Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
Poem No
string
Poem Text
string
Explanation
string
0
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
நூல்
1
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல்.
மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டே. இதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன. எனவே தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.
2
சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ள படி.
பட்டறிவு கண்டு வைத்துள்ளபடியும், நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால், இந்த உலகில் இருப்பவை இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை. இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர் ஆவர். அவர்கள் உயர்ந்த சாதி. கொடுக்காதவர்கள் தாழ்ந்த சாதி.
3
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு.
இந்த உடம்பே துன்பத்துக்கெல்லாம் பெரும் துன்பமாக இருக்கிறது அல்லவா?. இது பொய்யான உடம்புதானே. இதனை மெய் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாமா? கூடாது. ஊழ்தான் இதனை இட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நல்லூழ் இருந்தால் இது நன்றாக இருக்கும். இதற்கு ஊழே பெரிய வலிமை. நோய் இந்த உடம்பிற்கு இடும்பை. இதனை விளங்கிக்கொண்டு வாழ்வதுதான் வ...
4
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு.
எண்ணி ஒரு செயலை யாராலும் செய்துமுடிக்க இயலாது. செய்துமுடிக்கும் செயலெல்லாம் அவன் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது. கண் தெரியாத ஒருவன் தன் கையிலிருந்த தடியை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும். அது அவனுக்கு ஆகும் காலம். ஆகு ஊழால் தோன்றும் அசைவு இன்மை, கைப்பொருள் போகு ஊழால் தோன்றும் மடி - திருக்குறள்
5
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில்.
வருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்குச் சேரவேண்டியவை அல்லாதன நமக்கு வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் போவதும் இல்லை. அப்படி இருக்கும்போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கத்தோடு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி நெடுந்தூரம் திட்டமிட்டுக்கொண்டிருந்து சாவதே மாந்தரின் தொழிலாக...
6
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக் கடல் ஓடி மீண்டு கரையேறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு.
ஒருவருக்கென்று உள்ளது அவரது உடல், உயிர், இவற்றில் முளையாக ஊறிக்கிடக்கும் ஊழ் ஆகியவற்றை அன்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளத்தக்க சுகம் வேறொன்றும் இல்லை. வெள்ளத்திலோ, கடலிலோ ஓடியோ, இழுத்துச் சென்றோ மீண்டு வரையேறினாலும் அவரவர் உடலில்தான் சுகம் காணமுடியும். ஆண் பெண் உறவில்கூடத் தருவது மற்றொருவராயினும் சுகம் காண்பது அவரவ...
7
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல் பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.
எல்லாப் படியாலும் எண்ணினால்இவ் உடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை, நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்க மலம் நீர் போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு இப்படி அப்படி எப்படி என்று எல்லாப் படியாலும் எண்ணினால், இந்த உடம்பானது பொல்லாப் புழு மலிந்திருக்கும் நோய் ஆகும். நல்லவர்கள் இதனை அறிந்துகொண்டிருப்பர்...
8
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்.
பொருள் ஈட்டும் முயற்சி கணக்கில் அடங்காத பலவாயினும் கைக்கூடுவது ஊழின் அளவே நிகழும். அதற்கு மேல் செல்வம் சேராது. தேடிய செல்வத்தால் மரியாதை காணும் மகிமை பொருந்திய உலக மக்களே! இதனைக் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் செல்வமும் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை.
9
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து.
ஆற்றில் வரும் மழைவெள்ளத்தின் வரத்து அற்றுப்போயிற்று. ஆற்று மணல் நடப்பவரின் காலடியைச் சுடுகிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஊற்று வெள்ளம் வந்து உலகுக்கு நீரை ஊட்டும். நல்ல குடியில் பிறந்த மேன்மக்களும் அப்படித்தான். தம் செல்வத்தை இழந்து வறுமையில் வாடினாலும் மனம் ஒப்பி இல்லை என்று சொல்லமாட்டார்கள்.
10
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம் "நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும் எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.
இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், இறந்தவரின் நினைவுநாள் ஆண்டு அண்டு தோறும் வரும்போதெல்லாம் இறந்தவரை நினைத்துக்கொண்டு அழுது அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாயிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத்...
11
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது.
என் வயிறே! இன்று உணவு கிடைக்கவில்லை. இன்று ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடாமல் இரு என்று சொன்னால் இருக்கமாட்டேன் என்கிறாய். வயிற்றுப் பசி கிள்ளுகிறது. இன்று நிறைய உணவு கிடைத்திருக்கிறது. இரண்டு நாளைக்குச் சாப்பிட்டுகொள் என்று சொன்னாலும் சாப்பிடமாட்டேன் என்கிறாய். உணவுக்காக நான் போராடும் துன்பம் உணவுக்குத் தெரியவில்லை. உடம...
12
ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம் உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.
ஆற்றங்கரையில் ஆற்றுநீரை உண்டுகொண்டு வளமோடு இருந்த மரமும் ஒருநாள் விழுந்துவிடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒருநாள் விழுந்துவிடும். பின் எதுதான் விழாது என்கிறீர்களா? உழுது, அதன் விளைச்சலை உண்டு வாழ்தலே ஏற்றம். பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்தப் பணியாக இருந்த...
13
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்? மெய் அம்புவி அதன் மேல்.
நன்மை அடைபவரை யாரால் அழிக்கமுடியும்? சாவாரை யாரால் தடுக்கமுடியும்? பிச்சை எடுப்பவரை யாரால் விலக்கமுடியும்? உலகில் இவை நிகழத்தான் செய்யும். ஓவாமல் = சளைக்காமல்.
14
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால் இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை சால உறும்.
பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் கா...
15
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம் இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்.
சிவாயநம என்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை. மகிழ்வாக வாழ்வதற்கு உரிய தந்திர மந்திரம் இதுதான். இதுவே நமது அறிவு கண்ட மதியாக இருக்கவேண்டும். அல்லாத அறிவின் மதிப்பீடு எல்லாம் விதியால் நமக்குக் கிடைத்தவை.
16
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால் கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி.
உலகில் பல அற்புதங்கள். வியப்பு. தண்ணீரின் இருப்பும் சுவையும் நிலத்தில் நலத்தன்மையால் அமைகிறது. கொடைக்குணம் படைத்தோரைத் தக்கோர் என்கிறோம். கண்ணுக்கு நீர்மை என்னும் நன்னெறி கருணை காட்டுவதால் வெளிப்படுகிறது. பெண்ணுக்கு நீர்மை என்னும் நன்னெறி கற்பு அழியாமல் இருக்கும் அவளது ஆற்றலால் அமைகிறது. வையத்துக்குப் பாதுகாப்பு க...
17
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும் பானை பொங்குமோ மேல்!
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல் வெறும் பானை பொங்குமோ? (உலையில் அரிசி போட்டு அடுப்பு எரித்தால்தானே சோறு பொங்கும்.) அதுபோல, முன்பு கொடுத்து வைத்திருந்தால்தானே இன்று செல்வம் நமக்குத் திரும்ப வந்து சேறும். பாவம...
18
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே சரணம் கொடுத்தாலும் தாம்.
தாய்தந்தையர், உடன்பிறந்தவர், உறவினர்கள், வேண்டியவர் என்று யாராய் இருந்தாலும், இந்தப் பெருலகில் பெருமை மிக்க நாட்டில் வாழ்பவர் ஆயினும், நச்சரித்து வற்புறுத்தினால்தான் கொடுப்பார்கள். வணங்குக் கேட்டால் தரமாட்டார்கள். இரணம் – ரணம் = காயம், உதைத்தால் கிடைக்கும். கெஞ்சினால் கிடைக்காது. கொடை வன்முறையால் பெறலாம் என்பது ஒரு...
19
சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்.
பாழாப் போன உடம்பைப் பாதுகாப்பதற்காக, வயிற்றுப்பசிக் கொடுமைக்கு நாள்தோறும் ஒரு படி அரிசி வேண்டும். அதற்காக யார்யாருக்கோ கும்பிடு போடுகிறோம். யார்யாரிடமோ சென்று கெஞ்சிப் பிச்சை வாங்குகிறோம். கடல் கடந்து சென்று பாவனைத் தொழில் புரிகிறோம். யார்யாரையோ பாராட்டுகிறோம். பாட்டுப் பாடுகிறோம். – அந்தோ! எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்...
20
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும் கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி வறுமைக்கு வித்தாய் விடும்.
அம்மி துணையாக ஆறு இழிந்த ஆறு ஒக்கும் கொம்மைமுலை பகர்வார்க் கொண்டாட்டம் இம்மை மறுமைக்கும் நன்று அன்று. மா நிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். (ஓடத்தில் ஏறி ஆற்றைக் கடக்க வேண்டும்) அதை விடுத்து, கல்லில் செய்த அம்மிமீது ஏறி ஆற்றைக் கடப்பது போல, முலையை ஏலம் போட்டு விற்கும் பெண்களைக் கொண்டாடித் துய்க்கும் இன்பம் இவ்...
21
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும் பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும் சிவந்த தாமரையாள் தான்.
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வெயிலில் வருந்துபவர்க்கு நீரோடு கூடிய நிழல். நிலமெல்லாம் கட்டுக்கட்டாக நெல், போற்றும் நல்ல பெயர், புகழ், பெருமையுடன் வாழும் வாழ்வு, நல்ல மக்களை உடைய ஊர், வளரும் செல்வம், ஆகியவற்றை நெஞ்சில் வஞ்சம் இல்லாதவருக்கு வழங்குவாள்.
22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?
பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யா...
23
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை.
பொதுமக்கள் கூடியிருக்கும் மன்றத்தில் நடுவு நிலைமையோடு (நடுநிலையோடு) சாட்சியோ (கரி), தீர்ப்போ கூறவேண்டும். அப்படிக் கூறாமல் வாதாடுவோரில் ஒருவர் பக்கம் அவரது நன்மையை மட்டும் கருத்தில் கொண்டோ, செல்வாக்கைக் கருதி அவரிடம் அச்சம் கொண்டோ ஓரவஞ்சனையாக எதுவும் சொல்லக்கூடாது. இப்படி ஓரம் சொன்னால், அவர் வீட்டில், அச்சுறுத்தும் ஆ...
24
நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே மடக்கொடி இல்லா மனை.
திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே) மனைவி இல்லாத மனை பாழ். பாழ் = 0, பாழ் = ஒன்றுமில்லாத வெற்றிடம்.
25
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
தேடி முதலாக வைத்திருக்கும் பொருளை விட அதிகமாக ஒருவன் செலவு செய்தால் என்ன ஆகும். தன்மானம் அழிந்துபோகும். புத்தி கெட்டுச் செயல்படுவான். அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள அனைவர்க்கும் திருடனாகத் தென்படுவான். ஏழு பிறப்பிலும் கொடியவனாக மாறிவிடுவான். எண்ணிப்பார். உண்மை விளங்கும்.
26
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்.
மானம் = தன்மான உணர்வு, குலம் = குலப்பெருமை பற்றிய சிந்தனை, கல்வி = கற்ற கல்வியின் திறமை, வண்மை = உடல் வளம், அறிவுடைமை = எண்ணிப் பார்க்கும் அறிவு, தானம் = கொடை வழங்கும் வள்ளல் தன்மை, தவம் = தவம் செய்யும் அறநெறி, உயர்ச்சி = உயர்வு பற்றிய எண்ணம், தாளாண்மை = செயலாற்ற முயலுதல், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறு...
27
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்.
ஒன்றைப் பெறவேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது, அது வந்து சேராமல் மற்றொன்று நம்மிடம் வந்து சேர்வதும் உண்டு. அதுவன்றி, நினைத்த செயலே கைகூடி வருதலும் உண்டு. ஒன்று கைகூடி வரவேண்டும் என்று நினையாதபோதே தானே அதுவாகவே முன்வந்து நிற்றலும் உண்டு. அனைத்தும் எனை ஆளும் ஈசன் செயல். என்னால் ஒன்றும் இல்லை.
28
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்.
உண்பது நாள் ஒன்றுக்கு ஒரு நாழி அளவு தானியத்தால் சமைத்த உணவு. இடையில் அற்றம் மறைக்க ஒருவர் உடுத்திக் கொள்வது நான்குமுழத் துணி. என்னுவன எண்பது கோடி நினைவுகள். கண் புதைந்துபோயிருக்கும் மாந்தர்கள் நாம். நாம் குடும்பம் நடத்துகிறோமே அந்தக் குடிவாழ்க்கையானது, மண்ணால் செய்த பாண்டம் போன்றது. (நம் உடம்பும் மண்ணால் செய்த பாண்...
29
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர்.
மரம் பழுத்தவுடன் வௌவாலை “வா” என்று கெஞ்சிக் கேட்டு அழைப்பார் யாரும் அந்த மரத்தடியில் இருப்பதில்லை. (வௌவால் தானே தேடிக்கொண்டு வந்துவிடும்). கன்றை உடைய பசு தன் கன்றுக்கும் கறப்பவர்க்கும் பால் அமுதத்தைச் சுரந்து வழங்கும். அதுபோல ஒருவர் தன்னிடம் உள்ள பொருளை தனக்கென்று ஒளித்து வைத்துக்கொள்ளாமல் வழங்குவாரேயானால் உலகத்தில் உள...
30
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி.
அவரவர் முன் செய்த வினையை அவரவரே பின்னர் அனுபவிப்பர். இது தலைவிதி. தலைவிதி என்பது தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமன் அவரவர் தலையில் பொறித்து வைத்திருக்கும் விதி. வேந்தே! உன்னை ஒருவன் தண்டித்தால் அதற்காக அவனை என்ன செய்வது? உன் தலைவிதி அப்படி இருக்கிறதே. ஒருவனுக்கு இது நேரக்கூடாது என்று ஊரெல்லாம் கூடி வெறுத்தாலும் அவன் த...
31
இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி.
மொழியிலும், நெறியிலும் வழுக்கி விழும் பாட்டை அதற்குப் போடப்பட்டுள்ள இசை நல்ல பாட்டாகக் காட்டிவிடும். மிகுதியும் ஒழுக்கம் உடையவராக வாழ்தல் உயர்குலப் பிறப்பை விட மேலானது. தயங்கும் வீரத்தை விட நோய் பற்றிக்கொண்டிருக்கும் உடம்பு மேலானது. குடும்பத்துக்கு வரும் பழியைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்துகொள்ளும் மனைவியோடு வாழ்வதை ...
32
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து.
ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் ஆற்றில் இருக்கும் மணல்-மேடும், நீர் தேங்கி நிற்கும் மடுவும் இடம் மாறுவது உண்டு. அதுபோல, உலக மக்களே! எண்ணிப்பாருங்கள். தரும் தருமத்தைச் செய்திருந்தால் அந்தத் தருமச் செயல் நமக்குச் சோறு போடும். தருமம் செய்யாவிட்டால் சோறு இல்லாமல் தண்ணீரைத் தான் உண்ணவேண்டி வரும். தருமம் செய்வதால் உள்ளத...
33
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.
வெட்டும் கருவிகள் மெத்து மெத்து என்று இருக்கும் பொருள்களை வெட்டி வெல்ல முடியாது. மிகப் பெரிய ஆண்யானைமீது ஊடுருவிச் செல்லும் ஈட்டிக்கோல் பஞ்சில் பாயாது. நீண்ட இரும்பாலான கடப்பாரைக்கு நெக்கு விடாத கல்லுப் பாறை பச்சை மரத்து வேர் இறங்கும்போது நெக்கு விட்டுப் பிளந்துவிடும். (மென்சொல்லை வன்சொல் வெல்ல முடியாது) (மென்சொல் ...
34
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல்.
கையிலே பொருள் வைத்திருப்பவன் ஆயின், அவன் கல்வி அறிவு இல்லாதவன் ஆனாலும், அவன் வரும்போது அவனிடம் எல்லாரும் சென்று எதிர்கொண்டு வரவேற்பர். கையில் பொருள் இல்லாத ஏழையாக வாழ்ந்தால், அவனை மனைவியும் விரும்பமாட்டாள்; பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் செல்லாக் காசுகள் ஆகிவிடும்.
35
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
பூ பூக்காமலேயே காய் காய்க்கும் மரங்களும் உள்ளன. அதுபோல பெற்றெடுத்த பிள்ளைகளுக்குள்ளேயும் தாய் தந்தையர் ஏவாமல் அவர்களின் குறிப்பினை அறிந்து நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர். (பொதுவாழ்வில், பிறர் குறிப்பறிந்து நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர்) தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உண்டு. அதுபோல, நன்கு எடுத்துச் சொன்னாலும...
36
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம்.
தாய் போட்ட குட்டி நண்டுகள் தாயைத் தின்று வளரும். கிளிஞ்சில் சிப்பிகள் உடைந்த பின்பே அவற்றின் வயிற்றிலிருந்து முத்துக்கள் பிறக்கும். மூங்கில்கள் நெல் விளைந்த பின் வெடித்துச் சிதறும் காலத்தில் அவற்றின் வேர்களில் முளைகள் தோன்றி வளரும். தாய் வாழை நாசமடையும் காலத்தில் வாழைக்கன்றுகள் முளைக்கும். அதுபோல அறிவு, செல்வம், ...
37
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி.
செய்த வினையின் பயனை அனுபவிக்காமல் இருப்பதற்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்டால், இல்லை என்பதுதான் விடை. வேதம் முதலான அனைத்து நோல்களிலும் இல்லை என்பது அறுதி இட்ட விடை. நெஞ்சே! நீ வினை வலிமையை வெல்ல நினைத்துப் பார்த்துக் கணித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். அவ்வளவுதான். நற்செயல் புரிந்து விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின...
38
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள்.
பற்றற்ற இல்லறத் துறவி நீத்தாரும், துறவறத் துறவியும் மனம் போன பக்கமெல்லாம் மெய்பொருளைத் தேடிக்கொள்வர். அப்படி அவர்கள் தேடிக்கொள்ளும் மெய்பொருளுக்குத் நன்று என்று ஒன்று இல்லை. தீது என்று ஒன்று இல்லை. நான் என்னும் தன்முனைப்பு ஒன்று இல்லை. “தான்” என்று தெய்வத்தைக் காணும் தனி நினைவு ஒன்று இல்லை. அது சரியில்லை என்று ஒன்...
39
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு.
தலைதூக்கி நின்ற காமம், வெகுளி, மயக்கம் மூன்றும் 30 ஆம் ஆண்டு அளவில் அற்றுப்போக வேண்டும். நோன்பு என்னும் ஒரு பொருளைத் தவற விடாமல் தனக்குள் இருக்கும்படி பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பெறாவிட்டால் தான் கற்ற கலை அளவினதாக வாழ்க்கை அமைந்துவிடும். கண்ணுக்கு இனிய பெண்களின் முலையைத் துய்க்கும் அளவுதானே ஒருவனது மூப்பு நிற்...
40
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்று உணர்.
திருவள்ளுவத் தேவர் இயற்றிய திருக்குறளும், திரு நான்மறை எனப் போற்றப்படும், ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களின் முடிபும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாமே ஒரே கருத்தைத்தா...

Dataset Card for Nalvazhi (நல்வழி)

Summary

Nalvazhi (நல்வழி), meaning "The Good Path," is a seminal work of Tamil ethical literature composed by the poetess Avvaiyar. The text consists of 41 Venpa verses providing guidance on virtue, karma, and the transient nature of life. This dataset pairs the original classical Tamil poetic stanzas with modern Tamil prose explanations.


Dataset Structure

The dataset is organized as a collection of literary pairings. Each entry represents a specific stanza and its corresponding interpretation.

Data Fields

  • verse_no: (Integer) The index of the poem (0 for Preface, 1–40 for main text).
  • verse_text: (String) The original 4-line Venpa verse in Tamil.
  • explanation: (String) Modern Tamil prose explaining the moral and meaning of the verse.

Data Example

field value
verse_no 1
verse_text புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை...
explanation மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டே...

Dataset Creation

Curation Rationale

This dataset was curated to bridge the gap between Senthamizh (Classical Tamil) and Koduntamil (Modern Tamil). It is designed for:

  1. Fine-tuning LLMs for low-resource classical language understanding.
  2. Poetry-to-Prose Translation: Training models to simplify complex poetic structures.
  3. Sentiment & Ethical Analysis: Mapping ancient ethical frameworks to modern contexts.

Source Data

The text is sourced from public domain classical Tamil literary archives, specifically focused on the works of medieval Avvaiyar.


About the Author: Avvaiyar

Avvaiyar is one of the most celebrated figures in Tamil history. She is known for her ability to condense profound philosophical truths into simple, rhythmic verses. Her works, including Aathichoodi and Konrai Venthan, remain a core part of the Tamil school curriculum to this day.

Citation

If you use this dataset in your research or applications, please cite the literary origin:

Title: Nalvazhi (நல்வழி)
Original Author: Avvaiyar (ஔவையார்)
Dataset Format: Tamil Poetry-Prose Parallel Corpus

Downloads last month
16