledge of five senses is vain Without knowing the Truth within எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு Knowledge is Truth of things to find In every case of every kind கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி Who learn and here the Truth discern Enter the path of non-return ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு It is knowledge to know Self-Truth And remove the folly of birth சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் Woes expire when lust, wrath, folly Expire even to name, fully அவா அறுத்தல் - Curbing of desire அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து Desire to all, always is seed From which ceaseless births proceed வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் If long thou must, long for non-birth It comes by longing no more for earth வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல் No such wealth is here and there As peerless wealth of non-desire தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் To nothing crave is purity That is the fruit of verity அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் The free are those who desire not The rest not free in bonds are caught அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா Dread desire; Virtue is there To every soul desire is snare! அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் Destroy desire; deliverance Comes as much as you aspire hence அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும் Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் Off with desire insatiate You gain the native blissful state ------ ஊழ் - Destiny ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி Efforts succeed by waxing star Wealth-losing brings waning star பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise! நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் What matters subtle study deep? Levels of innate wisdom-keep இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு Two natures in the world obtain Some wealth and others wisdom gain நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு In making wealth fate changes mood; The good as bad and bad as good பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம Things not thine never remain Things destined are surely thine வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது Who crores amass enjoy but what The Dispenser's decrees allot துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் The destitute desire will quit If fate with ills visit them not நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் Who good in time of good perceive In evil time why should they grieve? ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் What power surpasses fate? Its will Persists against the human skill -- பொருட்பால்- Part II - WEALTH அரசியல்-Royalty இறைமாட்சி The grandeur of monarchy கல்வி Education கல்லாமை Non- learning கேள்வி Listening அறிவுடைமை The possession of knowledge குற்றங்கடிதல் Avoiding faults பெரியாரைத் துணைக்கோடல் Gaining great men's help சிற்றினஞ் சேராமை Avoiding mean company தெரிந்து செயல்வகை Deliberation before action வலியறிதல் Judging strength காலம் அறிதல் Knowing proper time இடன் அறிதல் Judging the place தெரிந்து தெளிதல் Testing of men for confidence தெரிந்து வினையாடல் Testing and entrusting சுற்றந்தழால் Cherishing kinsmen பொச்சாவாமை Unforgetfulness செங்கோன்மை Just government கொடுங்கோன்மை The cruel tyranny வெருவந்த செய்யாமை Avoiding terrorism கண்ணோட்டம் Benign looks ஒற்றாடல் Espionage ஊக்கம் உடைமை Energy மடியின்மை Freedom from sloth ; ஆள்வினை உடைமை Manly effort இடுக்கண் அழியாமை Hope in mishap அமைச்சியல் - STATE CABINET அமைச்சு Ministers சொல்வன்மை Power of speech வினைத்தூய்மை Purity of action வினைத்திடபம் Powerful acts வினைசெயல்வகை Modes of action தூது The embassy மன்னரைச் சேர்ந்தொழுகல் Walk with kings குறிப்பறிதல் Divining the mind அவை அறிதல் Judging the audience அவை அஞ்சாமை Courage before councils அரணியல், கூழியல், படையியல் - POLITICS நாடு The country அரண் Fortress பொருள் செயல்வகை Way of making wealth படையாட்சி The glory of army படைச்செருக்கு Military pride நட்பியல் - ALLIANCE நட்பு Friendship நட்பாராய்தல் Testing friendship பழைமை Intimacy தீநட்பு Bad friendship கூடாநட்பு False friendship பேதமை Folly புலலறிவான்மை Petty conceit இகல் Hatred பகைமாட்சி Noble hostility பகைத்திறம் தெரிதல் Apparising enemies உட்பகை Secret foe பெரியாரைப்பிழையாமை Offend not the great பெண்வழிச்சேறல் Being led by women வரைவின் மகளிர் Wanton women கள்ளுண்ணாமை Not drinking liquor சூது Gambling மருந்து Medicine ஒழிபியல் - MISCELLANEOUS மானம் Honour பெருமை Greatness சான்றாண்மை Sublimity பண்புடைமை Courtesy நன்றியில் செல்வம் Futile wealth நாணுடைமை Sensitiveness to shame குடிசெயல் வகை Promoting family welfare உழவு Farming நல்குரவு Poverty இரவு Asking இரவச்சம் Dread of beggary கயமை Meanness - இறைமாட்சி - The grandeur of monarchy படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு People, troops, wealth, forts, council, friends Who owns these six is lion of kings அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு Courage, giving, knowledge and zeal Are four failless features royal தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு Alertness, learning, bravery Are adjuncts three of monarchy அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு A brave noble king refrains from vice Full of virtue and enterprise இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு The able king gets, stores and guards And spends them for people's safeguards காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் That land prospers where the king is Easy to see, not harsh of words இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு The world commends and acts his phrase Who sweetly speaks and gives with grace முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் He is the Lord of men who does Sound justice and saves his race செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு Under his shelter thrives the world Who bears remarks bitter and bold கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி He is the Light of Kings who has Bounty, justice, care and grace ------ கல்வி - Education கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு Letter, number, art and science Of living kind both are the eyes கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் The learned alone have eyes on face The ignorant two sores of disgrace உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் To meet with joy and part with thought Of learned men this is the art உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் Like poor before rich they yearn: For knowledge: the low never learn தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு All lands and towns are learner's own Why not till death learning go on! ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து The joy of learning in one birth Exalts man upto his seventh தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் The learned foster learning more On seeing the world enjoy their lore கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை Learning is wealth none could destroy Nothing else gives genuine joy -------- கல்லாமை - Non-learning அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் Like play of chess on squareless board Vain is imperfect loreless word கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று Unlearned man aspiring speech Is breastless lady's love-approach கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் Ev'n unread men are good and wise If before the wise, they hold their peace கல்லாதான் ஓட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் The unread's wit though excellent Is not valued by the savant கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் A man untaught when speech he vaunts Sadly fails before savants உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர் People speak of untaught minds "They just exist like barren lands" நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று Like painted clay-doll is his show Grand subtle lore who fails to know நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு Lower are fools of higher birth Than low-born men of learning's worth விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் Like beasts before men, dunces are Before scholars of shining lore - கேள்வி - Listening செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை Wealth of wealths is listening's wealth It is the best of wealths on earth செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் Some food for the stomach is brought When the ear gets no food for thought செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து Whose ears get lots of wisdom-food Equal gods on oblations fed கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை Though not learned, hear and heed That serves a staff and stay in need இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் Virtuous men's wisdom is found A strong staff on slippery ground எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் Lend ear to good words however few That much will highly exalt you பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர் Who listen well and learn sharply Not ev'n by slip speak foolishly கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி That ear though hearing is dulled Which is not by wisdom drilled நுணங்கிய கேள்வியர் ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது A modest mouth is hard for those Who care little to counsels wise செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் Who taste by mouth and not by ear What if they fare ill or well here? - அறிவுடைமை - The possession of knowledge அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் Wisdom's weapon wards off all woes It is a fort defying foes சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு Wisdom checks the straying senses Expels evils, impels goodness எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு To grasp the Truth from everywhere From everyone is wisdom fair எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு Speaking out thoughts in clear trends Wisdom subtle sense comprehends உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு The wise-world the wise befriend They bloom nor gloom, equal in mind எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு As moves the world so move the wise In tune with changing times and ways அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் The wise foresee what is to come The unwise lack in that wisdom அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் Fear the frightful and act wisely Not to fear the frightful's folly எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் No frightful evil shocks the wise Who guard themselves against surprise அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் Who have wisdom they are all full Whatev'r they own, misfits are nil -- குற்றங்கடிதல் - Avoiding faults செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து Plenty is their prosperity Who're free from wrath pride lust petty இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை Watch like treasure freedom from fault Our fatal foe is that default வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு What fault can be the king's who cures First his faults, then scans others செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் That miser's wealth shall waste and end Who would not for a good cause spend பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று The gripping greed of miser's heart Is more than fault the worst apart வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை Never boast yourself in any mood Nor do a deed that does no good காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் All designs of the foes shall fail If one his wishes guards in veil -------- பெரியாரைத் துணைக்கோடல் - Gaining great men's help அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் Weigh their worth and friendship gain Of men of virtue and mature brain உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் Honour and have the great your own Is rarest of the rare things known தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை To have betters as intimates Power of all powers promotes சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் Ministers are the monarch's eyes Round him should be the right and wise தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் To move with worthy friends who knows Has none to fear from frightful foes இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் No foe can foil his powers whose friends reprove him when he errs இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் The careless king whom none reproves Ruins himself sans harmful foes முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை No capital, no gain in trade No prop secure sans good comrade பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் To give up good friends is ten times worse Than being hated by countless foes --- சிற்றினஞ் சேராமை - Avoiding mean company சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் The ignoble the noble fear The mean hold them as kinsmen dear நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு With soil changes water's taste With mates changes the mental state மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல் Wisdom depends upon the mind The worth of man upon his friend மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு Wisdom seems to come from mind But it truly flows from the kind மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும் Purity of the thought and deed Comes from good company indeed மனம்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை Pure-hearted get good progeny Pure friendship acts with victory மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் Goodness of mind increases gain Good friendship fosters fame again மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து Men of wisdom, though good in mind In friends of worth a new strength find மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து Good mind decides the future bliss Good company gains strength to this நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் No help good company exeeds; The bad to untold anguish leads தெரிந்து செயல்வகை - Deliberation before action அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் Weigh well output the loss and gain And proper action ascertain தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் Nothing is hard for him who acts With worthy counsels weighing facts ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார், The wise risk not their capital In doubtful gains and lose their all தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் They who scornful reproach fear Commence no work not made clear வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு Who marches without plans and ways His field is sure to foster foes செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் Doing unfit action ruins Failing fit-act also ruins எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு Think and dare a proper deed Dare and think is bad in need ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் Toil without a plan ahead Is doomed to fall though supported நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை Attune the deeds to habitude Or ev'n good leads to evil feud எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு Do deeds above reproachfulness The world refutes uncomely mess வலியறிதல் - Judging strength வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் Judge act and might and foeman's strength The allies' strength and go at length ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல் Nothing hampers the firm who know What they can and how to go உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் Many know not their meagre might Their pride breaks up in boastful fight அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் Who adapts not, outsteps measure And brags himself-his fall is sure பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் Even the gentle peacock's plume Cart's axle breaks by gross volume நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும் Beyond the branches' tip who skips Ends the life as his body rips ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி Know the limit; grant with measure This way give and guard your treasure ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை The outflow must not be excess No matter how small income is அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் Who does not know to live in bounds His life seems rich but thins and ends உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் Wealth amassed quickly vanishes Sans level if one lavishes - காலமறிதல் - Knowing proper time பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது By day the crow defeats the owl Kings need right time their foes to quell பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு Well-ordered seasoned act is cord That fortune binds in bon accord அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் What is hard for him who acts With proper means and time and tacts? ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் Choose proper time and act and place Even the world you win with ease காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர் Who want to win the world sublime Wait unruffled biding their time ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து By self-restraint stalwarts keep fit Like rams retreating but to butt பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் The wise jut not their vital fire They watch their time with hidden ire செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை Bear with hostiles when you meet them Fell down their head in fateful time எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் When comes the season ripe and rare Dare and do hard things then and there கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து In waiting time feign peace like stork In fighting time strike like its peck -------- இடனறிதல் - Judging the place தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது No action take, no foe despise Until you have surveyed the place முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும் Many are gains of fortresses Ev'n to kings of power and prowess ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் Weaklings too withstand foe's offence In proper fields of strong defence எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் If fighters fight in vantage field The plans of foes shall be baffled நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற In water crocodile prevails In land before others it fails கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் No aid but daring dash they need When field is chosen right for deed சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் Though force is small, if place is right One quells a foe of well-armed might சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது To face a foe at home is vain Though fort and status are not fine காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேளாள் முகத்த களிறு A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire ------ தெரிந்து தெளிதல் - Testing of men for confidence அறம்பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் Pleasure, gold, fear of life Virtue- Test by these four and trust the true குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு Spotless name of noble birth Shamed of stain-that choice is worth அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் Good and evil in man weigh well Judge him by virtues which prevail பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் By the touchstone of deeds is seen If any one is great or mean அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி Choose not those men without kinsmen Without affine or shame of sin காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும் On favour leaning fools you choose; Folly in all its forms ensues தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் To trust an untried stranger brings Endless troubles on all our kins தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் Trust not without testing and then Find proper work for trusted men தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் Trust without test; The trusted doubt; Both entail troubles in and out -- தெரிந்து வினையாடல் - Testing and entrusting நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் Employ the wise who will discern The good and bad and do good turn வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை Let him act who resource swells; Fosters wealth and prevents ills அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு Trust him in whom these four you see: Love, wit, non-craving, clarity எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் Though tried and found fit, yet we see Many differ before duty அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று Wise able men with power invest Not by fondness but by hard test செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் Discern the agent and the deed And just in proper time proceed இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் This work, by this, this man can do Like this entrust the duty due வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் His fitness for the duty scan Leave him to do the best he can வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு Worker straight the world is straight The king must look to this aright -------- சுற்றந்தழால் - Cherishing kinsmen பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள Let fortunes go; yet kinsmen know The old accustomed love to show விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும் The gift of loving Kins bestows Fadeless fortune's fresh flowers அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று A kinless wealth is like a tank Which overflows without a bank சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் The fruit of growing wealth is gained When kith and kin are happy found கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும் Loving words and liberal hand Encircle kith and kin around பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல் Large giver and wrathless man Commands on earth countless kinsmen காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள The crows hide not; thy call and eat Welfare abides a man of heart பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் From public gaze when kings perceive Each one's merits so many thrive தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும் Forsaken friends will come and stay When cause for discord goes away உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் Who leaves and returns with motive The king should test him and receive ------- பொச்சாவாமை - Unforgetfulness இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு Worse than wrath in excess is Forgetfulness in joy-excess பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு Negligence kills renown just as Ceaseless want wisdom destroys பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு Forgetful nature fails of fame All schools of thinkers say the same அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு The fearful find no fortress here The forgetful find good never முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும் Failing foresight the guardless man Shall rue his folly later on இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல் Forget none; watch with wakeful care Miss none; the gain is sans compare அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின் With cautious care pursue a thing Impossible there is nothing புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் Do what the wise commend as worth If not, for seven births no mirth இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து When joy deludes, their fate recall Whom negligence has made to fall உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் Easy it is a thing to get When the mind on it is set ------ செங்கோன்மை - Just government ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை Test and attest impartially Consult and act the laws justly வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு The world clings to the ruler's feet Whose sceptre clasps the people's heart இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடா தெனின் Not the spear but the sceptre straight That brings success to monarch's might இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் The king protects the entire earth And justice protects his royal worth எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் Hard of access, the unjust king He shall himself his ruin bring குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் Save his subjects and chide the wrong Is flawless duty of a king கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் Killing killers, the king, behold Weeds removes from cropful field -------- கொடுங்கோன்மை - The cruel tyranny கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து The unjust tyrant oppressor Is worse than cruel murderer வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு Sceptered tyrant exacting gold Is "give" of lanced robber bold நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் Spy wrongs daily and do justice Or day by day the realm decays கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை Groaning tears caused by tyrant's sway File the royal wealth away மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி Glory endures by sceptre right Without it wanes the royal light துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு Dry like the earth without rainfall Is graceless king to creatures all இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் To have is worse than having not If ruler is unjust despot முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் The sky withdraws season's shower If the king misuses his power ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் The *six-functioned forget their lore Cows give less if kings guard no more --- * the six functions are : learning, teaching, giving, getting, sacrificing, kindling sacrifice - These are duties of Vedic savants ------ வெருவந்த செய்யாமை - Avoiding terrorism தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து A king enquires and gives sentence Just to prevent future offence கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway வெருவந்த செய்துஒழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் His cruel rod of dreadful deed Brings king's ruin quick indeed இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் As men the king a tyrant call His days dwindled, hasten his fall அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் Reproofs rough and punishments rude Like files conquering power corrode இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு The king who would not take counsels Rages with wrath-his fortune fails செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் The king who builds not fort betimes Fears his foes in wars and dies கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth ------- கண்ணோட்டம் - Benign looks கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு Living in the world implies The bounteous dame of benign eyes கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை World lives by looks of lovely worth Who lack them are burdens of earth பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் Of tuneless song what is the use? Without gracious looks what are eyes? உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண் Except that they are on the face What for are eyes sans measured grace கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும் Kind looks are jewels for eyes to wear Without them they are felt as sore மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர் Like trees on inert earth they grow Who don't eye to eye kindness show கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் Ungracious men lack real eyes Men of real eyes show benign grace கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு Who gracious are but dutiful Have right for this earth beautiful ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை To be benign and bear with foes Who vex us is true virtue's phase பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் Men of graceful courtesy Take hemlock and look cheerfully --- ஒற்றாடல் - Espionage ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் A king should treat these two as eyes The code of laws and careful spies எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் All that happens, always, to all The king should know in full detail ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல் Conquests are not for the monarch Who cares not for the Spy's remark வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று His officers, kinsmen and foes Who watch keenly are worthy spies கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று Fearless gaze, suspectless guise Guarding secrets mark the spies துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று Guised as monks they gather secrets They betray them not under threats மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று A spy draws out other's secrets Beyond a doubt he clears his facts ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் The reports given by one spy By another spy verify ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும் Engage the spies alone, apart When three agree confirm report சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தா னாகும் மறை Give not the spy open reward It would divulge the secret heard! ------ ஊக்கமுடைமை - Energy உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று To own is to own energy All others own but lethargy உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் Psychic heart is wealth indeed Worldly wealth departs in speed ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் he strong in will do not complain The loss of worldly wealth and gain ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க் முடையா னுழை Fortune enquires, enters with boom Where tireless strivers have their home வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு Water depth is lotus height Mental strength is men's merit உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து Let thoughts be always great and grand Though they fail their virtues stand சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு Elephants are firm when arrows hit Great minds keep fit ev'n in defeat உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு Heartless persons cannot boast "We are liberal to our best" பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்க ளாதலே வேறு Mental courage is true manhood Lacking that man is like a wood -------- மடியின்மை - Freedom from sloth குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் Quenchless lamp of ancestry goes When foul idleness encloses மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து The fool who fosters sluggishness Before he dies ruins his house குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றில வர்க்கு Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் To lag, forget, idle and doze These four are pleasure boats of loss படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது With all the wealth of lords of earth The slothful gain nothing of worth இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் The slothful lacking noble deeds Subject themselves to scornful words மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் If sloth invades a noble house It will become a slave of foes குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் The blots on race and rule shall cease When one from sloth gets his release மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு The slothless king shall gain en masse *All regions trod by Lord apace *Hindu mythology holds that Lord Vishnu measured with his feet the three worlds -------- ஆள்வினையுடைமை - Manly effort அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் Feel not frustrate saying "Tis hard" Who tries attains striving's reward வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு In doing work don't break and shirk The world will quit who quits his work தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு On excellence of industry Depends magnanimous bounty தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் Bounty of man who never strives Like sword in eunuch's hand it fails இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் Work who likes and not pleasure Wipes grief of friends, pillar secure முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் Industry adds prosperity Indolence brings but poverty மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள் Illuck abides with sloth they say *Laxmi's gifts with labourers stay பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி Misfortune is disgrace to none The shame is nothing learnt or done தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் Though fate is against fulfilment Hard labour has ready payment ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் Tireless Toiler's striving hand Shall leave even the fate behind *Laxmi the Goddes of wealth and prosperity --- இடுக்கணழியாமை - Hope in mishap இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல் Laugh away troubles; there is No other way to conquer woes வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் Deluging sorrows come to nought When wise men face them with firm thought இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் Grief they face and put to grief Who grieve not grief by mind's relief மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து Who pulls like bulls patiently on Causes grief to grieve anon அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் Before the brave grief grieves and goes Who dare a host of pressing woes அற்றேமென்று அல்லற்படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர் The wise that never gloat in gain Do not fret in fateful ruin இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் The wise worry no more of woes Knowing body's butt of sorrows இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் Who seek not joy, deem grief norm By sorrows do not come to harm இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் In joy to joy who is not bound In grief he grieves not dual round! இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு His glory is esteemed by foes Who sees weal in wanton woes! --- அமைச்சியல் - STATE CABINET அமைச்சு - Ministers கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு He is minister who chooses Right means, time, mode and rare ventures வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு With these he guards people, - by his Knowledge, firmness and manliness பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு A minister cherishes friends Divides foes and the parted blends தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு A minister must sift reflect Select and say surely one fact அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை Have him for help who virtue knows Right wisdom speaks, ever apt in acts மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை Which subtler brain can stand before The keen in brain with learned love? செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் Albeit you know to act from books Act after knowing world's outlooks அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் The man in place must tell the facts Though the ignorant king refutes பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் Seventy crores of foes are better Than a minister with mind bitter முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் The unresolved, though well designed To fulfil an act they have no mind - சொல்வன்மை - Power of speech நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று The goodness called goodness of speech Is goodness which nothing can reach ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு Since gain or ruin speeches bring Guard against the slips of tongue கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கோளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் A speech is speech that holds ears And attracts ev'n those that are averse திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் Weigh thy words and speak; because No wealth or virtue words surpass சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து Speak out thy world so that no word Can win it and say untoward வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் Spotless men speak what is sweet And grasp in others what is meet சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது No foe defies the speaker clear Flawless, puissant, and free from fear விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் The world will quickly carry out The words of counsellors astute பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர் They overspeak who do not seek A few and flawless words to speak இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் Who can't express what they have learnt Are bunch of flowers not fragrant -------- வினைத்துய்மை - Purity of action துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் Friendship brings gain; but action pure Does every good thing we desire என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை Eschew always acts that do not Bring good nor glory on their part ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர் Those in the world desire for fame Should shun the deed that dims their name இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் Though perils press the faultless wise Shun deeds of mean, shameful device எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று Do not wrong act and grieve, "Alas" If done, do not repeat it twice ஈன்றான் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் Those who dare a forbidden deed Suffer troubles though they succeed அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை Gains from weeping, weeping go Though lost, from good deeds blessings flow சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று The wealth gathered in guilty ways Is water poured in wet clay vase -------- வினைத்திட்பம் - Powerful acts வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற A powerful mind does powerful act And all the rest are imperfect ஊறொராவ் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் Shun failing fuss; fail not purpose These two are maxims of the wise கடைகொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும் The strong achieve and then display Woe unto work displayed midway சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் Easy it is to tell a fact But hard it is to know and act வீறெய்தி மாண்டார் வினைதிட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் Dynamic deeds of a doughty soul Shall win the praise of king and all எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் The will-to-do achieves the deed When mind that wills is strong indeed உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து Scorn not the form: for men there are Like linchpin of big rolling car கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல் Waver not; do wakefully The deed resolved purposefully துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை Do with firm will though pains beset The deed that brings delight at last எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு The world merits no other strength But strength of will-to-do at length ------- வினைசெயல்வகை - Modes of action சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது When counsel takes a resolve strong Weak delay of action is wrong தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை Delay such acts as need delay Delay not acts that need display ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் It's best to act when feasible If not see what is possible வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் Work or foe left unfinished Flare up like fire unextinguished பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் Money and means, time, place and deed Decide these five and then proceed முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் Weigh well the end, hindrance, profit And then pursue a fitting act செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல் Know first the secret from experts That is the way of fruitful acts வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று Lure a tusker by a tusker Achieve a deed by deed better நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் Than doing good to friends it is More urgent to befriend the foes உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து Small statesmen fearing people's fear Submit to foes superior -------- தூது - The embassy அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு Love, noble birth, good courtesy Pleasing kings mark true embassy அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று Envoys must bear love for their prince Knowledge and learned eloquence நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு Savant among savants, he pleads Before lanced king, triumphant words அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு Who has these three: good form, sense, lore Can act as bold ambassador தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது Not harsh, the envoy's winsome ways Does good by pleasant words concise கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது Learned; fearless, the envoy tends Convincing words which time demands கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை Knowing duty time and place The envoy employs mature phrase தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு The true envoy of three virtues Is pure helpful and bold in views விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் - வாய்சோரா வன்க ணவன் The envoy who ports the king's message Has flawless words and heart's courage இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு உறுதி பயப்பதாம் தூது Braving death the bold envoy Assures his king's safety and joy மன்னரைச் சேர்ந்தொழுகல் - Walk with kings அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் Move with hostile kings as with fire Not coming close nor going far மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும் Crave not for things which kings desire This brings thee their fruitful favour போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது Guard thyself from petty excess Suspected least, there's no redress செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து Whisper not; nor smile exchange Amidst august men's assemblage எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை Hear not, ask not the king's secret Hear only when he lets it out குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில் வேண்டுப வேட்பச் சொலல் Discern his mood and time and tell No dislikes but what king likes well வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் Tell pleasing things; and never tell Even if pressed what is futile இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும் As young and kinsman do not slight; Look with awe king's light and might கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் The clear-visioned do nothing base Deeming they have the monarch's grace பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் Worthless acts based on friendship old Shall spell ruin and woe untold --- குறிப்பறிதல் - Divining the mind கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் Take him as God who reads the thought Of another man without a doubt குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் By sign who scans the sign admit At any cost in cabinet குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு Untold, he who divines the thought Though same in form is quite apart குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் Among senses what for is eye If thought by thought one can't descry? அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் What throbs in mind the face reflects Just as mirror nearby objects முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் Than face what is subtler to tell First if the mind feels well or ill முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின் Just standing in front would suffice For those who read the mind on face பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் Friend or foe the eyes will show To those who changing outlooks know நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண்ணல்லது இல்லை பிற The scale of keen discerning minds Is eye and eye that secrets finds - அவையறிதல் - Judging the audience அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் The pure in thought and eloquence Adapt their words to audience இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர் Who know the art of speech shall suit Their chosen words to time in fact அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல் They speak in vain at length who talk Words unversed which ears don't take ஓளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் Before the bright be brilliant light Before the muff be mortar white நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு Modest restraint all good excels Which argues not before elders ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு Tongue-slip before the talented wise Is like slipping from righteous ways கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து The learning of the learned shines Valued by flawless scholar-minds உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று To address understanding ones Is to water beds of growing grains புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார் O ye who speak before the keen Forgetful, address not the mean அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் To hostiles who wise words utters Pours ambrosia into gutters -------- அவையஞ்சாமை - Courage before councils வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் The pure fail not in power of words Knowing grand council's moods and modes கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் Among scholars he is scholar Who holds scholars with learned lore பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர் Many brave foes and die in fields The fearless few face wise councils கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல் Impress the learned with your lore From greater savants learn still more ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு Grammar and logic learn so that Foes you can boldly retort வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு To cowards what can sword avail And books to those who councils fail? பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல் Like eunuch's sword in field, is vain His lore who fears men of brain பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார் Though learned much his lore is dead Who says no good before the good கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார் Who fear to face good assembly Are learned idiots, certainly உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் They are breathing dead who dare not Empress before the wise their art -- அரணியல், கூழியல், படையியல் – POLITICS நாடு - The country தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு It's country which has souls of worth Unfailing yields and ample wealth பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு The Land has large luring treasure Where pests are nil and yields are sure பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு It's land that bears pressing burdens And pays its tax which king demands உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு It is country which is free from Fierce famine, plague and foemen's harm பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு Sects and ruinous foes are nil No traitors in a land tranquil கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை The land of lands no ruin knows Even in grief its wealth yet grows இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு Waters up and down, hills and streams With strong forts as limbs country beams பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து Rich yield, delight, defence and wealth Are jewels of lands with blooming health நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு A land is land which yields unsought Needing hard work the land is nought ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு Though a land has thus every thing It is worthless without a king -- அரண் - Fortress ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் The fort is vital for offence Who fear the foes has its defence மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் A crystal fount, a space a mount Thick woods form a fort paramount உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் An ideal fort's so says science: High, broad, strong and hard for access சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண் Ample in space, easy to hold The fort foils enemies bold கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண் Impregnable with stores of food Cosy to live-That fort is good எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண் A fort is full of stores and arms And brave heroes to meet alarms முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண் Besieging foes a fort withstands Darts and mines of treacherous hands முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண் A fort holds itself and defies The attacks of encircling foes முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண் A fort it is that fells the foes And gains by deeds a name glorious எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் But a fort however grand Is nil if heroes do not stand -- பொருள் செயல்வகை - Way of making wealth பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் Naught exists that can, save wealth Make the worthless as men of worth இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு The have-nothing poor all despise The men of wealth all raise and praise பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று Waneless wealth is light that goes To every land and gloom removes அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் The blameless wealth from fairest means Brings good virtue and also bliss அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் Riches devoid of love and grace Off with it; it is disgrace! உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள் Escheats, derelicts; spoils of war Taxes duties are king's treasure அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு Grace the child of love is nourished By the wet-nurse of wealth cherished குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை Treasures in hand fulfil all things Like hill-tuskers the wars of kings செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல் Make wealth; there is no sharper steel The insolence of foes to quell ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு They have joy and virtue at hand Who acquire treasures abundant -- படைமாட்சி - The glory of army உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாம் தலை The daring well-armed winning force Is king's treasure and main resource உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது Through shots and wounds brave heroes hold Quailing not in fall, the field ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் Sea-like ratfoes roar What if? They perish at a cobra's whiff அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை The army guards its genial flame Not crushed, routed nor marred in name கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை The real army with rallied force Resists even Death-God fierce மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு Manly army has merits four:- Stately-march, faith, honour, valour தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து Army sets on to face the foes Knowing how the trend of war goes அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் Army gains force by grand array Lacking in stay or dash in fray சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை Army shall win if it is free From weakness, aversion, poverty நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் With troops in large numbers on rolls Army can't march missing gen'rals படைச்செருக்கு - Military pride என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின் றவர் Stand not before my chief, O foes! Many who stood, in stones repose கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது To lift a lance that missed a tusker Is prouder than shaft that hit a hare பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு Valour is fight with fierce courage Mercy to the fallen is its edge கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் At the tusker he flings his lance One in body smiles another chance விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு When lances dart if heroes wink "It is a rout" the world will think விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து The brave shall deem the days as vain Which did not battle-wounds sustain சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து Their anklets aloud jingle their name Who sacrifice their life for fame உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர் The king may chide, they pursue strife; They fear loss of glory; not life இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் Who will blame the heroes that lose Their lives in war to keep their vows? புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து Such a death shall be prayed for Which draws the tears of the ruler - நட்பியல் – ALLIANCE நட்பு - Friendship செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு Like friendship what's so hard to gain? That guards one against acts villain? நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு - Friendship Good friendship shines like waxing moon, The bad withers like waning moon நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு Like taste in books good friendship grows The more one moves the more he knows நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு Not to laugh is friendship made But to hit when faults exceed புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் No close living nor clasping grip Friendship's feeling heart's fellowship முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு Friendship is not more smile on face It is the smiling heart's embrace அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு From ruin friendship saves and shares The load of pain and right path shows உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதுஆம் நட்பு Friendship hastens help in mishaps Like hands picking up dress that slips நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை Friendship is enthroned on the strength That always helps with utmost warmth இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு "Such we are and such they are" Ev'n this boast will friendship mar ------- நட்பாராய்தல் - Testing friendship நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரம் தரும் Friendship made without frequent test Shall end in grief and death at last குணனுங் குடிமையும் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு Temper, descent, defects and kins Trace well and take companions குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு Take as good friend at any price The nobly born who shun disgrace அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல் Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல் Is there a test like misfortune A rod to measure out kinsmen? ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல் Keep off contacts with fools; that is The greatest gain so say the wise உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ணாற்றறுப்பார் நட்பு Off with thoughts that depress the heart Off with friends that in woe depart கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும் Friends who betray at ruin's brink Burn our mind ev'n at death to think மருவுக மாசற்றார் கேண்மையொன் றீந்தும் ஒருவுக வொப்பிலார் நட்பு The blameless ones as friends embarace; Give something and give up the base -- பழைமை - Intimacy பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு That friendship is good amity Which restrains not one's liberty நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன் Friendship's heart is freedom close; Wise men's duty is such to please பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை Of long friendship what is the use Righteous freedom if men refuse? விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் Things done unasked by loving friends Please the wise as familiar trends! பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் Offence of friends feel it easy As folloy or close intimacy எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு They forsake not but continue In friendship's bounds though loss ensue அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் Comrades established in firm love Though ruin comes waive not their vow கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் Fast friends who list not tales of ill Though wronged they say "that day is well" கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு To love such friends the world desires Whose friendship has unbroken ties விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் Even foes love for better ends Those who leave not long-standing friends தீநட்பு - Bad friendship பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது Swallowing love of soulless men Had better wane than wax anon உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என் Who fawn in wealth and fail in dearth Gain or lose; such friends have no worth உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் Cunning friends who calculate Are like thieves and whores wicked அமரகத்து ஆற் றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை Better be alone than trust in those That throw in field like faithless horse செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று Friends low and mean that give no help- Leave them is better than to keep பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் Million times the wise man's hate Is better than a fool intimate நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும் Ten-fold crore you gain from foes Than from friends who are vain laughers ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் Without a word those friends eschew Who spoil deeds which they can do கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு Even in dreams the tie is bad With those whose deed is far from word எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு Keep aloof from those that smile At home and in public revile --- கூடாநட்பு - False friendship சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு The friendship by an enemy shown Is anvil in time, to strike you down இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் Who pretend kinship but are not Their friendship's fickle like woman's heart பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது They may be vast in good studies But heartfelt-love is hard for foes முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் Fear foes whose face has winning smiles Whose heart is full of cunning guiles மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று Do not trust in what they tell Whose mind with your mind goes ill நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் The words of foes is quickly seen Though they speak like friends in fine சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் Trust not the humble words of foes Danger darts from bending bows தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து Adoring hands of foes hide arms Their sobbing tears have lurking harms மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று In open who praise, at heart despise Cajole and crush them in friendly guise பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் When foes, in time, play friendship's part Feign love on face but not in heart - பேதைமை - Folly பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் This is folly's prominent vein To favour loss and forego gain பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல் Folly of follies is to lead A lewd and lawless life so bad நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் Shameless, aimless, callous, listless Such are the marks of foolishness ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு The fool suffers seven fold hells In single birth of hellish ills பொய்படும் ஒன்றொ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் A know-nothing fool daring a deed Not only fails but feels fettered ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின் Fools possessing something on hand Like dazed and drunken stupids stand பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல் Friendship with fools is highly sweet For without a groan we part கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet புல்லறிவாண்மை - Petty conceit அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு Want of wisdom is want of wants Want of aught else the world nev'r counts அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம் When fool bestows with glee a gift It comes but by getter's merit அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது The self-torments of fools exceed Ev'n tortures of their foes indeed வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னுஞ் செருக்கு Stupidity is vanity That cries "We have sagacity" கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும் Feigning knowledge that one has not Leads to doubt ev'n that he has got அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி Fools their nakedness conceal And yet their glaring faults reveal அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு The fool that slights sacred counsels Upon himself great harm entails ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் He listens not nor himself knows Plague is his life until it goes காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு Sans Self-sight in vain one opens Sight To the blind who bet their sight as right உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் To people's "Yes" who proffer "No" Deemed as ghouls on earth they go -- இகல் - Hatred இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் Hatred is a plague that divides And rouses illwill on all sides பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை Rouse not hatred and confusion Though foes provoke disunion இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவவில்லாத் தாவில் விளக்கம் தரும் Shun the plague of enmity And win everlasting glory இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் Hate-the woe of woes destroy; Then joy of joys you can enjoy இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் Who can overcome them in glory That are free from enmity? இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து His fall and ruin are quite near Who holds enmity sweet and dear மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் They cannot see the supreme Truth Who hate and injure without ruth இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு To turn from enmity is gain Fomenting it brings fast ruin இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு Fortune favours when hate recedes Hatred exceeding ruin breeds இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு All evils come from enmity All goodness flow from amity ---- பகைமாட்சி - Noble hostility வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை Turn from strife with foes too strong With the feeble for battle long அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong? அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது The wrathful restive man is prey To any, anywhere any day வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது Crooked, cruel, tactless and base Any foe can fell him with ease காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும் Blind in rage and mad in lust To have his hatred is but just கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை Pay and buy his enmity Who muddles chance with oddity குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப்பு உடைத்து With no virtue but full of vice He loses friends and delights foes செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் The joy of heroes knows no bounds When timid fools are opponents கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி Glory's light he will not gain Who fails to fight a fool and win -- பகைத்திறந் தெரிதல் - Apparising enemies பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று Let not one even as a sport The ill-natured enmity court வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை Incur the hate of bow-ploughers But not the hate of word-ploughers ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன் Forlorn, who rouses many foes The worst insanity betrays பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு This world goes safely in his grace Whose heart makes friends even of foes தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று Alone, if two foes you oppose Make one of them your ally close தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல் Trust or distrust; during distress Keep aloof; don't mix with foes நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து To those who know not, tell not your pain Nor your weakness to foes explain வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு Know how and act and defend well The pride of enemies shall fall இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து Cut off thorn-trees when young they are; Grown hard, they cut your hands beware உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் To breathe on earth they are not fit Defying foes who don't defeat - உட்பகை - Secret foe நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் Traitorous kinsmen will make you sad As water and shade do harm when bad வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு You need not sword-like kinsmen fear Fear foes who feign as kinsmen dear உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்து மட்பகையின் மாணத் தெறும் The secret foe in days evil Will cut you, beware, like potters' steel மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவுந் தரும் The evil-minded foe within Foments trouble, spoils kinsmen! உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவுந் தரும் A traitor among kinsmen will Bring life-endangering evil ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது Discord in kings' circle entails Life-destroying deadly evils செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி A house hiding hostiles in core Just seems on like the lid in jar அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி By secret spite the house wears out Like gold crumbling by file's contact எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு Ruin lurks in enmity As slit in sesame though it be உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று Dwell with traitors that hate in heart Is dwelling with snake in selfsame hut -- பெரியாரைப் பிழையாமை - Offend not the great ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாம் தலை Not to spite the mighty ones Safest safeguard to living brings பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும் To walk unmindful of the great Shall great troubles ceaseless create கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு Heed not and do, if ruin you want Offence against the mighty great கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் The weak who insult men of might Death with their own hands invite யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் Where can they go and thrive where Pursued by powerful monarch's ire? எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் One can escape in fire caught The great who offends escapes not வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின் If holy mighty sages frown Stately gifts and stores who can own? குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து When hill-like sages are held small The firm on earth lose home and all ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் Before the holy sage's rage Ev'n Indra's empire meets damage இறந்தமைந்த சார்புடைய ரா யினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின் Even mighty aided men shall quail If the enraged holy seers will - பெண்வழிச்சேறல் - Being led by women மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது Who dote on wives lose mighty gain That lust, dynamic men disdain பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும் Who dotes, unmanly, on his dame His wealth to him and all is shame இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் Who's servile to his wife always Shy he feels before the wise மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று Fearing his wife salvationless The weaklings' action has no grace இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் Who fears his wife fears always Good to do to the good and wise இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர் Who fear douce arms of their wives Look petty even with god-like lives பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து Esteemed more is women bashful Than man servile unto her will நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர் By fair-browed wives who are governed Help no friends nor goodness tend அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல் No virtue riches nor joy is seen In those who submit to women எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல் Thinkers strong and broad of heart By folly on fair sex do not dote ------- வரைவின் மகளிர் - Wanton women அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் For gold, not love their tongue cajoles Men are ruined by bangled belles பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் Avoid ill-natured whores who feign Love only for their selfish gain பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று The false embrace of whores is like That of a damned corpse in the dark பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர் The wise who seek the wealth of grace Look not for harlots' low embrace பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் The lofty wise will never covet The open charms of a vile harlot தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் Those who guard their worthy fame Shun the wanton's vaunting charm நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள் Hollow hearts alone desire The arms of whores with hearts elsewere ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு Senseless fools are lured away By arms of sirens who lead astray வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு The soft jewelled arms of whores are hell Into which the degraded fall இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு Double-minded whores, wine and dice Are lures of those whom fortune flies - கள்ளுண்ணாமை - Not drinking liquor உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் Foes fear not who for toddy craze The addicts daily their glory lose உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் Drink not liquor; but let them drink Whom with esteem the wise won't think ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி The drunkard's joy pains ev'n mother's face How vile must it look for the wise? நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு Good shame turns back from him ashamed Who is guilty of wine condemned கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து மெய்யறி யாமை கொளல் To pay and drink and lose the sense Is nothing but rank ignorance துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் They take poison who take toddy And doze ev'n like a dead body உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் The secret drunkards' senses off Make the prying public laugh களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் Don't say "I'm not a drunkard hard" The hidden fraud is known abroad களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று Can torch search one in water sunk? Can reason reach the raving drunk? கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு The sober seeing the drunkard's plight On selves can't they feel same effect? சூது - Gambling வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று Avoid gambling, albeit you win Gulping bait-hook what does fish gain? ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு Can gamblers in life good obtain Who lose a hundred one to gain? உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் If kings indulge in casting dice All their fortune will flow to foes சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல் Nothing will make you poor like game Which adds to woes and ruins fame கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் The game, game-hall and gambler's art Who sought with glee have come to nought அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்ட டார் Men swallowed by the ogress, dice Suffer grief and want by that vice பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் If men their time in game-den spend Ancestral wealth and virtues end பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது Game ruins wealth and spoils grace Leads to lies and wretched woes உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின் Dress, wealth, food, fame, learning-these five In gambler's hand will never thrive இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் Love for game grows with every loss As love for life with sorrows grows - மருந்து - Medicine மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று Wind, bile and phlegm three cause disease So doctors deem it more or less மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் After digestion one who feeds His body no medicine needs அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கு மாறு Eat food to digestive measure Life in body lasts with pleasure அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து Know digestion; with keen appetite Eat what is suitable and right மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு With fasting adjusted food right Cures ills of life and makes you bright இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய் Who eats with clean stomach gets health With greedy glutton abides ill-health தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் who glut beyond the hunger's fire Suffer from untold diseases here நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் Test disease, its cause and cure And apply remedy that is sure உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் Let the skilful doctor note The sickmen, sickness, season and treat உற்றவன் தீர்ப்பான் மருந்து - Medicine உழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து Patient, doctor, medicine and nurse Are four-fold codes of treating course குடி - Nobility இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு Right-sense and bashfulness adorn By nature only the noble-born ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் The noble-born lack not these three: Good conduct, truth and modesty நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு Smile, gift, sweet words and courtesy These four mark true nobility அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் Even for crores, the noble mood Cannot bend to degrading deed வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று The means of gift may dwindle; yet Ancient homes guard their noble trait சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார் Who guard their family prestige pure Stoop not to acts of cunning lure குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து The faults of nobly-born are seen Like on the sky the spots of moon நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும் If manners of the good are rude People deem their pedigree crude நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் Soil's nature is seen in sprout The worth of birth from words flow out நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு All gain good name by modesty Nobility by humility - ஒழிபியல் – MISCELLANEOUS மானம் - Honour இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் Though needed for your life in main, From mean degrading acts refrain சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் Who seek honour and manly fame Don't do mean deeds even for name பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு Be humble in prosperity In decline uphold dignity தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை Like hair fallen from head are those Who fall down from their high status குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் Even hill-like men will sink to nought With abrus-grain-like small default புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை Why fawn on men that scorn you here It yields no fame, heaven's bliss neither ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று Better it is to die forlorn Than live as slaves of those who scorn மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து Is nursing body nectar sweet Even when one's honour is lost? மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் Honour lost, the noble expire Like a yak that loses its hair இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு Their light the world adores and hails Who will not live when honour fails - பெருமை - Greatness ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல் A heart of courage lives in light Devoid of that one's life is night பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் All beings are the same in birth But work decides their varied worth மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் Ignoble high not high they are The noble low not low they fare ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு Greatness like woman's chastity Is guarded by self-varacity பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல் Great souls when their will is active Do mighty deeds rare to achieve சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு The petty-natured ones have not The mind to seek and befriend the great இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின் The base with power and opulence Wax with deeds of insolence பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து Greatness bends with modesty Meanness vaunts with vanity பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் Greatness is free from insolence Littleness swells with that offence அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் Weakness of others greatness screens Smallness defects alone proclaims - சான்றாண்மை - Sublimity கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு All goodness is duty to them Who are dutiful and sublime குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று Good in the great is character Than that there is nothing better அன்புநாண் ஓப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் Love, truth, regard, modesty, grace These five are virtue's resting place கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு Not to kill is penance pure Not to slander virtue sure ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை Humility is valour's strength A force that averts foes at length சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் To bear repulse e'en from the mean Is the touch-stone of worthy men இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு Of perfection what is the gain If it returns not joy for pain? இன்மை ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின் No shame there is in poverty To one strong in good quality ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் Aeons may change but not the seer Who is a sea of virtue pure சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை The world will not more bear its weight If from high virtue fall the great - பண்புடைமை - Courtesy எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு To the polite free of access Easily comes courteousness அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு Humanity and noble birth Develop courtesy and moral worth உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு Likeness in limbs is not likeness It's likeness in kind courteousness நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு The world applauds those helpful men Whose actions are just and benign நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புஉள பாடறிவார் மாட்டு The courteous don't even foes detest For contempt offends even in jest பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் The world rests with the mannered best Or it crumbles and falls to dust அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் The mannerless though sharp like file Are like wooden blocks indocile நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை Discourtesy is mean indeed E'en to a base unfriendly breed நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள் To those bereft of smiling light Even in day the earth is night பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந்த தற்று The wealth heaped by the churlish base Is pure milk soured by impure vase --- நன்றியில் செல்வம் - Futile wealth வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல் Dead is he with wealth in pile Unenjoyed, it is futile பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு The niggard miser thinks wealth is all He hoards, gives not is born devil ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை A burden he is to earth indeed Who hoards without a worthy deed எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன் What legacy can he leave behind Who is for approach too unkind கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல் What is the good of crores they hoard To give and enjoy whose heart is hard ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான் Great wealth unused for oneself nor To worthy men is but a slur அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று Who loaths to help have-nots, his gold Is like a spinster-belle grown old நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று The idle wealth of unsought men Is poison-fruit-tree amidst a town அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் Others usurp the shining gold In loveless, stingy, vicious hold சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து The brief want of the rich benign Is like rainclouds growing thin -- நாணுடைமை - Sensitiveness to shame கருமத்தால் நாணுதல் நாணுத்; திருநுதல் நல்லவர் நாணுப் பிற To shrink from evil deed is shame The rest is blush of fair-faced dame ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு Food, dress and such are one for all Modesty marks the higher soul ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு All lives have their lodge in flesh Perfection has its home in blush அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை Shame is the jewel of dignity Shameless swagger is vanity பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு In them resides the sense of shame Who blush for their and other's blame நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர் The great refuse the wonder-world Without modesty's hedge and shield நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர் For shame their life the shame-sensed give Loss of shame they won't outlive பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து Virtue is much ashamed of him Who shameless does what others shame குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை Lapse in manners injures the race Want of shame harms every good grace நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று Movements of the shameless in heart Are string-led puppet show in fact --- குடிசெயல்வகை - Promoting family welfare கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல் No greatness is grander like Saying "I shall work without slack" ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி These two exalt a noble home Ardent effort and ripe wisdom குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் When one resolves to raise his race Loin girt up God leads his ways சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு Who raise their races with ceaseless pain No need for plan; their ends will gain குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு Who keeps his house without a blame People around, his kinship claim நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் Who raise their race which gave them birth Are deemed as men of manly worth அமரகத்து வன்கண்ணார் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை Like dauntless heroes in battle field The home-burden rests on the bold குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் No season have they who raise their race Sloth and pride will honour efface இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு Is not his frame a vase for woes Who from mishaps shields his house? இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி A house will fall by a mishap With no good man to prop it up --- உழவு - Farming சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை Farming though hard is foremost trade Men ply at will but ploughmen lead உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து Tillers are linch-pin of mankind Bearing the rest who cannot tend உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் They live who live to plough and eat The rest behind them bow and eat பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் Who have the shade of cornful crest Under their umbra umbrellas rest இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் Who till and eat, beg not; nought hide But give to those who are in need உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை Should ploughmen sit folding their hands Desire-free monks too suffer wants தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் Moulds dried to quarter-dust ensure Rich crops without handful manure ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு Better manure than plough; then weed; Than irrigating, better guard செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் If landsmen sit sans moving about The field like wife will sulk and pout இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் Fair good earth will laugh to see Idlers pleading poverty - நல்குரவு - Poverty இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது What gives more pain than scarcity? No pain pinches like poverty இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் The sinner Want is enemy dire Of joys of earth and heaven there தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை The craving itch of poverty Kills graceful words and ancestry இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் Want makes even good familymen Utter words that are low and mean நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும் The pest of wanton poverty Brings a train of misery நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் The poor men's words are thrown away Though from heart good things they say அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் Even the mother looks as stranger The poor devoid of character இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு The killing Want of yesterday Will it pester me even to-day? நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது One may sleep in the midst of fire In want a wink of sleep is rare துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று Renounce their lives the poor must Or salt and gruel go to waste --- இரவு - Asking இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று Demand from those who can supply Default is theirs when they deny இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின் Even demand becomes a joy When the things comes without annoy கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து Request has charm form open hearts Who know the duty on their part இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு Like giving even asking seems From those who hide not even in dreams கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது The needy demand for help because The world has men who don't refuse கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் The pain of poverty shall die Before the free who don't deny இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உடைப்பது உடைத்து When givers without scorn impart A thrill of delight fills the heart இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று This grand cool world shall move to and fro Sans Askers like a puppet show ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை Where stands the glory of givers Without obligation seekers? இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை தானேயும் சாலும் கரி The needy should not scowl at "No" His need anothers' need must show * Saint valluvar talks of two kinds of Asking:- () Asking help for public causes or enterprises () Begging when one is able to work and this is condemned -------- இரவச்சம் - Dread of beggary கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும் Not to beg is billions worth E'en from eye-like friends who give with mirth இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் Let World-Maker loiter and rot If "beg and live" be human fate இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல் Nothing is hard like hard saying "We end poverty by begging" இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு All space is small before the great Who beg not e'en in want acute தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி னூங்கினியது இல் Though gruel thin, nothing is sweet Like the food earned by labour's sweat ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் It may be water for the cow Begging tongue is mean anyhow இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று If beg they must I beg beggers Not to beg from shrinking misers இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும் The hapless bark of beggary splits On the rock of refusing hits இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் The heart at thought of beggars melts; It dies at repulsing insults கரப்பவர்க்கு யாஙகொளிக்குங் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர் The word "No" kills the begger's life Where can the niggard's life be safe? - கயமை - Meanness மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல் The mean seem men only in form We have never seen such a sham நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர் The base seem richer than the good For no care enters their heart or head தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் The base are like gods; for they too As prompted by their desire do அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ் When the base meets a rake so vile Him he will exceed, exult and smile அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது Fear forms the conduct of the low Craving avails a bit below அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் The base are like the beaten drum Since other's secrets they proclaim ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லா தவர்க்கு The base their damp hand will not shake But for fists clenched their jaws to break சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் The good by soft words profits yield The cane-like base when crushed and killed உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் Faults in others the mean will guess On seeing how they eat and dress எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து The base hasten to sell themselves From doom to flit and nothing else -- இன்பத்துப்பால்- Part III - NATURE OF LOVE களவியல் - ON SECRET OF MARRIAGE தகையணங்குறுத்தல் Beauty's dart குறிப்பறிதல் Signs speak the heart புணர்ச்சி மகிழ்தல் Embrace bliss நலம் புனைந்துரைத்தல் Beauty extolled காதற் சிறப்புரைத்தல் Love's excellence நாணுத் துறவுரைத்தல் Decorum defied அலர் அறிவுறுத்தல் Public clamour கற்பியல் - CHASTE WEDDED LOVE பிரிவாற்றாமை Pangs of separation படர்மெலிந்திரங்கல் Wailing of pining love கண்விதுப்பழிதல் Wasteful look for wistful love பசப்புறு பருவரல் Wailing over pallor தனிப்படர் மிகுதி Pining alone நினைந்தவர் புலம்பல் Sad memories கனவுநிலை உரைத்தல் Dream visions பொழுதுகண்டிரங்கல் Eventide sigh உறுப்புநலன் அழிதல் Limbs languish நெஞ்சொடு கிளத்தல் Soliloquy நிறையழிதல் Reserve lost அவர்வயின் விதும்பல் Mutual yearning குறிப்பறிவுறுத்தல் Feeling surmised புணர்ச்சி விதும்பல் Longing for reunion நெஞ்சொடு புலத்தல் Chiding the heart புலவி Bouderic புலவி நுணுக்கம் Feigned anger ஊடலுவகை Sulking charm ---- தகையணங்குறுத்தல் - Beauty's dart அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock! நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து The counter glances of this belle Are armied dart of the Love-Angel பண்டறியேன் கூறறென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு Not known before - I spy Demise In woman's guise with battling eyes கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண் This artless dame has darting eyes That drink the life of men who gaze கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து Is it death, eye or doe? All three In winsome woman's look I see கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண் If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து Which jewel can add to her beauty With fawn-like looks and modesty? உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று To the drunk alone is wine delight Nothing delights like love at sight -- குறிப்பறிதல் - Signs speak the heart இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோககொன் றந்நோய் மருந்து Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் She looked; looking bowed her head And love-plant was with water fed யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் No direct gaze; a side-long glance She darts at me and smiles askance உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் Their words at first seem an offence But quick we feel them friendly ones செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் What a grace the slim maid has! As I look she slightly smiles ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள Between lovers we do discern A stranger's look of unconcern கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல The words of mouth are of no use When eye to eye agrees the gaze -- புணர்ச்சி மகிழ்தல் - Embrace bliss கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஓண்டொடி கண்ணே உள In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து The cure for ailment is somewhere For fair maid's ill she is the cure தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு Is lotus-eyed lord's heaven so sweet As sleep in lover's arms so soft? நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் Away it burns and cools anear Wherefrom did she get this fire? வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் The arms of my flower-tressed maid Whatever I wish that that accord உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் My simple maid has nectar arms Each embrace brings life-thrilling charms தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு Ah the embrace of this fair dame Is like sharing one's food at home வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு Joy is the fast embrace that doth Not admit e'en air between both ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் Sulking, feeling and clasping fast These three are sweets of lover's tryst அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு As knowledge reveals past ignorance So is the belle as love gets close நலம் புனைந்துரைத்தல் - Beauty extolled நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் Soft blessed anicha flower, hail On whom I dote is softer still மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares! மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் Stars are confused to know which is The moon and which is woman's face அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து Are there spots on the lady's face Just as in moon that changes phase? மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி Like my lady's face if you shine All my love to you; hail O moon! மலர்ன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon! அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair - காதற் சிறப்புரைத்தல் - Love's excellence பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் Like milk and honey the dew is sweet From her white teeth whose word is soft உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு Love between me and this lady Is like bond between soul and body கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம் Depart image in my pupil Giving room to my fair-browed belle! வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து Life with my jewel is existence Death it is her severance உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் Can I forget? I recall always The charms of her bright battling eyes கண்ணுன்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எங் காத லவர் So subtle is my lover's form Ever in my eyes winking, no harm கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து My lover in my eyes abides I paint them not lest he hides நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து My lover abides in my heart I fear hot food lest he feels hot இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே எதிலர் என்னும்இவ் வூர் My eyes wink not lest he should hide And him as cruel the townsmen chide உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர் He abides happy in my heart But people mistake he is apart --- நாணுத் துறவுரைத்தல் - Decorum defied காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி Pangs of passion find no recourse Except riding *'palmyra horse' நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து Pining body and mind lose shame And take to riding of the palm நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றோர் ஏறும் மடல் Once I was modest and manly My love has now Madal only காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை Rushing flood of love sweeps away The raft of shame and firmness, aye! தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண் Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் Lust betrays itself in haste Though women are highly soft and chaste அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு My perplexed love roves public street Believing that none knows its secret யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage ------- அலரறிவுறுத்தல் - Public clamour அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் Rumour sustains my existence Good luck! many know not its sense மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர் Rumour gives me the flower-like belle People know not what rare angel உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து I profit by this public rumour Having not, I feel, I have her கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து Rumour inflames the love I seek Or else it becomes bleak and weak களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது Drink delights as liquor flows Love delights as rumour grows கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று One lasting day we met alone Lasting rumours eclipse our moon ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை Who said "fear not" flared up rumour Why then should I blush this clamour? தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்கும்இவ் வூர் Town raising this cry, I desire Consent is easy from my sire ---- பிரிவாற்றாமை - Pangs of separation செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை Tell me if you but do not leave, Your quick return to those who live இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு His sight itself was pleasing, near Embrace pains now by partings fear அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான் On whom shall I lay my trust hence While parting lurks in knowing ones? அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு He parts whose love told me - fear not Is my trust in him at default? ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு Stop his parting - my life to save Meeting is rare if he would leave பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை His hardness says, "I leave you now" Is there hope of his renewed love? துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை Will not my gliding bangles' cry The parting of my lord betray? இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு Bitter is life in friendless place; Worse is parting love's embrace! தொடின்கடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ Can fire that burns by touch burn like Parting of the hearts love-sick? அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர் Many survive pangs of parting Not I this sore so distressing ---- படர்மெலிந்திரங்கல் - Wailing of pining love மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் It swells out like baled out spring How to bear this pain so writhing? கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் I can't conceal this nor complain For shame to him who caused this pain காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பி னகத்து In life - poles of this wearied frame Are poised the weights of lust and shame காமக் கடல்மன்னும் உண்டோ அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் My lust is a sea, I do not see A raft to go across safely துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் What wilt they prove when they are foes Who in friendship bring me woes! இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது The pleasure in love is oceanful But its pangs are more painful காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா Crueller than that cruel he Are midnight hours gliding slowly உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண் Like heart, if my sight reaches him It won't in floods of tears swim! - கண்விதுப்பழிதல் - Wasteful look for wistful love கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம் கண்டது The eye pointed him to me; why then They weep with malady and pine? தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன் Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance? கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து Eyes darted eager glance that day It's funny that they weep today பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து These eyes left me to endless grief Crying adry without relief படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண் My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண் Let tears dry up pining pining In eyes that eyed him longing longing பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண் Ther's he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் He comes; no sleep; he goes; no sleep This is the fate of eyes that weep மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து Like drum beats eyes declare my heart; From people who could hide his secret? -- பசப்புறு பருவரல் - Wailing over pallor நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க்கு உரைக்கோ பிற My lover's parting, I allowed Whom to complain my hue pallid? அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு Claiming it is begot through him Pallor creeps and rides over my frame சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது My lover departed me there And pallor usurped my body here விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு Just as darkness waits for light-off Pallor looks for lover's arms-off புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு From his embrace I turned a nonce This pallor swallowed me at once பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல் On my pallor they cast a slur But none says "lo he parted her" பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நல்நிலையார் ஆவர் எனின் Let all my body become pale If he who took my leave fares well பசப்பெஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் Let people call me all pallid But my lover let them not deride --- தனிப்படர்மிகுதி - Pining alone தாம்விழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி Stoneless fruit of love they have Who are beloved by those they love வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி The lover - and -beloved's self-givings Are like rains to living beings வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு The pride of living is for those Whose love is returned by love so close வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் Whose love is void of love in turn Are luckless with all esteems they earn நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை What can our lover do us now If he does not requite our love? ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது One sided pains; love in both souls Poises well like shoulder poles பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் This cupid aims at me alone; Knows he not my pallor and pain? வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் None is so firm as she who loves Without kind words from whom she dotes நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு The lover accords not my desires And yet his words sweeten my ears உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு You tell your grief to listless he Bless my heart! rather fill up sea! ---- நினைந்தவர் புலம்பல் - Sad memories உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது Love is sweeter than wine; for vast Is its delight at very thought எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல் Pains are off at the lover's thought In all aspects this love is sweet நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் To sneeze I tried hence but could not Me he tried to think but did not யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர் Have I a place within his heart? Ah from mine he will never depart தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல் Shame! My heart often he enters Banning me entry into his மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் Beyond the thought of life with him What else of life can I presume? மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் What will happen if I forget When his memory burns my heart? எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு I bring him to ceaseless memory He chides not; and thus honours me விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைத்து Dear life ebbs away by thought Of him who said we are one heart விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி Hail moon! Set not so that I find Him who left me but not my mind -- கனவுநிலை யுரைத்தல் - Dream visions காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து How shall I feast this dream-vision That brings the beloved's love-mission? கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன் I beg these fish-like dark eyes sleep To tell my lover how life I keep நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர் In wakeful hours who sees me not I meet in dreams and linger yet கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு In dreams I enjoy his love-bliss Who in wakeful hours I miss நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதெ இனிது Dream-sight of him delights at once Awake- What of seeing him -hence நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன் If wakeful hours cometo nought My lov'r in dreams would nev'r depart நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது Awake he throws my overtures Adream, ah cruel! he tortures! துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து Asleep he embraces me fast; Awake he enters quick my heart நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர் In dreams who don't discern lovers Rue their missing in wakeful hours நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர் The townsmen say he left me thus In dreams failing to see him close --- பொழுதுகண்டிரங்கல் - Eventide sigh மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது Bless you! you are not eventide But killing dart to wedded bride! புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim! பனிஅரும்பிப் பைதல்கொள் மாலைதுனி அரும்பித் துன்பம் வளர வரும் Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும் Lover away, comes eventide Like slayer to field of homicide காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை What good have I done to morning And what evil to this evening? மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் Evening pangs I have not known When my lord nev'r left me alone காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து Deluding eve if it prolongs The whole town will suffer love-pangs பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர் Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth -- உறுப்பு நலனழிதல் - Limbs languish சிறுமை நமக்குஒழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் To lift from want he left me afar His thought makes my eyes blush the flower நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் My pale tearful eyes betray The hardness of my husband, away தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் These arms that swelled on nuptial day Now shrunk proclaim "He is away" பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் The front of this fair one O paled As my clasping arms loosed their hold முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair -------- நெஞ்சொடு கிளத்தல் - Soliloquy நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து Think of, O heart, some remedy To cure this chronic malady காதல் அவரில ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு Bless O mind! you pine in vain For me he has no love serene இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காண லுற்று Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் He spurns our love and yet, O mind, Can we desert him as unkind? கலந்துணர்ந்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு Wrath is false, O heart, face-to face Sans huff, you rush to his sweet embrace காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு Off with love O mind, or shame I cannot endure both of them பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு Without pity he would depart! You sigh and seek his favour, poor heart! உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு The lover lives in Self you know; Whom you think, mind to whom you go? துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின் Without a thought he deserted us To think of him will make us worse -- நிறையழிதல் - Reserve lost காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு Passion's axe shall break the door Of reserve bolted with my honour காம மெனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் The thing called lust is a heartless power It sways my mind at midnight hour மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் How to hide this lust which shows Itself while I sneeze unawares! நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும் I was proud of my sex-reserve Lo lust betrays what I preserve செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று Dignity seeks not a deserter But Love-sick is its innovator செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் O Grief, my deserter you seek Of your caprice what shall I speak! நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின் When lover's love does what it desires We forget all shame unawares பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை The cheater of many wily arts His tempting words break through women's hearts புலப்ப லெனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு In huff I went and felt at ease Heat to heart in sweet embrace நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் To feign dislike is it not rare For mates who melt like fat in fire? அவர்வயின் விதும்பல் - Mutual yearning வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து Beauty pales and my bracelets slide; Why not forget him now, bright maid? உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன் Will as guide he went to win Yet I live-to see him again கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறும்என் நெஞ்சு My heart in rapture heaves to see His retun with love to embrace me காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்றோள் பசப்பு Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders flies வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட Let my spouse return just a day Joy-drink shall drive my pain away புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின் If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both? வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து May the king fight and win and give And with my wife I will feast this eve! ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு One day seems as seven to those Who yearn return of distant spouse பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால் When her heart is broken, what is The good of meeting and love-embrace? - குறிப்பறிவுறுத்தல் - Feeling surmised கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்க லுறுவதொன்று உண்டு You hide; but your painted eyes Restraint off, report your surmise கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது With seemly grace and stem-like arms The simple she has ample charms மணியில் திகழ்தரு நூல்போல் மடந்நை அணியில் திகழ்வதுஒன்று உண்டு Something shines through her jewelled charm Like thread shining through wreathed gem முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு Like scent in bud secrets conceal In the bosom of her half smile செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து The close-bangled belle's hidden thought Has a cure for my troubled heart பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து His over-kind close embrace sooths; But makes me feel, loveless, he parts தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை Quick, my bracelets read before The mind of my lord of cool shore நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து My lover parted but yesterday; With sallowness it is seventh day தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள்செய் தது She views her armlets, her tender arms And then her feet; these are her norms பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு To express love-pangs by eyes and pray Is womanhood's womanly way புணர்ச்சிவிதும்பல் - Longing for reunion உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு Rapture at thought and joy when seen Belong to love and not to wine தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் When passion grows palmyra-tall Sulking is wrong though millet-small பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண் Though slighting me he acts his will My restless eyes would see him still ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு Huff I would, maid, but I forget; And leap to embrace him direct எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து When close I see not lord's blemish Like eyes that see not painter's brush காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை When he's with me I see not fault And nought but fault when he is not உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து To leap in stream which carries off When lord is close to feign a huff இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு Like wine to addicts that does disgrace Your breast, O thief, is for my embrace! மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் Flower-soft is love; a few alone Know its delicacy so fine கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று She feigned dislike awhile but flew Faster for embrace than I do நெஞ்சொடுபுலத்தல் - Chiding the heart அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது You see, his heart is his alone; Why not my heart be all my own? உறாஅ தவர்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு O heart, you see how he slights me Yet you clasp him as if friendly கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல் You follow him at will Is it "The fallen have no friends" my heart? இனிஅன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று You won't sulk first and then submit Who will then consult you, my heart? பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு My itching mind eats me anon As I muse on him all alone நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு forget shame but not his thought In mean foolish mind I'm caught எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு My heart living in love of him Hails his glory ignoring blame துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி Who support a man in grief If lover's heart denies relief? தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி Why wonder if strangers disown When one's own heart is not his own? -- புலவி - Bouderic புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது Feign sulk; embrace him not so that We can see his distress a bit உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் Sulking is the salt of love; but Too much of it spoils the taste அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று To comfort not lady in pout Is to cut the fading plant at root நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணா ரகத்து Pouting of flower-eyed has To pure good mates a lovely grace துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவது தன்றுகொல் என்று "Will union take place soon or late?" In lover's pout this leaves a doubt நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி What's the good of grieving lament When concious lover is not present? நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது Water delights in a shady grove And sulking in souls of psychic love ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா My heart athirst would still unite With her who me in sulking left! -------- புலவிநுணுக்கம் - Feigned anger பெண்ணியலார் எல்லோரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரந்தநின் மார்பு I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து He sneezed while we went on sulking Expecting me to say "live long" கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று "For which lady?" she widely cries While I adorn myself with flowers யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று "I love you more than all" I said "Than whom, than whom?" she sulked and chid இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள் "In this life we won't part" I told Her eyes at once with tears were filled உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள் I said "I thought of you" She left Her embrace crying "Oft you forget" வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று I sneezed; she blessed; then changed and wept "You sneezed now at which lady's thought?" தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று I repressed sneeze; she wept crying "Your thoughts from me you are hiding" தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று I try to coax her and she remarks "Your coaxing others thus this marks" நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று I think and gaze at her; she chides: "On whom your thought just now abides?" -- ஊடலுவகை - Sulking charm இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு He is flawless; but I do pout So that his loving ways show out ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும் Fading first, love blooms and outlives The petty pricks that pouting gives புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து Is there a heaven like sulk beneath Of hearts that join like water and earth? புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை In long pout after embrace sweet A weapon is up to break my heart தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலி னாங்கொன்று உடைத்து Though free form faults, one feels the charms Of feigned release from lover's arms உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது Sweeter than meal is digestion And sulk in love than union ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும் The yielder wins in lover's pout Reunited joy brings it out ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு Shall not our pouting again give The dew-browed joy of joint love? ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா Sulk on O belle of shining jewels! Prolong O night! our delight swells! ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் Bouderie is lovers' delight Its delight grows when they unite