text
stringlengths
5
8k
metadata
dict
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல் ***இங்கு தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்கு மற்ற விக்கிப்பீடியர்கள் பதில் அளிப்பார்கள். தகுந்த ஆலோசனைகளை உடனே செயற்படுத்தவும் செய்வோம். விக்கிப்பீடியா திட்டத்தின் வளர்ச்சி, மேலாண்மை குறித்த க...
{ "Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல் ## முந்தைய கலந்துரையாடல்கள் - **தொகுப்பு 01** (மயூரநாதனின் முதற் குறிப்பு!, தமிழ் விக்கிப்பீடியா 1000 கட்டுரைகள்.) - **தொகுப்பு 02** மிகவும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள்
{ "Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்", "Header 2": "முந்தைய கலந்துரையாடல்கள்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல் ## பயனர் கருத்துகள் உங்கள் கருத்துகளை இதன் கீழ் இடவும். கையெழுத்து இடப் பார்க்கவும்: விக்கிப்பீடியா:கையெழுத்து First time I saw the Tamil version of Wikimedia site. It's great...keep it up. Unfortunately I don't know how to use the tamil font here. All the best. --Drvelmuruan (பேச்சு)...
{ "Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்", "Header 2": "பயனர் கருத்துகள்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல் ## பகுப்புத் தலைப்புகள் - கரையோர வேடர்கள் என்னும் கட்டுரைக்கு, கரையோர வேடர்கள் என்னும் பகுப்புத் தலைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதனை உருவாக்கிய அறிஞரே காட்டியிருந்த இலங்கைத் தமிழர் என்னும் பகுப்புத் தலைப்புக்கு உட்படுத்தியிருக்கிறேன். தெரிந்திருந்தும் பழைய பகுப்பில் சேர்க்காமல் புதுப்ப...
{ "Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்", "Header 2": "பகுப்புத் தலைப்புகள்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல் ## மலேசியாவின் மலாய்ப் பெயர்கள் வணக்கம். மலேசியாவில் மாநிலங்கள், நகரங்களின் பெயர்களை மலாய் மொழியில் எப்படி அழைக்கிறார்களோ, அப்படி அழைப்பதுதான் நல்லது. Penang என்பதை பினாங்கு என்று அழைப்பதைப் போல Pahang என்பதை பகாங்கு என்று அழைக்கமாட்டார்கள். Perak என்பதை பேராக்கு என்று அழைப்பது இல்லை. K...
{ "Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்", "Header 2": "மலேசியாவின் மலாய்ப் பெயர்கள்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல் ## மலேசியப் பெயர்கள் வணக்கம், திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.சண்முகம், திரு.கனகு அவர்களுக்கு, தங்களின் கருத்துகள் ஒரு தாக்கத்தின் தீர்வைச் சரி செய்கின்றன. அதையும் தாண்டி ஓர் ஏக்கத்தின் பார்வையை மிஞ்சுகின்றன. நன்றி சகோதரர்களே. நம்முடைய விக்கிப்பீடியா நல்லபடியாக அமைய, என்னால் இயன்ற உதவிகளைச...
{ "Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்", "Header 2": "மலேசியப் பெயர்கள்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் விக்கிப்பீடியா, அதன் வாசகர்களால் ஒருமித்து எழுதப்படுகின்ற ஓர் இலவசக் கலைக்களஞ்சியம் ஆகும். **நீங்கள்** உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் **தொகு** இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும்.
{ "Header 1": "விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் ## விக்கிப்பீடியாவில் உலாவுதல் விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு 2003இல் தான் தொடங்கப்பட்டுள்ளது எனினும், ஆங்கிலத்திலும் ஏனைய பல மொழிகளிலும், பல்வேறு துறைகளையும் சார்ந்த ஏராளமான தகவல்களை, விக்கிப்பீடியா ஏற்கெனவே கொண்டுள்ளது. நீங்கள் தெரிவு செய்த மொழியில் அதன் முதற் பக்கம் சென்று,...
{ "Header 1": "விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்", "Header 2": "விக்கிப்பீடியாவில் உலாவுதல்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் ## தொகுத்தல் ஒவ்வொருவரும் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களைத் தொகுக்கமுடியும் (இந்தப் பக்கத்தையும் கூட). ஏதாவதொரு பக்கத்துக்குத் திருத்தம் தேவை என நீங்கள் கருதினால், அப்பக்கத்தின் மேற்பகுதியில் காணப்படும் **தொகு** இணைப்பைச் சொடுக்குங்கள். சிறப்புத் தகுதிகள் எதுவும் உங்களுக்குத் தேவை...
{ "Header 1": "விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்", "Header 2": "தொகுத்தல்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்பு பார்த்து, நிர்வகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் **விக்கிப்பீடியர்கள்** எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். தற்போது த...
{ "Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் ## முழுத் தன்னியக்க பட்டியல் <big>**பயனர் பட்டியல்**</big>
{ "Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்", "Header 2": "முழுத் தன்னியக்க பட்டியல்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் ## நிர்வாகிகள் <big>**விக்கிப்பீடியா:நிர்வாகிகள்**</big>
{ "Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்", "Header 2": "நிர்வாகிகள்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் ## அதிகாரிகள் <big>**விக்கிப்பீடியா:அதிகாரிகள்**</big>
{ "Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்", "Header 2": "அதிகாரிகள்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் ## நகரங்கள் வாரியாக <big>விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்</big>
{ "Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்", "Header 2": "நகரங்கள் வாரியாக", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் ## வேறு பட்டியல்கள் எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்! - நாடுவாரியான பட்டியல் - ஆர்வமுள்ள களம்வாரியாக - அமைப்புவ...
{ "Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்", "Header 2": "வேறு பட்டியல்கள்", "Header 3": null, "Header 4": null }
# கட்டடக்கலை சிறந்த மற்றும் மிகவும் நுட்பமான எடுத்துக்காட்டாக விளங்கும் தாஜ் மஹால்.]] **கட்டடக்கலை** என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக ...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# கட்டடக்கலை ## கட்டடக்கலைக் கோட்பாடுகள் , ரோம், இத்தாலி]] லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்", "Header 3": null, "Header 4": null }
# கட்டடக்கலை ## கட்டடக்கலைக் கோட்பாடுகள் ### கட்டடங்களும், கட்டடக்கலையும் , மட்ரிட், வேண்டுமென்றே சாய்வாகக் கட்டப்பட்ட கட்டடம்]] ஒரு கட்டடக்கலை சார்ந்த கட்டடத்துக்கும், சாதாரண கட்டடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரான ...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்", "Header 3": "கட்டடங்களும், கட்டடக்கலையும்", "Header 4": null }
# கட்டடக்கலை ## கட்டடக்கலைக் கோட்பாடுகள் ### கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள் 19-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே ...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்", "Header 3": "கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள்", "Header 4": null }
# கட்டடக்கலை ## கட்டடக்கலைக் கோட்பாடுகள் ### கட்டடக்கலைஞர்களும் கோட்பாடும் பல கட்டடக்கலைஞர்கள் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளினாலும், செயல்முறையை (practice) வளம்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. விட்ருவியஸ் தொடர்ந்து சொன்னபடி, "செய்முறையும், கோட்பாடும் கட்டடக்கலையின் பெற்றோருக்குச் சமம். செ...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்", "Header 3": "கட்டடக்கலைஞர்களும் கோட்பாடும்", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### தொல்பழங்காலமும் கட்டடக்கலையும் , ஹம்பி, இந்தியா]] கட்டடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டடங்கள் இ...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "தொல்பழங்காலமும் கட்டடக்கலையும்", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை கட்டடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் க...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### மெசொப்பொத்தேமியக் கட்டடக்கலை தற்கால ஈராக்கிலுள்ள யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதியில் செழித்து வளர்ந்த மெசொப்பொத்தேமிய நாகரிகம், உலகக் கட்டடக்கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்த இன்னொரு தொன்மையான ஆசிய நாகரிகம் ஆகும். மெசொப்பொத்தேமிய ஆற்றுப்படுக்கையிலும்,...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "மெசொப்பொத்தேமியக் கட்டடக்கலை", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### பண்டைய கிரேக்க கட்டடக்கலை பண்டைக் கிரேக்க நாகரிகம் பொ.ஊ.மு. 1900 தொடக்கம் பொ.ஊ.மு. 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். ...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "பண்டைய கிரேக்க கட்டடக்கலை", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### பண்டைய ரோமக் கட்டடக்கலை ரோமர் காலம் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவு...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "பண்டைய ரோமக் கட்டடக்கலை", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும் , ஆக்ரா, இந்தியா]] "ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலகட்டத் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டடக்கலைத்துறையில் புதிய அத்திய...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும்", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### நவீனத்துவமும் கட்டடக்கலையும் , நியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா]] இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த த...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "நவீனத்துவமும் கட்டடக்கலையும்", "Header 4": null }
# கட்டடக்கலை ## வரலாறு ### கட்டடக்கலை இன்று ,அட்ஸனால் வடிவமைக்கப்பட்டது.]] கட்டடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டடக்கலைஞர்கள் தங்கள் ...
{ "Header 1": "கட்டடக்கலை", "Header 2": "வரலாறு", "Header 3": "கட்டடக்கலை இன்று", "Header 4": null }
# கட்டிடங்களின் பட்டியல் பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்: - 1 கனடா சதுக்கம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் - 191 பீச்ட்றீ கோபுரம், அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் - 30 சென் மேரி அக்ஸ், இலண்டன் - 8 கனடா சதுக்கம், இலண்டன் - அல் அக்சா மசூதி, ஜெரூசலம் - அஸ்ரீலி மையம் வட்டக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரே...
{ "Header 1": "கட்டிடங்களின் பட்டியல்", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# கட்டடக் கலைஞர் ஒரு **கட்டிடக்கலைஞன்** அல்லது **கட்டிடச்சிற்பி** (*Architect*) என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாக...
{ "Header 1": "கட்டடக் கலைஞர்", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# கட்டடக் கலைஞர் ## குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள் இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது.
{ "Header 1": "கட்டடக் கலைஞர்", "Header 2": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# கட்டடக் கலைஞர் ## கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்: - பாஹாவுஸ் (*Bauhaus*), ஜெர்மனி - இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (*Ecole des Beaux Arts*), பாரிஸ்
{ "Header 1": "கட்டடக் கலைஞர்", "Header 2": "கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:", "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ### முற்காலக் கட்டிடக்கலைஞர்கள் - மார்க்கஸ் அக்ரிப்பா - ட்ரலசிய அந்தேமியஸ் (Anthemius of Tralles) - இம்ஹோடெப் (Imhotep) - இக்டினொஸ் (Iktinos) - மிலெட்டஸ் இசிடோர் (Isidore of Miletus) - கல்லிக்கிறேட்டஸ் (Kallikrates) - நெசிக்கிள்ஸ் (Mnesicles) - நிம்ரொட் - விட்ருவியஸ் - வ...
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": null, "Header 3": "முற்காலக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ### பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - ராபர்ட் டி லுஸார்ச்செஸ் - வில்லார்ட் டி ஹொன்னெக்கோர்ட்
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": null, "Header 3": "பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ## பதினைந்தாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - லியொன் பட்டிஸ்டா அல்பர்ட்டி - டொனாட்டோ பிரமண்டே - பிலிப்போ புருனெலெஸ்ச்சி (Filippo Brunelleschi) - லியொனார்டோ டா வின்சி - மிக்கெலொஸ்ஸோ மிக்கெலொஸ்ஸி (Michelozzo Michelozzi)
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": "பதினைந்தாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ## பதினாறாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - கலீஸ்ஸோ அலெஸ்ஸி (Galeazzo Alessi) - பார்த்தொலோமியோ அம்மானத்தி (Bartolomeo Ammanati) - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி - Philibert de l'Orme - அண்ட்ரியா பல்லாடியோ (Andrea Palladio) - அண்டோனியோ சங்கால்லோ - ரஃபாயேலோ சாண்டி (Raffaello S...
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": "பதினாறாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ## பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - கியான் லொரென்ஸோ பெர்னினி ( Gian Lorenzo Bernini) - பிரான்ஸெஸ்கோ பொரோமினி (Francesco Borromini) - பியெட்ரோ டா கொர்தோனா(Pietro da Cortona) - குவாரினோ குவாரினி (Guarino Guarini) - உஸ்தாத் இஸா (Ustad Isa) - இனிகோ ஜோன்ஸ் - கார்லோ ...
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": "பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ## பதினெட்டாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - ராபர்ட் ஆடம் (Robert Adam) - கொஸ்மாஸ் டாமியன் ஆசாம் (Cosmas Damian Asam) - எகிட் குயிரின் ஆசாம் (Egid Quirin Asam) - Étienne-Louis Boullée - வில்லியம் சேம்பர்ஸ் (William Chambers) - கிரிஸ்தோஃப் தியென்சென்ஹோபர் (Christof Die...
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": "பதினெட்டாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ## பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - Dankmar Adler - சர் சார்லஸ் பரி (Charles Barry) - சார்லஸ் பரி (junior) - Edward Middleton Barry - Frederic Auguste Bartholdi - Charles Bulfinch - William Burges - எட்வார்ட் கிளாக் (Edward Clark) - Thomas Cubitt - Pierre Cu...
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": "பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ## இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - அல்வார் ஆல்டோAlvar Aalto - டேவிட் அட்லர்David Adler - கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்Christopher Alexander - Tadao Ando - லூயிஸ் பராகன் (Luis Barragan) - Frederic Bereder - Henrik Petrus Berlage - Gottfried Boehm - ரிக்காடோ போவில் (R...
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": "இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ## இருபத்தோராம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் - Richard Nash Gould - Steven Holl - Daniel Libeskind
{ "Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்", "Header 2": "இருபத்தோராம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்", "Header 3": null, "Header 4": null }
# புவியியல் **புவியியல்** என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படு...
{ "Header 1": "புவியியல்", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# புவியியல் ## அறிமுகம் முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "அறிமுகம்", "Header 3": null, "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் பிரிவுகள் ### இயற்கைப் புவியியல் இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (*layout*), கற்கோளம் (*lithosphere*), நீர்க்கோளம் (*hydrosphere*), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் பிரிவுகள்", "Header 3": "இயற்கைப் புவியியல்", "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் பிரிவுகள் ### மானிடப் புவியியல் **மானிடப் புவியியல்** என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (*patterns*), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, ...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் பிரிவுகள்", "Header 3": "மானிடப் புவியியல்", "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் பிரிவுகள் ### சூழற் புவியியல் சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவ...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் பிரிவுகள்", "Header 3": "சூழற் புவியியல்", "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் பிரிவுகள் ### புவித்தகவற்கணியவியல் புவித்தகவற்கணியவியல் (*Geomatics*) என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கண...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் பிரிவுகள்", "Header 3": "புவித்தகவற்கணியவியல்", "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் பிரிவுகள் ### மண்டலப் புவியியல் பிரதேசப் புவியியல் (*Regional geography*), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட,...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் பிரிவுகள்", "Header 3": "மண்டலப் புவியியல்", "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் பிரிவுகள் ### தொடர்புள்ள துறைகள் - நகரத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், இடஞ்சார் திட்டமிடல் ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புக்கள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் பிரிவுகள்", "Header 3": "தொடர்புள்ள துறைகள்", "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் பிரிவுகள் ### கோள் அறிவியல்கள் புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் பிரிவுகள்", "Header 3": "கோள் அறிவியல்கள்", "Header 4": null }
# புவியியல் ## புவியியலின் வரலாறு மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியலின் வரலாறு", "Header 3": null, "Header 4": null }
# புவியியல் ## புவியியல் நுட்பங்கள் இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (*maps*) இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறை...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியல் நுட்பங்கள்", "Header 3": null, "Header 4": null }
# புவியியல் ## புவியியல் கல்வி ### தமிழக மாணவர்களுக்கான புதிய முறை தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அம...
{ "Header 1": "புவியியல்", "Header 2": "புவியியல் கல்வி", "Header 3": "தமிழக மாணவர்களுக்கான புதிய முறை", "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம் வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும...
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## அ <small> 1. **** 1. **** (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "அ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஆ 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஆ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## இ 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "இ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஈ 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஈ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## உ 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "உ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## எ 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "எ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஐ 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஐ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஒ 1. ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும்.
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஒ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஓ 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஓ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## க 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** (முன்னர் *ஸயர்*) 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****<sup>2</sup> 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "க", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ச 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****<sup>1</sup> (*தாய்வான்*) 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ச", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ட 1. ட்ரினிடாட்டும் டொபாகோவும் 1. **** 1. டொங்கா 1. டொமினிக்கா 1. டொமினிகன் குடியரசு 1. டோகோ
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ட", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## த 1. **** 1. தாய்வான் (பார் சீனக் குடியரசு<sup>1</sup>) 1. தான்ஸானியா 1. தாஜிக்ஸ்தான் 1. திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்) 1. **** 1. துருக்மெனிஸ்தான் 1. துவாலு 1. துனீசியா 1. தென் கொரியா 1. தென்னாபிரிக்கா
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "த", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ந 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****<sup>2</sup> 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ந", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ப 1. **** 1. பர்மா (இப்பொழுது மியன்மார்) 1. **** 1. **** 1. **** (பார் மேற்குக் கரை) 1. **** <sup>3</sup> 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1....
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ப", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ம 1. **** 1. ****<sup>6</sup> 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா) 1. ****<sup>5</sup> 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ம", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ய 1. யேமன் 1. யப்பான்
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ய", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ர 1. ரஷ்யா 1. ருமேனியா 1. ருவாண்டா
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ர", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ல 1. **** 1. **** 1. **** 1. **** 1. **** 1. லெய்செஸ்டீன்(Liechtenstein) 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ல", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## வ 1. **** 1. **** 1. **** <sup>4</sup> (*Holy See*) 1. **** 1. **** 1. ****
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "வ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஹ 1. ஹங்கேரி 1. ஹைத்தி 1. ஹொண்டூராஸ்
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஹ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஸ 1. ஸ்பெயின் 1. சிலவாக்கியா 1. சிலவேனியா 1. சாம்பியா 1. ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) 1. ஸிம்பாப்வே
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஸ", "Header 3": null, "Header 4": null }
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ## ஜ 1. ஜமேக்கா 1. ஜிபூட்டி 1. ஜெர்மனி 1. ஜோர்தான் 1. ஜோர்ஜியா </small>
{ "Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)", "Header 2": "ஜ", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு **கிறித்தோபர் கொலம்பசு** (*Christopher Columbus*) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம் கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்ப...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம்", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## இளமைக்காலம் கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி. 1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கி...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "இளமைக்காலம்", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கொலம்பசின் தாய் நாடு கொலம்பசின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். 1470க்கு முன்னரான கொலம்பசின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவ...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கொலம்பசின் தாய் நாடு", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## சிந்தனைத் தோற்றம் 1480-இல், கொலம்பசு மேற்காக அட்லாண்டிக் ஊடாக இண்டீசுவிற்கு (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு (ஆசியா) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக (ஆப்பிரிக்கா) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மி...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "சிந்தனைத் தோற்றம்", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கடற்பயணங்கள் 1492க்கும் 1503க்கும் இடையே கொலம்பசு எசுப்பானிவிலிருந்து நான்கு முறை அமெரிக்காக்களுக்கு பயணித்துள்ளார். இந்த நான்கு பயணங்களுக்கும் காசுட்டில் இராச்சியமே புரவலளித்தது. இவை ஐரோப்பியக் கண்டுபிடிப்பு காலத்திற்கும் அமெரிக்கக் கண்டங்களின் குடிமைப்படுத்தலுக்கும் துவக்கமாக அமைந்தன. எனவே...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கடற்பயணங்கள்", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கடற்பயணங்கள் ### முதல் பயணம் கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கடற்பயணங்கள்", "Header 3": "முதல் பயணம்", "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கடற்பயணங்கள் ### இரண்டாம் பயணம் அவர் தனது இரண்டாம் பயணத்தை (1493–1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும், அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில்,1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார். இந்த முறை அவர் முன்னைவிட தெற்காகச் சென்றார். ம...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கடற்பயணங்கள்", "Header 3": "இரண்டாம் பயணம்", "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கடற்பயணங்கள் ### மூன்றாம் பயணம் மற்றும் கைதுப்படலம் 1498-இல் கொலம்பஸ் மூன்றாம் முறையாக புதிய உலகிற்கு, இளம் பார்த்தலோமி டி லாஸ் காஸாஸ்(இவர் பின்னர் கொலம்பசின் குறிப்புக்களை தந்தவர்) உடன் , கிளம்பினார். இந்த முறை அவர் ட்ரினிடாட் தீவுகளை ஜுலை 31இல் கண்டுபிடித்தார். அத்தோடு தென் அமெரிக்காவின் ...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கடற்பயணங்கள்", "Header 3": "மூன்றாம் பயணம் மற்றும் கைதுப்படலம்", "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கடற்பயணங்கள் ### கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும் கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை 1502-1504-இல்(ஸ்பெயினைவிட்டு மே 9, 1502) மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், தன்னுடைய இளைய மகன் பெர்டினான்டுவையும் கூட்டிக்கொண்டு சென்றார். இப்போது நடு அமெரிக்கா-வின் பெலிஸ்-இலிருந்து பனாமா வரை பயணித்தார். 15...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கடற்பயணங்கள்", "Header 3": "கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும்", "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## பின்னாள் வாழ்க்கை கல்லறை. அவரது பூத உடலை காசுட்டைல், லியோன், அரகோன், நவரே அரசர்கள் தூக்குகின்றனர்.]] மதமாற்றத்தை தனது கடலோடிப் பயணங்களின் ஒரு நோக்கமாக கொலம்பசு மொழிந்திருந்தாலும் தனது பிந்தைய நாட்களிலேயே மிகவும் சமயப்பற்று மிக்கவராக விளங்கினார். தனது மகன் டியாகோ மற்றும் நண்பர் காசுபர் கொர்ரி...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "பின்னாள் வாழ்க்கை", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் கொலம்பசின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி, அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள், ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள்", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் ### கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டடைந்து 400 ஆண்டுகள் ஆன 1892 வாக்கில், கொலம்பசை கொண்டாடும் போக்கு அதன் உச்சத்தை அடைந்தது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அவருடைய உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. தன் ...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள்", "Header 3": "கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன்", "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் ### கொலம்பஸ் - மனித குல எதிரி கொலம்பஸ் ஒரு முரண்பட்ட மனிதர். சிலர், குறிப்பாக அமெரிக்கப் பழங்குடிகள், அவரை அமெரிக்கா மீதான ஐரோப்பாவின் சுரண்டல் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் கொத்தடிமை இவற்றிற்கு நேரடியான அல்லது மறைமுகமான காரணமாகக் கருதுகின்றனர். ...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள்", "Header 3": "கொலம்பஸ் - மனித குல எதிரி", "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## நினைவுக் கொண்டாட்டம் 1492இல் கொலம்பசு அமெரிக்காக்களில் வந்திறங்கிய நாள் அக்டோபர் 12 கனடா தவிர்த்த அனைத்து அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியாவிலும் கொண்டாடப்படுகிறது. எசுப்பானியாவில் இது *பியஸ்டா நாசியோனல் டெ எசுப்பானா யி டியா டெ லா இஸ்பானியட்* எனக் கொண்டாடப்படுகிறது. பல இலத்தீன் அமெரிக்க நாடுக...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "நினைவுக் கொண்டாட்டம்", "Header 3": null, "Header 4": null }
# கிறித்தோபர் கொலம்பசு ## மரபுவழி எச்சம் அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களில் பரவலாக கொலம்பசு "அமெரிக்காவைக் கண்டறிந்தவர்" என்ற கருத்து இருப்பினும் உண்மையில் முதலில் கண்டறிந்தவர்கள் இங்கு பல காலமாக வாழ்ந்திருந்த உள்ளூர் குடிகளாகும். கொலம்பசு முதல் ஐரோப்பியர் கூடக் கிடையாது; வைக்கிங்குகள் தான் முதலில் வந்திறங்கிய ஐரோப்பி...
{ "Header 1": "கிறித்தோபர் கொலம்பசு", "Header 2": "மரபுவழி எச்சம்", "Header 3": null, "Header 4": null }
# விக்கிப்பீடியா:பதிவேற்றப் பதிகை (Upload log)
{ "Header 1": "விக்கிப்பீடியா:பதிவேற்றப் பதிகை (Upload log)", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
<ul><li>14:04, 1 டிச 2004 Sundar பதிவேற்றப்பட்டது "" <em>(&#123;&#123;GFDL}})</em></li> <li>14:03, 1 டிச 2004 Sundar பதிவேற்றப்பட்டது "" <em>(&#123;&#123;GFDL}} ProductionsForThalai)</em></li> <li>17:55, 19 நவ 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>((ட்)ரபல்கர் சதுக்கம்)</em></li> <li>17:38, 19 நவ 2004 Mayooranatha...
{ "Header 1": "விக்கிப்பீடியா:பதிவேற்றப் பதிகை (Upload log)", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
<li>12:25, 8 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(மியன்மார் கொடி)</em></li> <li>12:24, 8 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(மொஸாம்பிக் கொடி)</em></li> <li>12:23, 8 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(மொரோக்கோக் கொடி)</em></li> <li>12:22, 8 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது ...
{ "Header 1": "விக்கிப்பீடியா:பதிவேற்றப் பதிகை (Upload log)", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
<li>11:09, 1 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(சைப்பிரஸ் கொடி)</em></li> <li>11:09, 1 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(கியூபா கொடி)</em></li> <li>11:09, 1 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(குரோசியக் கொடி)</em></li> <li>11:08, 1 ஜூலை 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <e...
{ "Header 1": "விக்கிப்பீடியா:பதிவேற்றப் பதிகை (Upload log)", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
<li>21:17, 28 ஏப் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(Mangos)</em></li> <li>21:16, 28 ஏப் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(Corvus_corone_map)</em></li> <li>21:15, 28 ஏப் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(Citrus_fruits)</em></li> <li>21:13, 28 ஏப் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(...
{ "Header 1": "விக்கிப்பீடியா:பதிவேற்றப் பதிகை (Upload log)", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }
<li>18:41, 7 மார் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(Plato)</em></li> <li>18:40, 7 மார் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(Aristotle)</em></li> <li>18:12, 7 மார் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(Stephen_Hawking_S)</em></li> <li>18:11, 7 மார் 2004 Mayooranathan பதிவேற்றப்பட்டது "" <em>(Steph...
{ "Header 1": "விக்கிப்பீடியா:பதிவேற்றப் பதிகை (Upload log)", "Header 2": null, "Header 3": null, "Header 4": null }